மே 10, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா கால 5 வது ஞாயிறு
Acts 9:26-31
Ps 22:26-28, 30-32
1 John 3:18-24
John 15:1-8
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 15
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.18 ' உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் நாம் என்ன பார்க்கிறோம், நல்ல திராட்சை கனிகளை கொடுக்கிற திராட்சை கொடியாக யேசு இருக்கிறார். நாமெல்லாம் அந்த திராட்சைகொடியோடு உள்ளோம். யேசு தான் அந்த திராட்சை கொடி, அவருக்கு இடப்பட்ட அழைப்பே, நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எப்படி நல்ல திராட்சை கனிகளை கொடுக்கிறாரோ, அதே போல் நாம் நல்ல கனிகளை கொடுக்க வேண்டும்.
எனினும், நம்மில் நிறைய பேர் , இது எவ்வளவு முக்கியமானது என்பதை மறந்து குறைவாக மதிப்பிடுகிறோம். இவ்வாறு முக்கியமானதற்றதாக ஆக்காமல், நீங்கள், கிறிஸ்துவின் கனிகளை தரவேண்டும். அதிக கனிகளை கொடுக்க வேண்டும். அதுவும் இன்றே. அதிகமான கிறிஸ்தவர்கள் , ஓரளவிற்கு நல்ல முறையில் இருந்தாலே போதும் என்று இருந்து விடுகின்றனர். நாம் நமக்குள்ளே திருப்தியடைந்து, எல்லோரும் நம் செயலில் திருப்தியாக இருக்கின்றனர் என நினைத்து, நாம் அப்படியே இருந்து விடுகின்றோம். கருனையுடனும், தாராள மனத்துடனும், அன்பினாலும் சிலருக்கு நாம் உதவி செய்துவிட்டு, கடவுள் நாம் தரும் கனிகளால் மிகவும் திருப்தியாக உள்ளார் என நாம் நினைக்கின்றோம்.
ஏன் இந்த உலகில் அதிக தவறுகளும், சாத்தானும், அதன் நிகழ்வும் இருக்கிறது என்று உங்களுக்குள்ளே கேட்டதுன்டா? ஏன் கடவுள், அவர் கையை உயர்த்தி, போருக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும், வேலையில்லாமைக்கு எதிராகவும், அதிகம் சம்பளம் வாங்குவோரின் கரவத்திற்கு எதிராகவும், உடல் மற்றும் மண ரீதியாகவும் நடைபெறும் அநியாயங்களுக்கும், அபார்சனுக்கு எதிராகவும், ஏழ்மைக்கு எதிராகவும், அதிகமாகும் குற்றங்களுக்காகவும், இந்த உலகத்தை கறையாக்கும் செயல்களுக்கும் ஏன் கடவுள் தடுப்பதில்லை ?
ஏன் கடவுள் ஒன்றும் செய்வதில்லை?
நிச்சயமாக, அவர் செய்கிறார்!, எனினும், அவர் எப்படி திராட்சி செடியை வளர்க்கிறாரோ அப்படியே இங்கும் செய்கிறார். திராட்சை கொடியின் ஆற்றல் (யேசுவின்), நம் மூலம் , அந்த கொடியின் மூலம் கடவுள் செய்கிறார். எவ்வளவு அதிகமாக யேசுவிடமிருந்து அதிக சத்துக்களை நம் கொடி பெறுகிறதோ, அந்த அளவிற்கு யேசு அதிக கனிகளை உங்கள் மூலம் கொடுப்பார். ஆனால், திராட்சை கனிகள் அங்கேயே இருக்க போவதில்லை.
அவருடைய கனிகளை இந்த உலகிற்கு அதிக அளவில் எடுத்து செல்ல, கிறிஸ்துவின் மூலம் நாம் ஊட்டசத்து பெறுகிறோம். நாம் இன்னும் அதிக சக்தியுடையவராக வேன்டும், அதிக கிளை கொடியை வளர்க்க வேண்டும்,யேசுவிடமிருந்து பெற்ற அனைத்தையும், மற்றவர்களின் நலனுக்காக எடுத்து செல்ல வேண்டும்.
நாம் கிறிஸ்துவின் இறைசேவையை இந்த பூமியில் தொடர்ந்து செய்தால், இந்த சாத்தானின் செயல்கள் கொஞ்சம் மட்டுபடும். சாத்தானின் மீது வெற்றி கொள்வது என்பது கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. அது நம் மூலம் வருகிறது. கிறிஸ்துவின் புனிதத்துவம் , பரிசுத்த ஆவியின் மூலம் இந்த உலகிற்கு , நம் மூலம் வருகிறது.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, May 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment