Friday, October 30, 2009

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
அனைத்து புனிதர்களின் திருவிழா
Rev 7:2-4, 9-14
Ps 24:1bc-6
1 John 3:1-3
Matt 5:1-12a
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 5
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)
மிகவும் குண்டான மனிதன் குதிரை மேல் ஏறிய கதை உங்களுக்கு தெரியுமா? குதிரை மேல் ஏற முயற்செய்யும்போதெல்லாம், அவன் போராட வேண்டி இருந்தது. அப்போது அவர் எல்லா புனிதர்களிடத்திலும், "மோட்சத்தில் உள்ள எல்லா புனிதர்களே, எனக்கு உதவி செய்யுங்கள்!" என்று வேண்டி கொண்டு, குதிரை மேல் ஏற முயற்சி செய்வார், ஆனால் ஒரு புறத்திலிருந்து ஏறி, மறு புறத்தில் விழுந்து விடுவார். அதன் பிறகு அவர் சொல்வது 'புனிதரில் பாதி பேர் தான் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள், அடுத்த முறை மீதி பாதி பேரும் உதவி செய்ய வேண்டும்" என்று சொல்வார்.

புனிதர்களிடமிருந்து எவ்வளவு உதவி நீங்கள் பெறுகிறீர்கள்? ஏன் கத்தோலிக்க திருச்சபை இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? மரணமடைந்த சில மனிதர்களை புனிதர்கள் என்று கூறி அவர்களுக்கு மரியாதை செய்து, அவர்கள் சிலையை வைத்து, அவர்களிடம் ஏன் வேண்டிகொள்ள வேண்டும். உண்மையாக நாம் அவர்களிடம் வேண்டுவதில்லை, (கன்னி மரியாளிடம் கூட), ஆனால், அவர்களையும் நமக்காக வேண்டிகொள்ள சொல்கிறோம். (அருள் நிறைந்த மரியே வில், பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டி கொள்ளவும்)

உங்கள் நண்பர்களிடம் உங்களுக்காக வேண்டிகொள்ள சொல்லி இருக்கிறீர்கள்? உங்களோடு சேர்ந்து ஜெபிக்க சொல்லியிருக்கிறீர்களா? மோட்சத்தில் நண்பர்களோடு இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்!

புனிதர் பட்டம், திருச்சபையில் கொடுப்பது நமக்கெல்லாம் உறுதியாக சொல்லப்படுகிறது, என்னவெனில், இந்த புனிதர் கடவுளோடு மோட்சத்தில் முழு அருளோடு இணைந்துள்ளார் என்பதனை உறுதியாக திருச்சபை சொல்கிறது. இந்த புனிதர் பட்டம் கொடுக்கும் முன்பு, திருச்சபை முழுதும் பரிசோதித்து, பல அடுக்கு முறை திட்டங்கள் முடிந்த பின்பு தான் கொடுக்கபடுகிறது. அற்புதங்கள் பல கண்ட பிறகுதான் இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது.
திருவெளிப்பாடு 7:2-14 , எல்லா பரிசுத்த ஆண்மாவும் இறைவனோடு சேர்ந்து இருப்பதை குறிக்கிறது. இந்த இனைந்த வாழ்வை, யேசுவின் நண்பர்கள் அனைவரும் பங்கிட்டு கொள்கின்றனர். யேசுவின் நண்பர்கள் அனைவரும், உங்களின் நண்பர்கள், கடவுளோடு இனைந்து முழு பரிசுத்ததுடன் இருப்பவர்கள் நமக்கும் நண்பர்களாவர். புனித அவிலா தெரசா "இறைவனுக்காக அனைவரையும் அன்பு செய்பவர்களை, கடவுள் ஒருபோதும் ஒதுக்கி விடமாட்டார்" (The Way of Perfection, Chap. IX, 3). என்று கூறுகிறார்.

எனினும், புனிதர்களின் நட்பையும், அவர்களின் அன்பையும் புரிந்து கொள்ள, அவர்கள் நம் மேல் உள்ள அக்கறையையும் தெரிந்து கொள்ள, நாம் பரிசுத்த ஆவியுடன் நல்ல உறவுடன், தனிப்பட்ட முறையில் நெருக்கம் உருவாக்கி கொள்ள வேண்டும். கடவுளின் ஆவியில் தான், புனிதர்களோடு நம்மால் தொடர்பும் நட்பும் கொள்ள முடியும்.

எந்த புனிதர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள்? நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்றை , கதைகளை படியுங்கள். அவர்களுடைய சொந்த வார்த்தைகளை கேளுங்கள். யேசுவிடம் கேட்டு, புனிதர்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். பரிசுத்த ஆவியின் மூலம், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, உங்கள் பரிசுத்த வாழ்விற்கு, இன்னும் என்ன உதவி தேவை என்று கேளுங்கள்.

புனிதர்கள் நமக்கு என்ன உதவி செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாவிட்டாலும் கூட, நமக்கு பல நல்ல செயல்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நமது பரிசுத்த வாழ்விற்கு உதவி செய்து வருகிறார்கள்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 23, 2009

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ' இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கத்தத் தொடங்கினார்.48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.49 இயேசு நின்று, ' அவரைக் கூப்பிடுங்கள் ' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ' துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ' என்றார்கள்.50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.51 இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.52 இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

(thanks to www.arulvakku.com)


யேசு நமது வாழ்வை தொட்டவுடன்- நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்தவுடன், நமது வாழ்வை மாற்றி , அதன் உள்ள அர்த்தத்தை, நமக்கு விளக்கியவுடன், நமது வாழ்வில் சில வேறுபாடுகளை காட்டியவுடன்- பிறகு நாம் என்ன செய்கிறோம்? நமது தெய்வ அருளாள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எல்லா பலன் களையும் நாம் பெறுகிறோமா?

கடவுள் நம்மை எந்த வழியிலும் செல்ல வற்புறுத்த்தவில்லை. நாம் அவரோடு பேரம் பேசி, "நீர் என்னை குணமாக்கினால், நாம் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" என்று கூறினாலும், யேசு பர்டிமோஸிடம் சொன்னது போல், இன்றைய நற்செய்தியில் குணமாக்கியவுடன் சொன்னது போல், "உன் வழியில் செல், உனது விசுவாசம் உன்னை குணமாக்கியது" என்று நம்மிடம் கூறுகிறார். நாம் எங்கே போவது?
சில நேரங்களில், யேசுவின் போதனை, அல்லது அவரது கட்டளை, நிறைய பொருளை கொண்டிருக்கும். அவர் சில நேரங்களில், யாரையாவது குணமாக்கும் பொழுது, (பாவத்திலிருந்து) , "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார். ஆனால், எங்கே போவது?

நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும், முயற்சியும் மிகவும் முக்கியமானது. அடுத்த அடி எங்கே வைக்கிறோம், எப்படி குணமாகியபின் நாம் அடுத்த செயல் செய்கிறோம் என்பதை பொருத்து, நமக்கு கிடைத்த அருள் பலமடங்காகுமா அல்லது அத்தோடு நின்று விடுமா என்பதாகும். அதனை நம்மால் ஆருடம் கூறமுடியாது. இதனால் நடைபெறபோகும் விளைவுகளை யேசு ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், இதற்கடுத்து நடைபெறபோகும் அனைத்தும் நம் கையில் உள்ளது.

யேசு பர்டிமேயுவை பார்த்து "உன் வழியில் செல்" என்று கூறினார். பர்த்திமேயு இந்த சுதந்திரத்தை வைத்து கொண்டு என்ன செய்தார்? அவர் "யேசுவின் வழியில் பின் சென்றார்". எது நல்ல வழியோ, அவ்வழியை அவர் தெரிந்து கொண்டார். அவரது எதிர்பாராத விதத்தில் மாறியது. அவர் குருடராக இருந்ததால் மட்டுமில்லை, இப்போது அவருக்கு கண் தெரியும், ஏனெனில், அவர் யேசுவிடமிருந்து கற்றுகொள்ள விரும்பினார், மேலும் யேசுவின் பின் செல்பவராக இருக்க விரும்பினார்.


கிறிஸ்துவின் மூலம், நாம் பயன் அடைந்த பின், அவர் அருள் பெற்ற பின், எத்தனை முறை பழைய தவறான வழியில் செல்கிறோம்? யேசுவை பின் தொடர்ந்தால், புது இறைசேவையில் ஈடுபட்டால், நமது வேலையை மாற்றினால், அல்லது நண்பர்களை மாற்றினால், பழைய வாழ்வையே நாம் மீண்டும் ஈடுபட்டால், யேசுவை பின் தொடர்வதற்கு அர்த்தமில்லை. ஆனால் யேசுவை பின் தொடர்வது என்பது, மிகப்பெரிய பந்தயமாகும். நமது விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

யேசுவை பின் செல்வது, அவரிடம் நாம் கற்றுகொள்வது தான் நமது முழு முதல் வேலையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடும் நாம் இணையும் ஒவ்வொரு தருனமும் நம்மை மாற்ற வேண்டும்- திருப்பலியில் கிறிஸ்துவோடு நாம் மீண்டும் மீண்டும் இனைகிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 16, 2009

18 அக்டோபர் 2009 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.


(thanks to www.arulvakku.com)

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

நம்முடைய சுய விருப்பங்கள், நம் கனவுகள், நமது தேவைகள் எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளின் தொண்டனாக இருப்பது ஒன்றும் அவரின் அடிமை என்று அர்த்தமில்லை. இது ஒரு மிகப்பெரும் மரியாதை மற்றும் ஆசிர்வாதம் ஆகும். ஏனெனில், கிறிஸ்து செய்த மீட்பின் பணியாளராக நாம் யேசுவோடு சேருகிறோம்.


கிறிஸ்துவை போல நாமும் கடவுளின் பணியாளராக இருப்பதினால், கடவுள் எப்படி கிறிஸ்துவை நடத்தினாரோ, அதே போல நம்மையும் நடத்துகிறார். நமது கடவுள் நம்மை மரியாதை குறைவாக நடத்த மாட்டார், நமக்காக அதிகம் வேலையும் அல்லது அதிகமாக நமக்கு எதையும் தரப்போவதுமில்லை.

இதற்கு மாற்றாக, நாம் இந்த உலக வாழ்வில், இங்கு உள்ள சொத்துகள், செல்வங்கள் மேல் அதிகம் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாக இருப்பது ஆகும். இந்த உலகத்தில் அடிமையாக இருப்பது, நம்மை சின்னவனாக காமிக்க போவதில்லை, ஆனால், கடவுள் எப்படி நம்மை அதிக மதிப்புடன் படைத்தாரோ, அதிலிருந்து நாம் குறைந்து விடுகிறோம்.


கிறிஸ்து நமக்கு கொடுக்கும் அதிகாரம், கிறிஸ்துவிற்கு உள்ளது போலவே நமக்கும் கொடுத்திருக்கிறார்: இறையரசின் எல்லா பலன் அனைத்தையும் நாமும் அனுபவிக்கலாம், பரிசுத்த வாழ்வை நமது விருப்பத்துடன் வாழலாம், அதனால் கடவுளின் பார்வையில் மிக பெரியவர்களாக, அவரின் அன்பானவராக இருப்போம்.

இந்த சுதந்திரத்தில், மிக பெரிய சந்தோசம் உள்ளது. எனினும், கிறிஸ்துவின் வழி ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரங்களில் நம்மை சிலுவைக்கு அழைத்து செல்லும், ஆனால் இந்த துயரங்கள் நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகரிக்கும், மேலும் மோட்சத்தில் இன்னும் பெரியவனாக ஆவோம். நமது தியாகங்கள் , மற்றவர்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று அறிந்து, அந்த தியாகத்தினால் நமது பரிசுத்த வாழ்வு வளர்கிறது என்றும் நாம் அறிந்தால், அந்த துயரங்களை நாம் தாங்கி கொள்ள இயலும். அது தான் நமக்கு ஆசிர்வாதம் ஆகும்.

சிலருடைய ஜெபங்கள், வேண்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனவர்களை உங்களுக்கு தெரியுமா? கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. அவரால் நமக்கு உதவ முடியாது என்று அர்த்தமில்லை. நம்மை அவரின் பணியாளராக கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிறார். யேசு நம் மூலம், பலருக்கு உதவுகிறார்.

நம் முதல் இலக்கு கடவுளோடு உள்ள உறவாகும், அதன் மூலம், அளப்பதற்கரிய பல அன்பளிப்புகளை, நாம் வாங்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நம்மிடம் இல்லாததை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. யேசு நமக்கு பணியாளராய் இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் ப்ரசன்னமாய் இருந்து , மற்றவர்களுக்கு நாம் உதவ முடியாது.


(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 10, 2009

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28வது ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், \' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? \' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் \' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், \'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு அந்த பணக்கார வாலிபனை கேட்கிறார். "' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே" என்று அவன் பதில் கூறுகிறார். அதில் இரண்டு விதமான செய்தி உள்ளது.

முதலாவதாக, அந்த இளம் வாலிபன், உண்மையாக யேசு நல்லவர் மற்றும் நல்ல குரு என்று நம்புவனாக இருந்தால் (யேசுவை, அவரை புகழ்ந்து அவரோடு சேர்ந்து இருக்க நினைத்திருந்தால்) , மேலும் அவருடைய அற்புத காரியங்கள் மற்றும், பாவமில்லா அவரின் வாழ்வை நம்புவனாக இருந்தால், இவையெல்லாம் யேசு கடவுள் தான் என்று அவன் சொல்வது சரியாக இருக்கும். இரண்டாவது, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, இன்னும் தாழ்மையுள்ளவனாக மாற்ற உதவியது. யேசு சொன்னதை, அவன் உண்மையாக நம்பினால், கடவுள் நல்லவர், அவனையும் சேர்த்து, மற்றவர்கள் யாரும் கடவுளை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்று அறிந்தவனாக இருந்தால், அவருடைய கட்டளைகள் மிக சரியாக கடைபிடிப்பான். இது மாதிரியான ஒரு புரிதல் அவனுக்கு இருத்திருந்தால், அவனுடைய இதயத்தை திறந்து, அவன் யேசுவை நோக்கி திரும்பியிருக்க வேண்டும்.


உங்களுடைய இதயத்தை, இந்த உண்மை எப்படி பாதிக்கிறது? யேசு இவ்வாறு சொல்கிறார், "கடவுளை போல் பரிசுத்தமாக இருப்பதற்கு, இந்த பூமியில் உள்ள உங்கள் செல்வங்கள், நிலபுலங்கள், அபிலாசைகள் இவை அனைத்தையும் விட்டு விட்டு, கடவுளின் இறையரசின் விசயங்களோடு ஒன்றினால் தான் முடியும்"

கடவுள் நம்மை அனாதையாகவோ அல்லது ஏழையாகவோ ஆக சொல்லவில்லை. எல்லாவற்றையும் "விட்டுவிட" வேண்டும் என்பதற்கு அர்த்தம், எல்லாவற்றையும் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதாகும். நாம் நம்முடைய வருமானங்களையும், சொத்தையும் வைத்து கொள்வது என்பது நமக்கு நல்லதுதான், அதுவும் கடவுள் கொடுத்தது தான். (எடுத்து காட்டாக, கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளால், அதன் மூலம் கிடைத்த வருவாய் மூலம், வாங்க்கும் சொத்துகள்), மேலும், அதனை வைத்து, நாம் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால், உண்மையான சந்தோசம், கடவுளின் தோழனாக, அவரின் மகனாக, மகளாக இருந்து கடவுளின் செல்வங்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் கருவியாக இருந்தால் தான் நமக்கு சந்தோசம்.

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், செல்வங்களை மற்றவர்களோடு பகிரிந்து கொள்வது, நமக்கு மிக பெரிய சந்தோசமான விசயம் தான். அப்படி செய்தால் தான், நாம் நம் செல்வங்களை ஆள்பவனாக இருப்போம், இல்லையென்றால், அந்த செல்வங்கள் நம்மை ஆள ஆரம்பித்து விடும்.

நம்மால் மட்டுமே, நாம் சேர்ந்து இருக்கும், நம்மோடு ஒட்டிகொண்டிருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வரமுடியாது. இது மிகவும் கடினமாகும், நம்மோடு இருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வர, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாகும். அதிலும் எல்லாவற்றையும் , மற்றவர்களின் நலங்களுக்காக கொடுப்பது என்பது அறவே கஷ்டமாகும். ஆனால் இப்படி வாழ்வது தான், முழுமையான வாழ்வாகும்.! இப்படி வாழத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பூமியின் செல்வங்களோடு நாம் சேர்ந்தே இருப்பது, பாவமாகும், அது நம்மை கடவுளிமிருந்து அதிக தூரத்திற்கு இட்டு செல்லும், மேலும் பலரை புன்படவைக்கும்.

நல்ல செய்தி என்ன என்றால், யேசு நம் பாவங்களை ஏற்று, சிலுவையில் மரணமடைந்து வெற்றி பெற்றார், அதன் மூலம் நமக்கு பரிசுத்த ஆவியை பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு தேவையில்லாத, எந்த ஒரு பொருளோடும், நாம் சேராமல், நமது இந்த பூமி வாழ்வு இருக்க வேண்டும். இப்படி செய்தால், நாம் மோட்சத்தின் செல்வங்களை பெறுவோம்.
(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 2, 2009

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு

Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ' என்றார்.13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ' சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

(thanks to www.arulvakku.com)


யாராவது உங்களை விரும்பாமலும், அன்பு காட்டாமலும் உள்ளவரை, நீங்கள் அன்பு காட்டியதுண்டா? கடவுளின் அதீத அன்பை நீங்கள் அனுபவித்து, அதன் மூலம், நீங்கள் மற்றவர்களிடம் அந்த அன்பை கொடுத்ததுண்டா? அவர்கள் கரடுமுரடான ஆளாக இருந்தாலும், கடவுளின் அன்பை அவர்களுக்கு அளித்ததுண்டா?

திருமணம் ஆனவர்கள் அனைவரும்,அவரவர் துணைவரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அன்பு செய்ய வேண்டும். இப்படி அன்பு செய்வது, இருவருக்கும் பொருந்தும் என நாம் நினைக்கிறோம். நாம் எந்தளவிற்கு ஆர்வத்தோடு அன்பு செய்கிறோமோ அதே ஆர்வத்தோடு, நமது துணைவரும் நம்மை அன்பு செய்வார்கள்.

இருந்தாலும், அதிக திருமணங்களில் ப்ரச்சினைகளை நாம் பார்க்கிறோம், அந்த ப்ரச்சினைகள் களையப்பட , இறைவனின் அன்பும், நமது வாழ்வில் அவரின் பங்களிப்பும் இறுதி வரை தேவைப்படுகிறது. அதனால் தான் நமக்கு திருமண அருட்சாதனம் தேவைப்படுகிறது. சாதாரண அரசாங்க திருமண சடங்குகளை விட, கோவிலில் நாம் திருமணம் செய்கிறோம். தெய்வீக அருள் இருந்தால் தான், நம் திருமணம் நீண்ட காலம் நீடித்து இருக்க கடவுள் விரும்புவது போல், நாம் தொடர்ந்து ஒருமைபாட்டுடன் இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில், மோசேயின் சட்டத்தில், விவாகரத்து அனுமதிக்கப்பட்டது, ஏனெனில், மக்கள் கடின மனதுடையவர்களாக இருந்தார்கள், அதனால் தான் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது என்று யேசு விளக்குகிறார். இது விவாகரத்திற்கு அனுமதி வழங்குவது அல்ல. யேசு நம்மையெல்லாம் அவர் இதயத்தை போல நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.


மோசேயின் காலத்தில், திருமணங்கள் பிரச்சினையாகிறபொழுது, அல்லது திருப்தியற்ற நிலையில் உள்ளபோது, அதிக கணவர்கள், அவர்கள் மனைவியை விட்டு விலகி ஒதுக்கி வைத்திருந்தனர். திருமணம் - ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும், விவாகரத்து ஆன ஒரு பெண், மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் , அதற்கான அனுமதி சட்டத்தில் உள்ளது. அந்த சட்டம் அவர்களை காத்து கொள்வதற்கு இப்படி அனுமதி அளித்தது. ஆனால் அதனால், விவாகரத்து என்பதை ஒருபோதும் ஒப்புகொள்ள முடியாது.

இறுதிவரை ஒன்றாக இருப்பது என்பது தெய்வத்தின் அருள், அவரின் அன்பளிப்பு, இது தான் கடவுளோடு நமக்குள்ள தொடர்பிற்கு, நம்மிடம் உள்ள ஆதாரமான விசயமாக உள்ளது. நாம் இதனை நம்பவில்லையென்றால், கடவுள் நம் மேல் எப்பொழுது அன்பு கொண்டிருக்கிறார் என்று நாம் எப்படி நம்ப முடியும்? - நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும்? மேலும், நம்மை பார்க்கிறவர்கள் என்ன நம்பிக்கையில் இருப்பார்கள்.


நினைவில் வைத்து கொள்ளுங்கள்: சில நேரங்களில், உங்கள் காதலரோ , காதலியோ கிறிஸ்துவின் சிலுவைக்கு சென்று அன்பிற்காக ஜெபிக்கலாம். திருமண அருட்சாதனமே, கிறிஸ்துவின் கருணையுள்ள அன்பின் வெளிப்பாடுதான்.

கடவுள் நம்மை, அவரோடு எப்பொழுது இணைந்தே இருக்க வேண்டும் என நம்மை கட்டாயபடுத்தவில்லை. நாம் அவரை விட்டு ஒதுங்கி சென்றாலும், அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார். அதே போல், அன்பு கிடைக்காத மனைவியோ அல்லது கணவரோ தொடர்ந்து அவர் துணை மேல் அன்பு கொண்டு தான் இருக்கிறார். வெகு தூரத்தில் இருந்தால் கூட. அன்புடன் தான் இருக்கிறார். இந்த குணம் (அன்புடன் இருப்பது) எல்லா நிலையில் உள்ளவர்க்கும் பொருந்தும். (நண்பர்கள், குருவானவர்கள், பொது நிலையினர், தந்தையர்கள்) .


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm