ஞாயிறு நவம்பர் 25, நற்செய்தி மற்றும் மறையுரை:
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 23
35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள். 36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, 37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர். 38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான். 40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான். 42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். 43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.
http://www.arulvakku.com (thanks)
இன்றைய நற்செய்தியில், யேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனை நாம் பிரதிபலிக்கிறோம். யேசு தான் நமது அரசர். மேலும் நமது நித்திய காலத்தை அவரோடு சேர்ந்து அவரது ராஜ்ஜியத்தில் வாழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த எண்ணத்தோடு இருக்கும் வரை, நாம் இறந்த பிறகு, கடவுளரசில் சேர்வோம் என்பதில் எந்த வித ஐயமும் தேவையில்லை.
மோட்சத்தின் அரசராக யேசு இருப்பதினால், யேசுவிற்கு , யாரையெல்லாம் அவரது அரசிற்குள் சேர்க்கலாம் என்ற அதிகாரம் இருக்கிறது. அவருடைய அதிகாரத்தை ஏற்று கொள்கிறவர்கள் அனைவரையும் அவரது அரசில் "பெரிய வெள்ளியின் குற்றவாளியிடம்" சொல்வது போல், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் " என்று சொல்வார்.
யேசுவின் அதிகாரங்களை பார்ப்போம்: கடைசி இரவு உணவு விருந்தில், யேசு ஒவ்வொரு சீடர்களின் பாதங்களையும் கழுவியபோது, மோட்ச ராஜ்ஜியத்தின் சார்ந்த் ஒவ்வொருவருக்கும், மோட்சத்தின் அரசர் சேவை/உதவி செய்வார் என்பதை மிகவும் உறுதியாக கூறுகிறார்.
அந்த பெரிய வெள்ளியின் அடுத்த நாள், தங்க கீரீடம் சூட்டிகொள்வதற்கு பதிலாக, முள்முடி சூட்டிகொண்டார். ஏனெனில், அவருடைய போற்றுதலுக்குரிய அரசு, இந்த பூமியின் பொருட்களால் ஆனதில்லை. அதனுடைய பணத்தால், நகைகளால், மிகுதியான செல்வங்களால் ஆனதில்லை. அன்பின் ஊக்கத்தால் நடைபெறும், சுய தியாகங்களாலும், யேசுவின் அரசு போற்றப்படுகிறது.
யேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின், அவருடைய மரண காயங்கள் ஆறிவிட்டது. ஆனால், உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களும், இன்னும் ஆறவில்லை. இன்றும், அந்த காயங்களை, யேசு வைத்துகொண்டு இருக்கிறார். அவருடைய அதிகாரத்தை, வைத்து, அவர் காயங்களை ஆற்றவில்லை. அந்த காயங்கள் மூலம், அவருடைய நமக்கான தியாகத்தை நினைவுபடுத்துகிறார். இவ்வுலகில் உள்ள அரசர்கள் விலையுயர்ந்த மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். நம் மோட்சத்தின் அரசர், அவருடைய தியாகத்தின் குறியீடுகளை அனிந்து கொண்டு இருக்கிறார்.
நமது சகோதரர்களுக்கு, கிறிஸ்துவோடு நாம் சேவை செய்யும் போது, நாம் கடவுளரசை சேர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதால் வரும் இன்பத்தையும், சுய தியாகத்தால் வரும் சந்தோசத்தையும், நமது அன்புக்கு தகுதி இல்லாதவர்களிடம், அன்பு செய்வதும் நாம் கடவுளரசில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறியாகும். நமது துன்பங்களை யேசுவிடம் காணிக்கையாக்கும் போது, அதனுடைய உண்மையான மதிப்பை அறிகிறோம். நாமும், நமது ஆன்மாவில் அவருடைய ஐந்து காயங்களையும் அனிந்திருக்கிறோம். மேலும் கடவுளரசில் நாமும் இணைந்திருக்கிறோம்.
கண்டிப்பாக, நாம் யேசுவின் பேரரசில் சேர்வோம். நாம் யேசுவோடு ஏற்கனவே இனைந்து விட்டொம்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment