Friday, October 30, 2009

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
அனைத்து புனிதர்களின் திருவிழா
Rev 7:2-4, 9-14
Ps 24:1bc-6
1 John 3:1-3
Matt 5:1-12a
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 5
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)
மிகவும் குண்டான மனிதன் குதிரை மேல் ஏறிய கதை உங்களுக்கு தெரியுமா? குதிரை மேல் ஏற முயற்செய்யும்போதெல்லாம், அவன் போராட வேண்டி இருந்தது. அப்போது அவர் எல்லா புனிதர்களிடத்திலும், "மோட்சத்தில் உள்ள எல்லா புனிதர்களே, எனக்கு உதவி செய்யுங்கள்!" என்று வேண்டி கொண்டு, குதிரை மேல் ஏற முயற்சி செய்வார், ஆனால் ஒரு புறத்திலிருந்து ஏறி, மறு புறத்தில் விழுந்து விடுவார். அதன் பிறகு அவர் சொல்வது 'புனிதரில் பாதி பேர் தான் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள், அடுத்த முறை மீதி பாதி பேரும் உதவி செய்ய வேண்டும்" என்று சொல்வார்.

புனிதர்களிடமிருந்து எவ்வளவு உதவி நீங்கள் பெறுகிறீர்கள்? ஏன் கத்தோலிக்க திருச்சபை இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? மரணமடைந்த சில மனிதர்களை புனிதர்கள் என்று கூறி அவர்களுக்கு மரியாதை செய்து, அவர்கள் சிலையை வைத்து, அவர்களிடம் ஏன் வேண்டிகொள்ள வேண்டும். உண்மையாக நாம் அவர்களிடம் வேண்டுவதில்லை, (கன்னி மரியாளிடம் கூட), ஆனால், அவர்களையும் நமக்காக வேண்டிகொள்ள சொல்கிறோம். (அருள் நிறைந்த மரியே வில், பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டி கொள்ளவும்)

உங்கள் நண்பர்களிடம் உங்களுக்காக வேண்டிகொள்ள சொல்லி இருக்கிறீர்கள்? உங்களோடு சேர்ந்து ஜெபிக்க சொல்லியிருக்கிறீர்களா? மோட்சத்தில் நண்பர்களோடு இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்!

புனிதர் பட்டம், திருச்சபையில் கொடுப்பது நமக்கெல்லாம் உறுதியாக சொல்லப்படுகிறது, என்னவெனில், இந்த புனிதர் கடவுளோடு மோட்சத்தில் முழு அருளோடு இணைந்துள்ளார் என்பதனை உறுதியாக திருச்சபை சொல்கிறது. இந்த புனிதர் பட்டம் கொடுக்கும் முன்பு, திருச்சபை முழுதும் பரிசோதித்து, பல அடுக்கு முறை திட்டங்கள் முடிந்த பின்பு தான் கொடுக்கபடுகிறது. அற்புதங்கள் பல கண்ட பிறகுதான் இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது.
திருவெளிப்பாடு 7:2-14 , எல்லா பரிசுத்த ஆண்மாவும் இறைவனோடு சேர்ந்து இருப்பதை குறிக்கிறது. இந்த இனைந்த வாழ்வை, யேசுவின் நண்பர்கள் அனைவரும் பங்கிட்டு கொள்கின்றனர். யேசுவின் நண்பர்கள் அனைவரும், உங்களின் நண்பர்கள், கடவுளோடு இனைந்து முழு பரிசுத்ததுடன் இருப்பவர்கள் நமக்கும் நண்பர்களாவர். புனித அவிலா தெரசா "இறைவனுக்காக அனைவரையும் அன்பு செய்பவர்களை, கடவுள் ஒருபோதும் ஒதுக்கி விடமாட்டார்" (The Way of Perfection, Chap. IX, 3). என்று கூறுகிறார்.

எனினும், புனிதர்களின் நட்பையும், அவர்களின் அன்பையும் புரிந்து கொள்ள, அவர்கள் நம் மேல் உள்ள அக்கறையையும் தெரிந்து கொள்ள, நாம் பரிசுத்த ஆவியுடன் நல்ல உறவுடன், தனிப்பட்ட முறையில் நெருக்கம் உருவாக்கி கொள்ள வேண்டும். கடவுளின் ஆவியில் தான், புனிதர்களோடு நம்மால் தொடர்பும் நட்பும் கொள்ள முடியும்.

எந்த புனிதர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள்? நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்றை , கதைகளை படியுங்கள். அவர்களுடைய சொந்த வார்த்தைகளை கேளுங்கள். யேசுவிடம் கேட்டு, புனிதர்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். பரிசுத்த ஆவியின் மூலம், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, உங்கள் பரிசுத்த வாழ்விற்கு, இன்னும் என்ன உதவி தேவை என்று கேளுங்கள்.

புனிதர்கள் நமக்கு என்ன உதவி செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாவிட்டாலும் கூட, நமக்கு பல நல்ல செயல்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நமது பரிசுத்த வாழ்விற்கு உதவி செய்து வருகிறார்கள்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: