செப்டம்பர் 18, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 20
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். 3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார்.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார்.7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார்.8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார்.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள்.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார்.16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.
(thanks to www.arulvakku.com)
கடவுள் நியாயமற்றவர் என்று எத்தனை முறை நாம் நினைத்திருக்கிறோம்? நமது பார்வையில் இது உண்மையும் கூட. இன்றைய நற்செய்தியில் வரும் உவமை இதற்கு சான்றாக அமைகிறது.
கூலி தொழிலாளர்கள் கண்டிப்பாக அவர் செய்ததை நியாமில்லாதது என்றே நினைப்பர். எனினும், நாம் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நாம் பெற்றோர் போல நினைத்து கொண்டால், அன்பான தந்தை எல்லா குழந்தைகளையும் சமமாகவே பார்ப்பார். அதிகம் தேவையுள்ள குழந்தைக்கு , அவர் அதிக நேரம் செலவிட்டாலும், மற்ற குழந்தைகளையும் அதே போல சமமாகவே பார்க்கிறார்.
தந்தை கடவுள் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் போல., எல்லோருக்கும் சமமாகவே கொடுப்பவர். நாம் நாமாகவே மோட்சத்திற்கு செல்ல முடியாததால்,, அதிக காலம் மோட்சம் செல்ல ஆயத்தமானவனுக்கு சம நீதி கொடுப்பது ஒன்றும் குறைவானதில்லை. மேலும், கடவுள் அவருடைய முழுமையான பரிசுத்த அன்பை , இறுதி நேரத்தில் மணந்திருந்துபவனுக்கும் கொடுக்கிறார். அவர் ஒன்றும் குறைவாக கொடுக்க மாட்டார்.
முதல் வாசகத்தில், கடவுள் வழி மிக பெரியது, அவரின் எண்ணங்கள் நம் எண்ணங்களை விட உயர்ந்தது என்றும் நாம் பார்க்கிறோம். நாம் நீதியை சமமாக பார்க்கிறோம், பழைய ஏற்பாட்டில், "கண்ணுக்கு கண் " என்று குறிப்புட்டுள்ளது போல, இயேசு நீதியை மிக பெரிய உயர்த்திற்கு கொண்டு சென்றார். அதன் அர்த்தம் என்னவென்றால், எல்லோரையும் சமமாகவும், ஒரே அன்புடனும் கடவுள் நடத்துவார். அவர்கள் அதற்கு தகுதியானவர்களா இல்லையே என்பது ஒரு பொருட்டல்ல.
கடவுளின் உயர்ந்த வழியை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் அன்பில்லாமல் இருந்தாலும், கடவுள் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார் என்பதே நமக்கு மகிழ்வை தரும். நாம் அவரது அன்பை பெற நாம் தகுதியற்றவராக இருந்தாலும் , எல்லோருக்கும் போல சம அளவு அன்பையே கடவுள் நமக்கு தருகிறார். மிகவும் புனிதமான புனிதர்களுக்கு காட்டும் அன்பையே உங்களுக்கும் கொடுக்கிறார். அண்ணை மேரியை எவ்வளவு அன்பு செய்கிறாரோ அதே போல ஆசிர்வதிக்கபட்ட கிறிஸ்துவின் தாயாகிய மேரியை அன்பு செய்வது போல் உங்களையும் அன்பு செய்கிறார். "எனது அன்பை நாம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோனோ , அதை கொடுக்க எனக்கு உரிமையில்லைய " ? என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment