Saturday, August 25, 2007

agust 26th :நற்செய்தி மறையுரை

நற்செய்தி & மறையுரை :


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 13

22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். 23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: 24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார். 26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள். 27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார். 28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். 29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். 30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தி தான் மோட்சத்தில் உள்ள குறுகிய கதவின் வாயிலுக்கு அழைத்து செல்லும் சாலை குறியீடுகள் ஆகும். கடவுளுக்கு நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தெரியும் என்கிறார் இசையா. அப்படி தெரிந்து கொண்டு, நம் பாவங்களை கழுவி, நம் எண்ணங்களை சுத்தபடுத்த உதவுகிறார். இதன் மூலம் கடவுளின் பிரகாசத்தையும், புகழொளியையும் நாம் மரணமடையும் போது பார்க்கலாம். கடவுள் நம்மிடையே ஓர் அடையாளத்தை கொடுத்துள்ளார். அது தான் யேசு கிறிஸ்து. அவருடைய வாழ்வு. --எப்படி வாழ்ந்து மற்றும் எப்படி இறந்தார் -- என்பது, நமக்கு மோட்சத்தை எப்படி அடைய வேண்டும் என்பதற்கான அடையாளமாகும். இன்றைய நற்செய்தியில் "பலர் மோட்சத்தின் உள்ளே செல்ல முயற்சி செய்வார்", என்று யேசு கூறுகிறார். அவர்கள் அதிக வலிமையும் திறமையும் சக்தியும் உடையவராகவும் இருப்பர் என்று கூறுகிறார். அந்த வலிமை போதுமானதா? நற்செய்தி வாசகம் முழுவதும், இதற்கான பதிலை கூருகிறார். நாம் அன்பு செய்வதில் பிழையற்று இருக்க வேண்டும். முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் செய்யும் தவறுகளும், பிழைகளும் , நம்மை மோத்சத்திற்கு அழைத்து செல்லாது என்று அர்த்தமில்லை. மோத்சத்தின் கதவுகளுக்கு சாவி அன்பு ஒன்று தான். நாம் அன்பை தூக்கி எறிந்தால், அந்த சாவியை தூக்கி எறிந்ததற்கு சமமாகும்.

அன்பில் நாம் பிழையற்று இருக்க வேண்டும் என்றால், கடவுளின் அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மிடையே கொண்டிருக்க வேண்டும், அதன் மூலம் அவர் நம் மூலம் மற்றவர்களை அடைகிறார். நாம் தனியாக, முழுமையான அன்பை கொடுக்க முடியாது. அதனால், கடவுளை வேண்டு, அவரை சார்ந்து, மற்றவர்களுக்கு அவரின் முழு அன்பை கொடுக்க முடியும். அவரின் அன்பில் நாம் சார்ந்து இருக்க வேண்டுமென்றால், அதன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுத்து நிறுத்தும், எல்லா விசயங்களையும் நம்மிடமிருந்து விலக்க வேண்டும். மன்னிக்காமல் இருப்பது, பழிவாஙும் எண்ணம், தவறான எண்ணங்கள், எதிர் மறையான சிந்தனைகள், இரக்கமில்லாமல், மற்றவர்களை ஒதுக்கி தள்ளுவது ஆகியன, கடவுளின் அன்பை நம்மிடம் கிடைக்க விடாமல் செய்வது ஆகும்.

அடுத்த வாசகத்தில், கடவுளின் ஒழுங்கை அவமரியாதை செய்யாதீர்கள் என்று குறிப்பிடபடுகிறது. நம்முடைய சோதனைகளயும், கஷ்டத்தையும், கடவுள் உபயோகித்து, நமது அன்பை முழுமையாக்குகிறார். நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நமது அன்பின் வாழ்வில் வளர்ந்தோமானால், நாம் கடவுளை வேண்டி, நமது அன்பை வளர்க்க கோரினால், அவர் உதவியுடன், யேசுவை போல் மாறிவிடுவோம். இதன் மூலம் மோட்சத்திற்கான வழியை நாம் நேராக பெற்று விடலாம். மேலும் நமது குறையுள்ள, முடமான நமது பரிசுத்த வாழ்வு குணமாக்கப்படும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
உமது வாழ்வில் யாரை அன்பு செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறது. (நீயே உன்னை அன்பு செய்ய மறுப்பதையும் நினைத்துகொள்). எப்படி இவர்களிடம் முழுமையான, பரிசுத்தமான் அன்பை, கடவுள் மூலம் அவர்களை முழுமையாக அன்பு செய்யும் சக்தியை பெற்று, அவர்களை முழுதுமாக அன்பு செய்யலாம்.?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: