Saturday, November 17, 2007

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21

5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார். 7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள். 8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். 9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார். 10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். 11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். 12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். 13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். 17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். 18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. 19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

thanks to http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில்,
"ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ", இந்த பூமியில் உள்ள எல்லாமும் தற்காலிக்மானவை என்று நினைவூட்டுகிறார். அனைத்தும் நிரந்தரமானவை இல்லை.

இந்த உலகில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள், அவையெல்லாம் தற்காலிகமானவை. எவையெல்லம் உங்களை துன்புறுத்துகிறது. அதுவும் நிரந்தரமானதில்லை. இந்த உலகத்தில் நீ எவர்றை சார்ந்திருக்கிறாய்.? அவைகளும் தற்காலிகமானவை. நீ எதனை பார்த்து அதிசயிக்கிறாய்? நம்பிக்கை வைக்கிறாய், நீ எதுவெல்லாம் திட்டமிடுகிறாய், நீங்கள் நிறைவேற்ற துடிக்கும் சாதனைக்காக, எவ்வள்வு நேரம் செலவழித்தாலும், மிகப்பெரிய அவார்டு கிடைத்தும், அதன் பிறகு மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தாலும், அவையெல்லாம் தற்காலிகமானவை. அவையெல்லாம் கடவுளுக்காக (அவரது அரசிற்காக) செய்யபடும்போது அது உன்மையான உபயோகமாகும்.

நாம் கடவுளின் நோக்கத்தோடு தான், ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும் என்பது தெரிந்து வைத்திருக்கிறோம். அந்த செயல்கள் எல்லாம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும். ஆனால், இந்த கண்மூடிதனமான நம்பிக்கையை விரும்பவில்லை. நாமும் யேசுவின் சீடர்களை போல, கடவுள், இவ்வுலகில் நடக்கும் தீமையானவைகளையும், அநீதிகளையும் பழி வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.யேசு இரண்டாம் முறையாக இவ்வுலகில் வந்து, எல்லாவகையான தீமைகளையும் நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசைபடுகிறோம்.

நமது ஒவ்வொரு நாளிலும், நாம் இறைவனின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், நமது நம்பிக்கைக்கு தகுந்தாற்போல், அந்த உதவி கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுள் என்ன திட்டம் நமக்காக வைத்திருக்கிறார் எனபதை அறியாத ஒரு பய உணர்வை நாம் விரும்புவதில்லை. பார்க்க முடியாத கடவுளை சார்ந்திருப்பதை விட, நாம் கண்ணால் என்ன பார்க்கிறோமோ அதையே சார்ந்திருக்கிறோம். அதனால், கடவுளிடம் எடுத்துகாட்டு அல்லது குறியீடுகளை எதிர்பார்க்கிறோம்.

எப்படியிருந்தாலும், கடவுளோடு நாம் ஒன்றாய் பயனம் செய்ய, நாம் ஒரு காலை எடுத்து தூக்கி கொண்டு அடுத்த அடி வைக்கும் முன்: "கடவுளே அடுத்த அடியை எங்கே வைப்பது? " என கேட்போம்.

கடவுளரசோடு சேர்ந்து அதற்காகவே வாழ்வது என்பது, எப்போதுமே நமது காலை தூக்கி நிறுத்தி கொண்டு காத்திருக்க வேண்டும், இந்த நிலையில், நாம் ஒற்றைகாலில், தள்ளாடமல், சமனாய் நிற்க வேண்டும். கடவுளை சுற்றியே நமது வாழ்வு இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால், நாம் தடுமாறி வீழ்ந்துவிடுவோம். கடவுள் நாம் அடுத்த அடியை எங்கே வைக்கவேண்டும் என்று சொல்லவில்லையெனில், நாம் வீழ்ந்து இறப்போம். நாம் ஒன்று வேறு எங்கேயாவது வீழ்வோம், அல்லது கடவுளின் கைகளில் விழுவோம். அது எப்போதுமே நம்மை தாங்கி கொன்டுதான் இருக்கிறது. (நமக்கு தெரிந்தோ தெரியாமலோ) அதன் பிறகு, நமது சொந்த விருப்பங்களும் முடிந்து /இறந்து , மேலும் அடுத்து எங்கே போகவேண்டும் என தெரியும்.

கடவுளின் கைகள், எப்போதுமே நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான் நித்தியத்திற்கும் நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான், நமக்கு உன்மையான காவல், முடிவில்லாத காவலாயிருப்பார். எல்லா ஆற்றலும், எல்லாம் தெரிந்த அன்புமாயிருப்பார். அவருடைய அன்பும், காவலும், என்றுமே தோல்வி அடைவதில்லை.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: