Friday, May 1, 2009

மே 3, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 3, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் நான்காம் ஞாயிறு

Acts 4:8-12
Ps 118:1, 8-9, 21-23, 26, 28-29
1 John 3:1-2
John 10:11-18

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10
11 நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.12 ' கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.13 கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.14 நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன்.15 அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.16 இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.17 தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.18 என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நானே நல்ல ஆயன் என்று யேசு கூறுகிறார். நாம் தான் ஆடுகள், நமக்காக அவர் உயிரையே விட்டார். நம்முடைய நலனுக்காக, அவரின் மனித ஆசைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, அவருடைய தூக்கம், சோர்வு, இந்த குற்ற தன்டனையிலிருந்து ஒதுங்குவது , அதனால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சிலுவை மரணம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு நமக்காக உயிர் துறந்தார்.
நாம் தான் ஆடுகள், நமது ஆயனின் குரலை தெரிந்து கொண்டு, நல்ல மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்து செல்வார், என்று ஆர்வத்தோடு அவர் பின் செல்வோம். யேசு நமக்கு நல்ல ஆயனாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோம். அவருடைய பாதுகாவலும், வழிகாட்டுதலும் மேலும், அவரின் அன்பு நமக்கு தேவை என விரும்புகிறோம்.

எனினும், சில சமயங்களில், அவருடைய குரலை கேட்க மறந்துவிடுகிறோம். நமது வாழ்வு நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லையென்றால்,எப்படி இந்த வாழ்வு இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அப்படி இல்லையென்றால், இறைவனின் குரலை நாம் கேட்காமல் போய்விட்டதற்கான வாய்ப்பாக அமைகிறது. இப்படி செயல்குழந்து போகும்போதும், பயத்தினாலும், யேசு மேய்ப்பர், இந்த ஆட்டு கூட்டத்தை விட்டு சென்று விட்டார் என்று நாமே அனுமானித்து கொள்கிறோம். கானாமற் போன ஆடுகளை தேடி சென்று விட்டார், நம்மை தனியே விட்டு விட்டு. என்று நாம் நினைக்கிறோம். அதுவும் ஓநாய்கள் நம்மை தாக்கும்போது, அவர் எப்படி நம்மை விட்டு போகலாம். ஏன் கானாமற்போன ஆடுகளுக்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து கொள்கிறார் ? நல்ல ஆடுகளை நிற்கதியில் விட்டு விட்டு.

எப்படி இருந்தாலும், எவ்வளவு அதிக நேரம் செலவழித்து, அதிக தூரம் போயும், கானாமற் போன ஆடுகளை கொண்டுவந்தாலும், நம்மை அவர் என்று விட்டு செல்வதில்லை. எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார். நம் வாழ்வு நாம் விரும்பிய படி செல்லாவிட்டால், யேசு நம்மை ஒதுக்கிவிட்டார் என்று அர்த்தமில்லை. அவர் நம்மை வேறு திசையில் செல்ல சொல்கிறார், ஆனால் நாமோ அதனை நம்பாமல் வேறு பக்கம் செல்கிறோம்.

நாம் அவர் சொல்கிற திசையில் செல்ல விரும்பவில்லை. ஏற்கனவே நாம் இருக்கும் மேய்ச்சல் நிலத்திலேயே இருக்க விரும்புகிறோம். ஒவ்வொரு முறையும் யேசுவின் மேய்ப்பர்கள் தட்டி தட்டி வேறு பக்கம் போக சொல்லும்போது, எரிச்சல் அடைகிறோம். நாம் யேசுவை நம்பி, அவர் சொல்வதை கேட்ட்டால் தான்,அவருடைய ஆசிர்வாதங்களை நம்மல் அறிய முடியாது. அவர் பேசுவது அனைத்தையும் நாம் கூர்ந்து கேட்க ஆரம்பிப்போம். முதல் முறை அவர் கூறுவது நமக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: