Saturday, August 11, 2007

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி மறையுரை:

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

32 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். 33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். 35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். 36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். 37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். 40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார். 42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்? 43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். 44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். 45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் 46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். 47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். 48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.


http://www.arulvakku.com
ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

இன்றைய நற்செய்தியில், கடவுள் மிகவும் சந்தோசமாக அவரது விண்ணரசை உங்களிடம் கொடுக்க தயாராய் இருக்கிறார். இந்த விண்ணக அரசு, விண்ணையும், இந்த பூமியில், அவருடைய அன்பினால் கிடைக்கும் ஆதாயங்களையும் , பூமியில் கிடைக்கும் நல்ல பலன்களும் சேர்ந்து தான் குறிப்பிடபடுகிறது.
கடவுள் எதையுமே அவரிடம் வைத்து கொள்வதில்லை. நாம் அதையெல்லாம், கடனமாக உழைத்து அதனை பெற வேண்டியதில்லை. ஆனால், நாம் அதனை உபயோகபடுத்துகிறோமோ? கடவுள் கொடுக்கும் அனைத்தையும், எப்படி பெற வேண்டும் என்று யேசு விளக்குகிறார்: உனது இதயத்தை பரிசோதனை செய். உலக பொருட்களுக்காக நீ ஏங்குவாய் ஆனால், உனது கைகளில், இருக்கும் பொருட்கள் எல்லாம், ஒன்றுமில்லாமல் போகும். உனது பண பைகள் எல்லாம் உலக பொருட்களுக்காக திட்டத்துடன் இருந்தால், அல்லது கடவுளுக்கு உகாத உறவுகள் கொண்டிருந்தால், கடவுளுடைய மிகப்பெரும் பிரமாதமான அருட்கொடைகள் உனக்கு வர இடமில்லை. இந்த உலக பொருட்செல்வங்கள் எல்லாம், நிரந்தரமானவை அல்ல , அதனால், இதனையெல்லாம், கடவுளின் அழிய முடியாத வெகுமதிக்கு, இந்த உலக விசயங்களை விட்டு விடுங்கள்.

இந்த நற்செய்தி, நம்முடைய செல்வங்கள் எல்லாவற்றையும், கடவுளின் அருட் செல்வத்திற்காக, விற்று விடவேண்டும் என்று அர்த்தமில்லை. எது முக்கியம் என்றால், நம் எண்ணம், நோக்கம், எல்லாம், கடவுளின் அருட்செல்வத்திற்காக ஏங்க வேண்டும் அதனை பெற முயற்சிக்க வேண்டும். அந்த செல்வங்கள் எல்லாம், கடவுளரசிற்கு சேவை செய்கிறதா? அல்லது நிரந்தரமற்ற நோக்கங்களுக்காக உபயோகபடுகிறதா?

எதுவெல்லாம், கடவுளோடு உன்னை இணைக்கிறதோ அதனை ஊக்கப்படுத்துகிறதோ? அதுதான் உனக்கு நித்திய வாழ்வின் வெகுமதி.

நம் வாழ்வில், உலக பொருட்களுக்காக, வீணடிக்காமல், கடவுளுக்காக அவரது அருட் கொடைகளுக்காக வாழ வேண்டும் என்று யேசு எசசரிக்கிறார். தலைவர் எப்போது வருவார் என்று நமக்கு தெரியாது, மேலும் நித்திய இளைபாற்றிக்கு , கடவுளோடு நிரந்தர இணைப்புக்கு நம்மை அழைத்து செல்வார் என்று தெரியாது. நாம் தயாராய் இருக்கிறோமா? அல்லது உலக வெகுமதிக்காக, நம்முடைய விருப்பம் செல்கிறதா?

இதனால் தான், கடவுள் அவருடைய மிக பெரிய இரக்கத்தால், நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை கொடுத்துள்ளார். உலக வெகுமதியில் இருந்து வெளி வருவது என்பது மிகவும் வலியை கொடுக்கும். இதனை யேசு 'அடிபடுவான்' , தலைவருடைய பேச்சை கேட்காதவர்கள் என்று கூறுகிறார். ஏன் அதற்காக காத்திருக்க வேண்டும். இப்போது சரியான நேரம், கடவுளரசை தெரிந்து, அந்த நோக்கத்திலேயே இருந்து , நாம் கடவுளின் அன்பளிப்பை, அவரின் வெகுமதியை பெற்று வளர்வோம். அப்போது தான், எந்த திருடனும் நம்மை அழிக்க முடியாது.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நாளை நீ மரணமடைய போகிறாய் என்று தெரிந்தால், நீ எதை தயார் செய்வாய்? எந்த மனோ நிலையில் , என்ன நோக்கத்தில், என்ன திட்டம் கடவுளரசிற்கு உபயோகமில்லை என நினைக்கிறீர்கள்? எந்த பழக்க வழக்கங்கள், எந்த மாதிரியான அடிமைதங்கள், அன்பற்ற நடைமுறைகள், மன்னிக்க முடியாத, குழப்பங்கள் உள்ளன. இந்த மதிப்பற்ற பொருட்களை கிறிஸ்துவிடம் எடுத்து செல்லுங்கள். இதன் மூலம் கடவுளின் வெகுமதிக்கு போதிய இடம் உங்கள் உள்ளங்களில் கிடைக்கும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: