செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 21
இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, பக்தியிலும், விசுவாசத்த்லும், சரியாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருபவர்களுக்கு ஒரு அதிர்ச்சையை கொடுக்கும். ஏனெனில் அவர்கள், கடவுளின் விருப்பத்தை எந்த அளவிற்கு சரியாக செய்கிறார்கள் என்று சுய பரிசோதனை செய்தது கிடையாது. வரி வசூலிப்போடும், விலைமகளிரும், (வெட்ககேடான, அசூத்தமானவர்கள் என்று சமூகம் அவர்களை தூற்றியது) ,சமய அறிஞர்களை விட முன்னே இறையரசிற்கு செல்வார்கள் என்று இயேசு சொல்கிறார்
'அறிஞர்கள்" என்று சொல்லப்படுபவர்களுக்கு இயேசு கேட்ட கேள்விக்கு, பதில் தெரியும் - கடவுளுக்காக "ஆம்" என்று பதில் சொல்வார்கள் - ஆனால், சரியான பதில் சொல்வதற்கும், அவர் என்ன கேட்டோரா, அதனை செய்வதற்கும் வித்தியாசம் - மோட்சத்திற்கும், நரகத்திற்கு இடையே உள்ள ஒரு கோடு போன்றது.
கடவுளோ சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை; சரியான செயலை தான் எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கடவுள் சொல்லவில்லை; அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்ட கீழ்படிதலும், உற்சாகத்துடன் திருச்சபையின் நோக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு போவதால் என்ன பயன்? திருப்பலி முடிந்தவுடன் வெளியேயும் பரிசுத்த செயல்களால் உங்கள் வாழ்வு தொடரவில்லையென்றால், திருப்பலியின் பயன் என்ன? கோவிலை விட்டு வெளியே இருக்கும் உங்களுக்கு தெரிந்த வர்களுக்கு, திவ்ய நற்கருணையிலும்,திருச்சபையின் சமூகத்திலும் பிரிந்து இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் நல்ல செயல்கள் செய்தால், அவர்கள் கடவுள் மேல் உள்ள அன்பினால் செய்கிறார்கள். தினமும் திருப்பலி செல்பவர்களை விட, இவர்கள் தான் இறையரசோடு விரைவில் இனைவார்கள் என்று கடவுள் சொல்லவில்லை.
கடவுளை வேண்டாம் என்று சொல்பவர்களை, நாம் கண்டிக்கும்பொழுது , நம்மை அவர்களோடு ஒப்பீட்டு கொள்கிறோம்- இதை தான் நாம் எக்காலமும் செய்ய கூடாது . ஒப்பீட்டு பார்க்கும்பொழுது ஒன்று நாம் மற்றவர்களோடு பெரியவர்களாக இருப்போம் அல்லது சிறியவர்களாக இருபோம். நாம் சரியாக இருக்கும் நம்மையே ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு நெருக்கமாக கடவுளோடு நேற்று இருந்ததை விட இன்று இருக்கிறோம் என்று ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment