ஆகஸ்டு 2, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18வது ஞாயிறு
Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 6
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், யேசு "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதாக இருந்தால்: உங்களுடைய ஒவ்வொரு தினத்திலும், உங்கள் ஆன்மாவை நல்ல விதமாக பாதுகாத்து, உங்கள் மரண முடிந்து நித்திய வாழ்வை அடையும் வரை அதை பாதுகாத்து செல்ல கடுமையாக உழையுங்கள்.
யேசு "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் " என்று கூறுகிறார். ஏன் யேசு அதனை "செயல்" என கூறுகிறார்?
முழுமையாக அவரை நம்புவதற்கு, யேசுவின் மேல் உள்ள சந்தேகங்கள் மற்றும் அவநம்பிக்கைகள் நம்மிடம் அப்பப்பொழுது இடையே தோன்றி, நம்மை அவர் மேல் அவநம்பிக்கை உன்டாக்கும், அதனையெல்லாம், முழுவதுமாக துடைத்தெறிய வேண்டும். அவர் கூறிய வார்த்தை மேல் நம்பிக்கை கொன்டு (திருச்சபையின் போதனைகளைய்ம் சேர்த்து) , கிறிஸ்துவின் வழியில் நாம் செல்ல நமது முழு விருப்பத்தையும் உறுதி படுத்த வேண்டும்.
சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்த கூடிய தடைகளை நாம் கண்டறிய வேண்டும் , அதனால் ஏற்படும் பயத்தை போக்கி, உண்மையை இன்னும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பயமும், நமது பரிசுத்த வாழ்வில் இடையூறாக இருந்தால், அது பொய்யினால் பிறந்த பயமாகும்.
இயேசு அவர்களிடம், ' வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். கிறிஸ்து, ஒவ்வொரு திருப்பலியிலும் அவரே உணவாக நமக்கு கொடுப்பதை இங்கே நமக்கு தெரியப்படுத்துகிறார். திவ்ய நற்கருணையால் உங்களை எப்படி இன்னும் நன்றாக வளர்க்க இன்னும் என்ன என்ன செயல்கள் நீங்கள் செய்ய வேண்டும்.? யேசு தான் திவ்ய நற்கருணையில் இருக்கிறார், உங்களுக்காக காத்திருக்கிறார் என்பதை நம்ப வேறு எதுவும் தடையாக உள்ளதா ?
திவ்ய நற்கருணையை பெறுவதற்கு எதுவும் உங்களை தடுத்து நிறுத்துகிறதா? அந்த தடுப்பிற்கு உடனே பரிகாரம் செய்யுங்கள். உங்கள் நித்திய ஆன்மாவிற்கு நிச்சயம் ஒரு வேறுபாட்டை உணர்வீர்கள். யேசுவோடு இனைவதற்கு உண்மையாக நீங்கள் ஆக்கபூர்வமாக உங்கள் செயல்களை காட்டினால், யேசூ உங்களுக்குள்ள வழியை சீராக்குவார்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment