Friday, September 2, 2011
செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 18
பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் வாசகங்கள் நம்மை நீதிக்கும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மைக்கும் நாம் துணை நின்றால் தான் மற்றவர்களை பாவ வாழ்விலிருந்து மீட்க முடியும் . அப்படி செய்யாவிடில், அவர்கள் பாவத்திற்கு நாமும் துணை புரிந்த பாவத்திற்கு ஆளாவோம். அதற்கான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. (முதல் வாசகத்தை பாருங்கள்).
இரக்கம், நிபந்தனையற்ற அன்பு, கருணை இவை எல்லாவற்றுடனும் சேர்த்து நாம் பாவத்தை எதிர்த்தால் ஒழிய அது பாவமாகாது, இல்லையெனில், அதுவும் பாவமாகும். (இரண்டாவது வாசகம்). இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்கிறார். கிறிஸ்தவ குழுவோடு இணைந்து அவர்கள் ஆலோசனையுடனும், ஜெப உதவியுடனும் நாம் பாவத்திற்கு எதிராக போராடவேண்டும் என்று சொல்கிறார்.
முதலில் நாம் பாவியோடு பேசவேண்டும். எல்லா பாவங்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சேதப்படுத்துகிறது. (அவர்களுக்கு தெரியாமலே), இதனை நாம் பாவிகளிடம் எடுத்துரைக்க வேண்டும், இல்லையெனில் நாம் அவர்களை அன்பு செய்யவில்லை , அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என அர்த்தம்.
நாம் உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து கொண்டபிறகு, பாவிகள் மணம் திருந்தாவிட்டாலும், நாம் நமது பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம். ஆனால், பாவிகளை அன்பு செய்வதை மட்டும் நிறுத்த கூடாது. அதனால், இன்னும் இரண்டு மூன்று பேரை அழைத்து கொண்டு, பாவிகள் திருந்துவதற்கு எது தடுக்கிறது, என்று ஆராய்ந்து அவர்களுக்கு உதவமுடியும்.
அதுவும் தோற்றுவிட்டால், இன்னும் வேறு உதவியுடன் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முயற்சிக்கும், பலன் தரவில்லையென்றால் மட்டுமே, நாம் நமது முயற்சியை கைவிட்டு நாம் நமது வழியில் செல்ல வேண்டும். நாமாக பிரிந்து செல்லவில்லை. பாவிகள் தான் பிரிந்து செல்ல காரணமாக இருக்கின்றனர். இயேசு வரி வசூலிப்போரையும், வெளியாட்களையும் எப்படி அனுகினார் என்பதை நாம் பார்க்கிறோம். : அவர்களை அன்பு செய்வதை என்றுமே அவர் நிறுத்தியதில்லை. அவர்களுக்காக மரணத்தையும் ஏற்றுகொண்டார்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment