Friday, May 15, 2009

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 17, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா கால 6வது ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 15
9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)

பணியாளனாய் இருப்பதே உண்மையான கிறிஸ்துவனின் அடையாளமாகும். கடைசி இரவு உணவின் போது, யேசு இதனை வலியுறுத்தி கூறினார்.யேசு சீடர்களின் பாதம் கழுவியபோது, பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை செய்யவே மனுமகன் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று கூறினார். அவர் நாம் அனைவரையும் வின்னரசின் "பணியாளர்கள்" என்று அடிக்கடி மேற்கோள் காட்டி குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய நற்செய்தியில், அவர் நம்மோடு நட்பாக நண்பனாக இருக்க ஆசைபடுகிறார். நாம் அவரின் அடிமைகளாக அல்ல. அவரே மாற்று கருத்தை சொல்கிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் நமக்கு பணிவிடை செய்தால், அவர்களுக்கு நம் மேல் அக்கறை உள்ளது. அடிமைகள் நமக்கு பணிசெய்வது, அவர்களின் கடமை, இல்லையென்றால், அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

"நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" என்று யேசு கூறுகிறார். இதனை நண்பனாக நாம் ஏற்று கொள்கிறோமோ அல்லது அடிமையாகவா?
அடிமைகள் கடவுளின் கட்டளைகளை ஏற்று நடந்து கொள்ளாவிட்டால், என்ன ஆகுமோ என பயப்படுகின்றனர். அவர்கள் எல்லோரும் தம்மை காத்து கொள்ள நினைப்பவர்கள். நண்பர்களோ, கடவுளின் கட்டளை என்ன என்று ஆர்வத்தோடு அதனை அறிய முற்படுவார்கள். ஏனெனில், அந்த கட்டளைகளை , கடவுள் மேல் கொண்ட அன்பினால் எடுத்து கொள்வார்கள், அவருக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்வார்கள். நண்பர்கள் எல்லாம் மற்றவர்களுக்காக அக்கறை படுபவர்கள்.
' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" என்று யேசு கூறுகிறார். இதுவே எல்லா கட்டளையும் விட மேலான கட்டளையாகும். நண்பர்களுக்கு ஒரு கட்டளையாக எடுத்து கொள்ளவும். "நான் உங்களை எந்தளவிற்கு அன்பு செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது, கடவுள் என்னோடு பகிர்ந்து கொள்வது எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்", என்று யேசு கூறுகிறார். அவர் நண்பர்கள் அனைவரும் யேசு என்ன பகிர்ந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்கிறார்கள். (நற்செய்தி மூலம், கோவில் மூலம்), அன்பு செய்ய வாய்ப்புகளை அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு கட்டளையின் அடிப்படை அன்புதான். திருச்சபை ஒவ்வொரு படிப்பினையும் அன்பை வைத்து தான் தரப்படுகிறது.

இந்த கட்டளைகளை நாம் பின்பற்றவில்லையென்றால் கடவுளின் அன்பு கிடைக்காதா? கடவுளின் கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கும்போது, நம்மை கடவுள் அன்பு செய்தாலும், நாம் அன்பு செய்யபடவில்லை என நினைக்கிறோம்.

இது ஒரு அடிமைத்தனம். பயத்தினாலும், தவறான நம்பிக்கையினாலும், நம்மில் உள்ள குறைகளாலும், நாம் முழுமையாக அன்பு செய்யபடுவதில்லை. என நாம் நினைக்கிறோம். கடவுளின் கட்டளைக்கு கட்டுபடுகிறோம். அந்த கட்டளையிலிருந்து , தப்பி , கட்டளை தவறினால் , அவருக்கு எதிராக நாம் போகிறோம். யார் கலகம் செய்யாமல், கடவுளை ஏற்று , அவருக்கு அடிமையாகி, அவர் கட்டளைகளை ஏற்று நடக்க ஆரம்பித்தால், அவரின் அன்பை திரும்பி பெறலாம்.

நண்பர்களே, கடவுள் உங்களை எப்போதுமே அன்பு செய்கிறார். அந்த அன்பில், நாம் ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்து சந்தோசமாக இருக்கலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: