Friday, June 22, 2007

June 24th 2007 மறையுரை

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 1

57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். 59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். 60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும் ' என்றார். 61 அவர்கள் அவரிடம், ' உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே ' என்று சொல்லி, 62 ' குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன? ' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். 63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ' இக்குழந்தையின் பெயர் யோவான் ' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். 64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. 66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ' இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ? ' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.



லூக்கா 1:57௬6, 80

மறையுரை: ஜூன் 24

உங்களுக்கு தெரியுமா? ஸ்நாபக அருளப்பரை போல தான் நீங்களும் இருக்கிறீர்கள். இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் ஸ்நாபக அருளப்பருக்கு என, அவர் பிறப்பதற்கு முன்பே, தனிபட்ட சிறப்பான திட்டம் வைத்திருந்தார். கடவுள் அதேபோல் உனக்கும் தனிப்பட்ட சிறப்பான திட்டத்தை, நீ கருவில் உருவானபோதே, உன் பிறப்பின் நோக்கத்தை கொடுத்துள்ளார். நீ மனித உரு ஆவதற்கு முன்பே, உனக்கு ஒரு திட்டம் , பிறப்பின் நோக்கம் கொடுத்துள்ளார்.

கடவுள் உனக்கு, கூர்மையான வாளை கொடுத்துள்ளார். அது என்னவென்றால், உண்மையை எடுத்துரைக்கும் ஆற்றல், சக்தியுமாகும். உனது ஞானஸ்நானத்தில், கடவுள் உனக்கு இந்த அன்பளிப்பை பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார்.

கடவுள், உன்னை அவரது கரங்களில் அனைத்து உன்னை மூடி காக்கிறார். உனது வாழ்வு எவ்வளவு கடினமானது என்றாலும், நீ கடவுளிடமிருந்து எத்தனை முறை பிரிந்து சென்று இருந்தாலும், நீ அவருடைய சொத்து. சாத்தானின் பிடியிலிருந்து, அதன் கொடுங்கைகளிலிருந்து உன்னை மீட்கிறார்.

கடவுளுக்காக சேவை செய்யும்போது, உங்கள் முயற்சியில் தோல்வியுற்று, களைப்படைந்திருந்தாலும், கடவுளின் சேவையில், உங்கள் முயற்சி உபயோகமில்லாமல் ஆனது என்று நீங்கள் சோர்வுற்றாலும், அதற்குண்டான பரிசு கடவுளிடமிருக்கிறது. அவர் உனக்கு அந்த பரிசை தருவார்.

நீ எவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய் என்று நினைத்தாலும், நீ எவ்வளவு குள்ளமாக இருந்தாலும், அல்லது மிக உயரமாக இருந்தாலும், அல்லது நோய்வாய் பட்டிருந்தாலும், அல்லது உங்கள் பிறப்பில் குறையிருந்தாலும், நீ கடவுளின் பார்வையில் வளம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள். இன்றைய வாசக பதிலுரையில், இது கொடுக்கபட்டுள்ளது."நீ மிகவும் அழகாக படைக்கப்பட்டிருக்கிறாய். நீ கருவுருவானபோது, உனது வாழ்வு, பெருமதிப்புள்ளது மற்றும் முக்கியமானது."

நீங்கள் எப்படியெல்லாம் கடவுளுக்கு சேவை செய்யலாம் என்று நீங்கள் செய்யும் கற்பனை மிகவும் சிறியது. கடவுள் உங்களுக்காக மிக பெரிய திட்டம் வைத்திருக்கிறார். மிகவும் முக்கியமான, உங்களுக்கு உள்ள அன்பளிப்பை எப்படியெல்லாம் உபயோகபடுத்தலாம், மேலும் உங்கள் திறமைகளை, அனுபவங்ளை, பயிற்சிகள் எவ்வளவு பெற்றிருந்தாலும், கடவுள், அந்த திறமைகளை, உன் மூலம் இன்னும் மேலும் மெருகூட்டுவார்.

நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, நீங்களும், கடவுளின் குழந்தைதான்.பரிசுத்த ஆவியில் மேலும் வலிமையோடும், உறுதியோடும் வளர்வீர்கள். நீங்கள் இறைவனின் சேவையில், கஷ்டபட்டிருக்கலாம், நிறைய பயிற்சி செய்திருக்கலாம். வேதனைபட்டிருக்கலாம், தாகத்துடன் இருந்திருக்கலாம், பசித்து இருந்திருக்கலாம். இவையெல்லம், மிகவும் மதிப்பு உள்ளவை, மேலும் உபயோகமானது, நீ யேசுவுக்கும், கடவுளரசிற்கும் சேவை செய்யும்போது உனக்கு உதவியாக இருக்கும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
இசையாஸ் 49:1- 6 வாசகத்தை உங்கள் மனசுக்குள்ளே வாசியுங்கள். ஒவ்வொரு வரியாக வாசித்து, உங்கள் வாழ்க்கையில், அதனுடைய பிரதிபலிப்பை தியானியுங்கள். எது உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. ஏனெனில், நீங்களே உங்களை குறைத்து மதிப்பிட்டு, கடவுளரசிற்கு உபயோகமில்லாதவர் என்று நினைத்து கொள்கீறீர்களா? இன்று என்ன செய்ய போகிறீர்கள்.

No comments: