Friday, September 9, 2011

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Sir 27:30--28:9
Ps 103:1-4, 9-12
Rom 14:7-9
Matt 18:21-35

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18


மன்னிக்க மறுத்த பணியாள் உவமை
21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ' என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் ' என்றான்.27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் ' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ' பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். '
(thanks to www.arulvakku.com)

இயேசு நமக்கு சொல்லி கொடுத்த ஜெபத்தில் "எங்களுக்கு தீமை செய்தவர்களை , நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும்" என்று கூறியுள்ளதை, இன்றைய நற்செய்தி விளக்கி சொல்கிறது.

இதில் மிகவும் சக்தி பெற்ற ஒரு வார்த்தை என்னவென்றால், "போல" - நாங்கள் மன்னிப்பது போல, அதே அளவிற்கு, அதே வழியில் என்பது தான்.
நாம் யாரையாவது மன்னியாது இருந்தால், யாருக்காவது , நாம் முழுமையான அன்புடன் ஜெபம் செய்யாமல் இருந்தால், நாம் பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று ஜெபிக்கும் பொழுது, மேற்கூறிய வரிகள் வரும்பொழுது நாம் சொல்லாமலே இருக்கலாம்.
சில நேரங்களில், "மறப்பதும்" , "மன்னிப்பதையும்" சேர்த்து குழப்பிவிடுகிறோம். நாம் கடனாளிகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. மறப்பது என்பது ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் - ஞாபகத்திலிருந்து நாம் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும் - மீண்டும் பணம் கட்ட சொல்லியோ அல்லது பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்றோ இருக்க கூடாது.

மன்னிக்காமல் இருப்பது ஒரு வகையான தன்டனை ஆகும்: இது திருப்பி செலுத்தும் நேரம் ஆகும். எடுத்து காட்டாக , நாம் கோபத்துடன் இருந்தால், நாம் கோபத்தில் இருக்கும்போது, பாவிகள் திருந்தி விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் அது நடக்க போவதில்லை.

அடுத்ததாக இன்னும் பல நீங்கள் செய்தால் அது எதிர்பார்த்தமாதிரி நடக்க போவதில்லை: மேலும் அதிருப்தியை தொடர்ந்து கொண்டிருப்பதும், அந்த தவறான நினைவுகளை , அதனாலும் நமக்கு ஏற்படும் வலியோ பறந்து விடுவதில்லை. இன்னும் அந்த வலி உங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் மற்றவர்களை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவித்தால் தான் நமக்கு நம்மை பாதிக்கும் விசயங்கள் நம்மை விட்டு விலகும். (அவர்கள் மனம் திரும்ப நினைத்தாலும், , இல்லையென்றாலும், அவர்கள் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டலும்), நாம் நம்மையே சுதந்திரமாக உணர்வோம், அப்பொழுது நமக்கும் குணம் அடைவோம்.

இது தான் நாம் நமக்கே கொடுக்கும் மிகவும் அன்பான அன்பளிப்பு ஆகும். அதுவே மற்றவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு ஆகும். அவர்கள் அதனை புரிந்து கொள்ளாவிட்டால் கூட , கடவுள் புரிந்து கொள்வார்.
© 2011 by Terry A. Modica

No comments: