மே 24, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 7வது ஞாயிறு
Acts 1:15-17, 20-26
Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 17
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 ' இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். '
(thanks to www.arulvakku.com)
விசுவாசத்தில் ஒன்றாய் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் நாம் இணைந்து ஒன்றாய் இருக்க வைப்பது எது? அது என்ன என்றால், நமது ஒரே கடவுளை, யேசு கிறிஸ்துவை நாம் எல்லாம் அவர் பின்னால் அணி வகுத்து செல்கிறோம்.
நமக்குள்ளே பல வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. கடவுளுக்கு சேவை செய்யும் நமது பங்கில், பல குழுக்களில், நம்மிடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இருந்தும் நம்மிடையே ஒற்றுமை உள்ளது. ப்ராட்டஸ்டன்ட் (கத்தோலிக்கர் அல்லாத திருச்சபை) நம்பிக்கைகளை நாம் ஏற்றுகொள்ளாமல் போகலாம், ஆனால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது. நமக்குள்ளே கிறிஸ்துவின் ஒற்றுமை உள்ளது.
இன்றைய நற்செய்தியில், யேசு நமது ஒற்றுமைக்காக, இறைவனிடம் வேண்டுகிறார். நாம் அவரது வேண்டுதலுக்கு ஏற்றோர் போல நடந்து கொள்கிறோமா? அல்லது அதற்கு எதிராக நடந்து கொள்கிறோமா?
கடவுளிடம் ஒன்றாய் இருப்பது, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து அதற்கு பிறகு ஒன்றாய் இருக்க வேண்டும் அர்த்தமில்லை. கிறிஸ்துவை நாமெல்லாம் வழிபடுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாமெல்லாம் ஒரு இடத்தில் இருக்கிறோம் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். பல வேறான வழிகளில் நாம் கிறிஸ்துவை வழிபட்டாலும், நாமெல்லாம் ஒன்றாய் இருக்கிறோம். ஒன்றாய் இருக்க வேன்டும் என்ற நமது எண்ணமே, நம்மிடையே உள்ள ஓர் அங்கீகாரமாகும். நாமெல்லாம், ஒரே உடலின் பல பாகங்கள் என்பதை ஏற்றுகொள்வதே, ஒருவொருக்கு ஒருவரின் உதவி தேவை என்பதை அறிந்து எல்லோரும் ஒன்றாய் அவரவர் கடமைகள் செய்ய உதவும்.
இறைவன் யேசுவில், நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது, இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறோம் என்ற அர்த்தமாகும். நமது ஒற்றுமை, கடவுளரசிடமிருந்து வந்தது. இந்த உலகின் இருட்டிலிருந்தோ, சாத்தானிடமோ இருந்து வந்தது இல்லை. மேலும் இந்த ஒற்றுமை, நாம் நம்முடைய பாவங்களை களைந்தும், நமது ஒன்றான உடலின் (அனைவரின்) பாவங்களை தூக்கி எறிந்தால், இந்த ஒற்றுமை மேலும் பலப்படும்.
யேசு கடவுளிடம் இவ்வாறு சொல்கிறார் " உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது."
யேசுவை அன்பு செய்கிற, அவரை பின் செல்பவர்கள், அவருக்கு சேவை செய்கிறவர்கள், அவர்கள் எந்த பின் புலத்தை உடைய்வர்களாக இருந்தாலும், எந்த இனத்தவர் ஆனாலும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரிசுத்த குடும்பம். சிலுவையின் ஒரே சைடில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம். அதுதான் நித்திய வாழ்வின் விடுவிப்பு ஆகும்.
எனினும், நாமே நாம் பாவம் செய்ய அனுமதித்தால், இந்த உலகம் என்ன நினைக்கிறதோ, அதே மாதிரி நினைத்தும், தவறான என்னங்களாலும்,மற்ற கிறிஸ்தவர்களை நோக்கி நிந்தனை செய்வதும், நாமே, நமது கிறிஸ்தவர்களுக்குள், பிளவை உண்டாக்குகிறோம். இந்த வேறுபாடு, கடவுளரசிடமிருந்தும் நாம் நம்மில் பிரிவை உண்டாக்குகிறோம். யேசு வேன்டிக்கொண்ட ஒற்றுமையை நாம் உடைக்கிறோம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, May 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment