Saturday, June 30, 2007

ஞாயிறு நற்செய்தி july 1 லூக்கா நற்செய்தி

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 9

51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 54 அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். 55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள். 57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார். 58 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார். 59 இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார். 60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார். 61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார். 62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.

(http://www.arulvakku.com)
மறையுரை:

இன்றைய ஞாயிறு நற்செய்தி, ஊர் மக்களால், நிராகரிக்கபட்டவுடன், எவ்வாறு, சீடர்கள் செயற்பட்டார்கள் என்பதை காட்டுகிறது. யேசு அவர்களை முன்னே சென்று அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய சொன்னார். சீடர்கள், சமாரியர்களின் கிராமத்திற்கு சென்ற போது, அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சமாரியர்களுக்கோ, யூதர்களுடனான எதிர்ப்புணர்வில், அவர்களை ஏற்றுகொள்ளவில்லை. உலகின் மீட்பரோடூ சேர்ந்து இருக்கும் ஒரு வாய்ப்பை இழந்து விட்டனர்.

உனக்கு மிகவும் நெருங்கியவர்களிடம் யேசுவை கொண்டு செல்லும்போது, அவர்கள் நிராகரித்தால், நீ எப்படி நிணைப்பாய்? திருச்சபையின் போதனையை யாராவது ஒருவர் ஏற்றுகொள்ள மறுத்தால் நீ என்ன நிணைக்கிறாய்?.

யாரும் உங்களை ஏற்றுகொள்ளவில்லை என்றால், உங்கள் செருப்பில் உள்ள தூசியை தட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி செல்லுங்கள் என்று யேசு சீடர்களிடம் முன்னமே கூறியிருந்தார். அவர்களிடம் உண்மையை எவ்விதத்திலும் மறைக்ககூடாது என எச்சரிக்கை செய்து இருந்தார். இப்போது என்ன போதனை செய்தாரோ, அதனையே வழி நடந்து காட்டினார். அவர் அந்த கிராமத்தினரை எதுவும் நிர்ப்பந்திக்க வில்லை. அவர்களுக்கு உண்மையை உரக்க சொல்லியிருக்கலாம், ஆனால் எதுவும் சொல்லாமல் அவர்களிடமிருந்து விலகி சென்றார்.
நாம் யேசுவை பின் பற்ற வேண்டும் என்றால், நிறைய விசயங்களை விட்டு கொடுக்கவேண்டும். மேலும், பலர் நிராகரிப்பையும் ஏற்றுகொண்டு, அதனை எதிர்த்து எதையும் செய்யாமல் யேசுவை பின் செல்ல வேண்டும். நற்செய்தியின் கடைசியில், அவரை பின் செல்ல வேண்டும் என்றால், முன்னோக்கியே செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், நாம் எப்போதுமே, பல விசயங்களில் அதை விட்டு விலகியே செல்கிறோம், நிராகரிப்பிலிருந்து, அன்பிற்கு எதிரான செயல்களில், மனகசப்பில் இருந்து, மூடிய இதயத்தை உடையவர்களிடமிருந்து, நாம் விலகியே செல்கிறோம். யேசுவோடு நாம் முன்னே செல்ல, பரிசுத்த ஆவிதான், நாம் இதயத்தில் யேசுவை வாங்க, நம்மை தயார்படுத்துகிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் ஒருவரை யேசுவோடு சேர்க்க முயற்செ செய்து, அது தோல்வியானால், நாம் உண்மையிலே தோல்வியடையவில்லை. நாம் விதையை விதைத்து வைத்திருக்கிறோம். யேசு மற்றவர்களை வைத்து அறுவடைசெய்கிறார். பரிசுத்த ஆவி விடுபட்ட வேலைகளை செய்யட்டும். அப்போது நீங்கள் அடுத்த வயல்களுக்கு செல்லலாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
யார் உங்களை மனமாறமாட்டேன் என்று கூறி உங்களை பயமுறுத்துகிரார்கள். அன்புடன் அவர்களிடமிருந்து விலகி ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள, நீ என்ன செய்ய வேண்டும். (இது உண்மையான் அ விலகல் கிடையாது.
http://www.gnm.org

No comments: