அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 21
கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)
33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார்.41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)
"இறையரசு யார் அதற்காக உழைத்து கணி தருகிறார்களோ அவர்களிடமே கொடுக்கப்படும்" என்பதுதான் இன்றைய நற்செய்தியின் மையக்கருத்தாக இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் இன்னும் இப்பூமியில் இருக்கும்பொழுது இறையரசு என்பது என்ன? என்ன மாதிரியான கணிகளை நாம் இப்பூமியிலிருந்து தரவேண்டும்?
கிறிஸ்துவை போல நாமும் எந்த செயலையும் செய்து அதன் விளைவாக தரும் கணியுடன், நாம் மோட்சத்தை நோக்கிய நமது பயணத்திற்கு அது உதவுகிறது. கிறிஸ்து அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்து, அவரை போல நாமும் மன்னித்து, மற்றவர்களுக்கு இறைசேவை செய்து, உண்மையை எடுத்துரைத்து, மணக்காயங்களுக்கு மருந்து போட்டு நமது வாழ்வை தொடர்ந்தோமானால், நாம் இறையரசில் இப்பொழுதே வாழ்கிறோம்.
நான் கத்தோலிக்கர்களை பார்த்து 'அவர்கள் மோட்சத்திற்கு போவார்களா? ' என்று கேட்கும்பொழுது, பலர் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்துவின் மீட்பை, இனிமேல் நடக்க இருக்கும், சாவான பாவத்தினால் அவர்க்ள் பெறாமல் போய்விடுவார்களோ என்றும், அல்லது 'ஆம் நிச்சயம் மோட்சத்திற்கு போவோம் ' என்று சொல்வது ஆடம்பரமாகிவிடும் என்றோ அவர்கள் நினைக்கின்றனர்.
நாம் கிறிஸ்துவை போல முழுதாக நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர், உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது பாவங்களை, மோட்சத்திற்கு ஒவ்வாத நம்மில் இருக்கும் குறைகளை முழுமையாக அகற்றிவிட்டு , மோட்சத்திற்கு செல்வோம். இந்த சுத்தப்படுத்துதல் முடிந்த உடன், கடவுளின் முழு மோட்சத்தில் நாமும் வாழ்வோம். நாம் உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்று விட்டால், கண்டிப்பாக நாம் மோட்சத்திற்கு செல்வோம். நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற நமது ஆசை, உண்மையாக இருந்தால், கண்டிப்பாக நமக்கு சாவான பாவங்கள் நடக்க போவதில்லை. கண்டிப்பாக நமது இறப்பின் போது , இயேசுவை அனைத்து அவரோடு மோட்சத்தின் பயனத்தை தொடர்வோம்.
கிறிஸ்துவிற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் மேல் உள்ள அன்பினால் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், நீங்கள் இறையரசில் வாழ்ந்து கொண்டும், வாழ்வும் போகிறீர்கள்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment