Saturday, August 18, 2007

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

49 ' மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். 53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர். '


http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், யேசு "மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்" , மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்று கூறுகிறார். அவர் பரிசுத்த ஆவியை திருமுழுக்கு மூலம் பெற ஆவலோடு இருந்தார். அதுவரை மிகவும் மண நெருக்கடியோடு இருந்தார். அதே போல், அவரை பின்பற்றி செல்பவர்களும், பரிசுத்த ஆவியுடனும் எப்போது இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது தான் உலகை மாற்றும். இது தான் நிரந்தர அமைதியை தரும். நம் மூலம் மற்றவர்களுக்கும் நிரந்தர அமைதி பரவும்.

பரிசுத்த ஆவியானவர் நெருப்பு, அந்த நெருப்பு நமது குறைகளை துடைத்து எறிகிறது. நம்மை தூய்மைபடுத்துகிறது. அன்பற்ற செயல்கள், நமது தவறான எண்ணங்கள் மூலம், கிடைக்கும் பலன்கள் அமைதியின்மை, ஒற்றுமையின்மை, கருத்து வேற்றுமைகள், மற்றும் போர் ஆகும். அதனால் தான், பரிசுத்த ஆவியின் அருளால், எவ்வளவு பிரச்னைகளிலும் நாம் அமைதியாக இருக்க முடிகிறது. பரிசுத்த ஆவியினால், இவ்வுலகில் , நாம் கடவுளின் அமைதி பரிசை எடுத்து செல்லும் கருவியாகிறோம். நீ பரிசுத்த ஆவியின் நெருப்பை, உணரவில்லையெனில், அது கிறிஸ்துவின் அமைதியை பரப்ப உங்களை தட்டி எழுப்ப வில்லையெனில், யேசு உன்மேல் கடுந்துயரம் அடைகிறார்.

உங்களோடு ஒட்டியிருக்கும் ஒரு பாவத்தை நினைத்துகொள்ளுங்கள், அதை விரைவில் நிறுத்தி விடுவோம் என்று நீங்கள் நினைத்தை நிணைத்து கொள்ளவும். யேசு உன்னை என்ன செய்ய சொல்கிறார் என்றால், பரிசுத்த ஆவ்யின் நெருப்பை கொண்டு, அந்த பாவத்தை கொளுத்தி, உங்கள் வாழ்வு அந்த பாவத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறுகிறார். யேசு என்ன செய்ய வேண்டும் என்று பார். எந்த மாதிரியான ஞானஸ்நானத்தை அவர் குறிப்பிடுகிறார். தண்ணீரால் ஆன ஞானஸ்தானம் இல்லை, அவர் ஏற்கனவே அதை பெற்று விட்டார். அவர் குறிப்பிடுவது மிகவும் வலி கொடுக்க கூடிய சுய தியாகம் ஆகும். அந்த வலியை பொறுக்க கூடிய மண உறுதி, அன்பிற்காக ஏங்கிய வலி தான் யேசுவை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. அதன் மூலம் பாவத்திலிருந்து மீட்பை கொடுக்க வலியுறுத்தியது.


பாவங்களை நிறுத்த, நாம் யேசுவை போல் மாறவேன்டும். நாம் உளமார மற்றவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பது, கிறிஸ்துவ வாழ்வின் முழுமை பெறுவது ஆகும். நமது உள்ளத்தில், நமது அன்பும் , வேலைகளும், நமது சகோதரர்களை நித்திய அமைதிக்கு வித்திட வேண்டும் என்று நமது உள்ளம் கொழுந்து விட்டு எறிய வேண்டும்.

யேசு இந்த நெருப்பு தான் ஒவ்வொரு வீட்டிலும், பிரிவை உண்டாக்குகிறது என்கிறார். இது தான், நம் வீட்டில் உள்ளவர்கள் சுய லாபத்தோடு வாழ்வு நடத்தும்போது, நம்மிடமிருந்து அவர்களை பிரிக்கிறது. எது எப்படி இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து அவர்களிடம் அன்பு செய்ய வேண்டும். இந்த செயல், நம்மிடம் உள்ள நெருப்பை இன்னும் வளர செய்யும். நம்மை மேலும் சுத்த படுத்தும். தொடர்ச்சியாக, உலகமும் மாறும்.

http://www.gnm.org

No comments: