Saturday, May 30, 2009

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே, 31 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பெந்தகோஸ்தே ஞாயிறு (பரிசுத்த ஆவி)

Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 16
12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.

(thanks to www.arulvakku.com)

கிறிஸ்துவின் ஆவி, பரிசுத்த ஆவியாக நமக்கு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், நாம் பரிசுத்தமாக இருந்து, கிறிஸ்து தொடங்கி வைத்த இறைசேவையை நாம் தொடரலாம். நாம் யேசுவை போல இருக்க முடியாது, ஆனால், அவருடைய ஆவி நம்மில் ஆக்கபூர்வமாக இருந்தால், நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை கொண்டிருக்கிறோம். அவருடைய விசுவாசம், அவரின் இயற்கையின் அளவை தாண்டிய அன்பு, அமைதி, நம்பிக்கை மற்றும், சக்தி வாய்ந்த ஆற்றல், மற்றும் பல் நாம் யேசுவில் பார்க்கும் அனைத்தும் நாம் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஞான்ஸ்நானத்தில் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டீர்கள். உறுதிபூசுதலில், பரிசுத்த ஆவி நம்மில் இருக்கிறார் என்பதனையும், ஆவியுனுடைய ஆற்றல் நம்மில் பெருகவும் செய்கிறது. பெந்தகோஸ்தோவிலிருந்து, கடவுள் அவருடைய இறையசிற்காக சேவை செய்யும் அனைவரையும், பரிசுத்த ஆவியின் மூலம் மாற்றி, அவருடைய இறையரசை இங்கே நிலை கொள்ள செய்கிறார். தாராளமாக கடவுள் நமக்கு ஆவியானவரை கொடுத்து, அவர் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறாரோ அதில் வெற்றியடைய நமக்கு உதவியாக இருக்கிறார். ஆனால் எந்த வழிமுறையில், எந்த அளவிற்கு கடவுளின் பரிசுத்தத்தையும், ஆற்றலையும் நம்மிடமிருந்து வெளிப்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்து இருக்கிறது.

பரிசுத்த ஆவிக்கான ஜெபத்தில் என்னோடு இனைந்து கொள்ளுங்கள்:

அன்பு யேசுவே, உங்களின் பரிசுத்த ஆவியின் முழுமையை எங்களில் கொண்டுவாரும். உமது பரிசுத்த ஆற்றலில் வாழ எமக்கு உதவியருளும். உங்களின் உண்மையை நன்கு புரிந்து கொள்ள எங்கள் என்னத்தை திறக்க உதவும். எங்கள் இதயத்தை திறந்து,உங்களை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் முன்பே பரிசுத்த ஆவியை நாங்கள் ஏற்றுகொள்ள உதவும்.
இறையரசை, மற்ற எல்லாவிசயங்களை விட, அதிகமாக அறிந்து கொள்ள உதவும். கடவுளரசில் சேராத விசயங்கள் என்னோடு ஒட்டிகொண்டுள்ளன என்ன என்பதை அறிந்து கொள்ள உதவியருளும். மேலும் அதனை துடைத்தொழிக்க எனக்கு மன உறுதியையும், சக்தியையும் கொடு. எனக்கு நீ மட்டுமே வேன்டும்.

பரிசுத்த ஆவியே, எனது பாவ நிலையை ஏற்று, அதனால் ஏற்பட்ட இழப்பிற்காக, உண்மையாக வருத்தப்படவும், அதனிலிருந்து மீண்டு வர எனக்கு உதவியருளும். எனது பாவமன்னிப்பிற்காக நான் வருந்தும்போது ஆறுதலாயிருந்தருளும், மேலும், எனது புதிய வாழ்வில், மகிழ்வோடு உன்னில் வளர உனது ஆவியை கொடுத்தருளும். இந்த குணப்படுத்தும் இரக்கத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு உதவும்.

யேசு இவ்வாறு கட்டளையிட்டார், "உலகம் முழுதும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்", எனது அன்பளிப்பையும், திறமையையும் உபயோகித்து, இவ்வுலகில் இறையரசிற்காக, முயற்சி மேற்கொள்ளுங்கள். நான் எனக்குள்ளே ஓர் எதிர்பார்ப்பு வைத்துள்ளேன், நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று எனக்குள்ளே ஒரு வரையரை உண்டு. இப்போது எனது எதிர்பார்ப்புகள், என்னுடைய இயலாமை, எனது விருப்பங்கள், என்னுடைய நோக்கங்கள் அனைத்தையும், உம்மிடம் ஒப்படைக்கிறேன் . உமக்கு உபயோகமாக இருக்க விரும்புகிறேன். நீ எங்கே என்னை அழைத்து செல்கிறாயோ அங்கே நான் செல்ல ஆசைபடுகிறேன். பரிசுத்த ஆவியே, கிறிஸ்துவின் பரிசுத்த , வெற்றியின் அன்பை இந்த உலகில் பரப்ப, என்னை தயார் பன்னியருளும்.
வா!, என்னை புதுப்பித்தருளும், பரிசுத்த ஆவியே, ஆமென்!

© 2009 by Terry A. Modica

No comments: