Saturday, August 4, 2007

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், ' போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் ' என்றார். 14 அவர் அந்த ஆளை நோக்கி, ' என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? ' என்று கேட்டார். 15 பின்பு அவர் அவர்களை நோக்கி, ' எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது ' என்றார். 16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. 17 அவன், ' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! ' என்று எண்ணினான். 18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ' . 19 பின்பு, ' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு ' எனச் சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ' அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? ' என்று கேட்டார். 21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. '

(http://www.arulvakku.com)
பேராசையின் பிரச்னை என்ன என்றால், அது மற்றவர்களை வேதனைபடுத்துகிறது, காயப்படுத்துகிறது. உலகச் செல்வங்களால், நம்மை தற்பெருமை உள்ளவனாகவும், மற்றவர்களை சாராமலும் இருப்போம். நாம் நம்மையும், நம்மிடம் உள்ள செல்வங்களையும் சார்ந்து இருப்பதால், கடவுளை நம்புவதில்லை, நாம் சுயநலமிகளாக இருப்போம், அதன் மூலம் மற்றவர்கள வேதனைபடுவர். நாம் நம்முடைய செல்வங்களை , நம் வீட்டில் அடைத்து வைப்பதால், மற்றவர்களுக்கு தேவையானதை கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில், தற்பெருமையும், சுய சார்பு நிலையும், கடவுளின் புனிதத்திற்கு எதிரானது என்று குறிப்பிடுகிறார்.

நமக்கு கிடைக்கும், அறுவடை கடவுளிடமிருந்து வருகிறது. நமக்கு கிடைக்கும் அபரிதமான பணம், சந்தோசம், ஞானம், அனுபவ பாடங்கள் எல்லாம், கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல், சக்தி மூலம் நமக்கு கிடைத்தது. உனது சொந்த முயற்சியால், பெற்ற வெற்றி, அனைத்தும், உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்தது. நமக்கு கிடைக்கும் எல்லாவற்றிர்கும், கடவுள் தான் ஊற்று, அவை எல்லாம், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க படவேண்டியவை, ஏனெனில், இதன் மூலம் தான், மற்றவர்களின் வேண்டுதலுக்கு கடவுள் பதில் கொடுக்கிறார். நமக்கு கிடைப்பதை, மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, கடவுளின் கைகளாக இருக்கிறோம்.

கடவுள் தான் நமக்கு எல்லாம் கொடுக்கிறார், என்று புரிந்தால், தாராள மனப்பாங்கு நம்மிடம் வளரும். மேலும், நாம் கொடுக்க கொடுக்க அவரும் கொடுத்து கொண்டேயிருப்பார்.

கடவுளின், தாராள மனத்தை புரிந்து கொள்தல் தான் உண்மையான செல்வம்: நம் வாழ்வு, சோதனைகளிலும்,அமைதியாகவும், வளமானதாகவும் இருக்கும். ஆபத்தான நேரங்களிலும், நமக்கு நம்பிக்கை வளரும். நமக்கு உள்ளதை எல்லாம், மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அவர் சொத்து நம்முடையாதாகும். இது தான், திருச்சபையின், கடவுளரசின் அடிப்படை பொருளாதாரமாகும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது தான், யேசுவின் உடல் அப்போதுதான் சுபிட்சம் பெறும். இதனை தான், புனிதர்களின் புனித இணைப்பு என்று கூறுகிறோம்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: