Friday, May 31, 2013

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 2 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17

லூக்கா நற்செய்தி
11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள்.14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார்.15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)

“அன்பானது, இரண்டு மீன்களுக்கும், 5 அப்பங்களுக்கும் ஒப்பானது. அது சிறியதாக இருந்தாலும், கொடுக்க ஆரம்பித்த பின்பு, பல மடங்காக மாறிவிடும்.”  கலிலேயா கடலின் வடக்கு புறத்தில் உள்ள கோவிலில், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தான், இயேசு இந்த உணவை பல மடங்காக பெருக்கு அங்கே வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்க்கினார்.


அந்த கோவிலின் பீடத்தில், மொசைக் கல்லினால் செய்யப்பட்ட பிரெட் துண்டுகளும், மீணும் உள்ளன. இது கி.பி, 480ம் ஆண்டு செய்யப்பட்டது. இயேசு அந்த உணவை ஆசிர்வதித்த மலைக்கு அருகிலேயே இந்த பீடம் உள்ளது. அந்த மொசைக் கல்லில் 4 ரொட்டி துண்டுகள் தான் உள்ளது. ஏன் 5 துண்டுகளுக்கு பதிலாக 4 இருக்கிறது. ?
அந்த 5வது ரொட்டி துண்டு தினமும் திருப்பலியில் திவ்ய நற்கருணையாக வருவதை குறிக்கிறது. இதனை இந்த வெப் சைட்டில் நீங்கள் பார்க்கலாம்.


இயேசுவின் உண்மையான இயற்கையான, ப்ரசன்னத்தைவிட , திவ்ய நற்கருணை மேலானது  கிறிஸ்துவின் உடலாக உள்ள திருச்சபையின் சமூகத்தை விட மேலானது. இது தெய்வீக அற்ப்தமாகும். பல மடங்காக பெருகும் கடவுளிடமிருந்து வர வேண்டிய எதுவும், திவ்ய நற்கருணையில், இயேசுவாக பரிசுத்த ஆவி மூலம் நாம் பெறுகிறோம். திருப்பலியில் நாம் பங்கு கொள்ளும் பொழுது, நாம் திவ்ய நற்கருணயாக பெறுகிறோம். அப்பொழுது, இயேசுவிடம், நம் குறைகளை களைந்து, தேவையான திறமைகளை பல மடங்காக பெருக்க அவரிடம் வேண்டுவோம்.

இயேசு நமக்கு தேவையானதை கொடுப்பார், அதையும் சரியான நேரத்தில், எந்த வழியில் கொடுக்க வேண்டுமோ, அவ்வழியில் கொடுப்பார் என்று நாம் நம்பலாம்.

உங்களுக்கு போதுமான அன்பு உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா? பெரும்பாலும் நாம் இல்லை என்று தான் சொல்வோம். கடவுளை தவிர யாருமே நமக்கு முழுமையான அன்பை கொடுப்பதில்லை. எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரின் அன்பு கடவுளின் அன்பிற்கு ஈடாகாது. அவர்கள் கிறிஸ்துவிற்கு நெருக்கமாக இருந்தாலும், கடவுளின் அன்பே மேலானது.

கடவுளின் தூய்மையான, முழுமையான அன்பு திவ்ய நற்கருணை மூலமாக நேரடியாக நமக்கு கிடைக்கிறது. இந்த திவ்ய நற்கருணையோடு நாம் எப்படி இனைவது என்று புரியாமல் நாம் இருப்பதால் தான், கடவுளின் முழுமையான அன்பை நாம் உணர்வதில்லை. திவ்ய நற்கருணை, மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் அன்பை குறிப்பதாகும். நீங்கள் போதுமான அன்பை பெறவில்லை எனில், அதிகம் அன்பை கொடுங்கள். எந்த அன்பை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அந்த அன்பாக இருங்கள். மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.

© 2013 by Terry A. Modica

Saturday, May 25, 2013

மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 26 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Rom 5:1-5
John 16:12-15

12 ' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.14 அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.15 தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.
(thanks to www.arulvakku.com)

கடவுள் உங்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பதை உங்களால் உணர முடியவில்லை. நீங்கள் இயேசுவிடம் கேட்டு இன்னும் அவர் பதில் அளிக்காமல் இருப்பது எது?  திருச்சபையின் போதனைகளில், எது உங்களுக்கு புரியாமலோ அல்லது அதனை ஏற்று கொள்ளாமல் இருப்பது எது? இன்றைய நற்செய்தியில், இயேசு,
“' நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.” என்ற் சொல்கிறார்.

ஏன் நம்மால் தாங்க இயலாது? ஏனெனில், முதலில் பரிசுத்த ஆவி நம்மை தயார் படுத்த அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்மில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கு நாம் அனுமதித்தால் தான், உண்மை நமக்கு கடினமாக தெரிந்தாலும், அது ஆசிர்வாதமாக ஆகும். ஆனால் நாம் இந்த மாற்றத்திற்கு அனுமதிப்பதை  மிகவும் தயங்கியே செய்கிறோம்.

இயேசு சொன்னது அனைத்தும், தந்தை கடவுளிடமிருந்து பரிசுத்த ஆவி மூலமாக வந்தது. கடவுள் அதே ஞானத்தையும், உண்மையையும், நமக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த அன்பளிப்பு, நாம் நம்மையே கடவுளுக்கு அர்ப்பனித்து, மாற்றத்தை உண்டாக்க  நாம் அனுமதித்தால் தான், நமக்கும் இந்த அன்பளிப்பு கிடைக்கும். மூவொரு கடவுள்களில், தந்தை கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார், அந்த மன்னிப்பை, இயேசு நமக்கு கொண்டு வருக்றார், பரிசுத்த ஆவியானவர், நம்மை தூய்மைபடுத்தி, பாவமில்லாமல் வாழ நமக்கு உறுதுனையாக இருக்கிறார்.

பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் ப்ரசன்னமாகவும், திருச்சபையின் முழு உடலாகவும் இருக்கிறார். பாவ மன்னிப்பு, பரிசுத்த ஆவியின் செயலாகும். இச்செயல், பாவங்களை மட்டும் கழுவாமல், பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்கவும் உதவுகிறார். பாவ சங்கீர்த்தன அருட்சாதனம், மூவொரு கட்வுளின் நேரடி செயலாகும், அவர்கள் மூவரும், நம் மணம் வருந்துதலை ஏற்ற்கொண்டு, நம் பரிசுத்த வாழ்வை இன்னும் மேம்படுத்துகின்றனர்.

இந்த அருளை பெறுவதற்கு, கடவுளோடு இனைந்து, நம்மை முழு மாற்றத்திற்கு தயார் படுத்த வேண்டும். தாழ்மையுடன் இருந்தால், போதனைகள் நம்மை மாற்றத்திற்கு கொண்டு ச்எல்லும்.
© 2013 by Terry A. Modica

Friday, May 17, 2013

மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மே 19, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தூய ஆவியாரின் பெருவிழா
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று இயேசு கூறுகிறார். அதுவும் இரண்டு முறை கூறுகிறார். முதலில், அவருடைய சீடர்களுக்கு, அமைதியின் அன்பளிப்பை கொடுத்து, அவர்களுடைய பயத்தை, கவலையை போக்குகிறார், அதன் மூலம், இயேசுவை அவர்களால் கண்டு கொள்ள முடிகிறது.

பிறகு, மீண்டும் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று கூறி, அவரின் இறைசேவையை அவர்கள் தொடர அவர்களை இவ்வுலகுக்கு அனுப்புகிறார். கடவுளுக்காக இவ்வுலகில் இறைசேவையை தொடர்ந்து பரிசுத்த ஆவியின் முழுமையான வாழ்வில் வாழ்ந்து அதன் பலனை பெற சீடர்களை அனுப்புகிறார்.

இதன் மூலம், இயேசு  நம்மோடு இருக்கிறார் என்று அறிந்து நாம் அமைதியுடன் கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால், இது ஒரு சவால் தான், இயேசுவை பற்றி மற்றவர்களிடம் பேசும்பொழுது, நாம் அமைதியாக இருப்பது, எவ்வித கலக்கமும் இல்லாமல் இருப்பது என்பது ஒரு சவால் தான். மேலும், நம்மை அவர்கள் கேலிக்குள்ளாக்குவார்கள், நிராகரிப்பார்கள் மற்றும், நமக்கு போதிய அறிவு கிடையாது என்றும் நாம் நினைத்து பயந்து ஒதுங்கலாம், இதற்காகதான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.

கடவுள் எதனை செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய தேவையான அனைத்தையும், பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதன் மூலம், நமக்கு எந்த குறையும் கிடையாது. மேலும், நம்மை நிராகரிக்கிறவர்களிமிடமிருந்து, நமக்கு தேவையான ஆறுதலையும், பாதுகாப்பையும் கொடுக்க கடவுள் தவறுவதில்லை.

வெளியில் என்ன நடந்தாலும், நம்மில் உள்ள்த்துக்குள், உள்ள ஆழ்ந்த அமைதி, நாம் பரிசுத்த ஆவியின் ஆற்றலுடன் இனைந்து இருப்பதன் பலனாகும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களுடன் எதிர்தாலும், நம்மில் ஒரு ஆழ்ந்த அமைதி பரிசுத்த ஆவியின் துனையுடன் இருப்போம். பரிசுத்த ஆவியின் வாழ்வதற்கான அடையாளம், நாம் அமிதியுடன் இருப்பது தான். அமைதி தான் பரிசுத்த ஆவியானவர் உயிர்ப்புடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

நற்செய்தியின் முடிவில், இயேசு சீடர்களுக்கு (கத்தோலிக்க திருச்சபையின் முதல் குருக்கள்), பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கி , தெய்வீக ப்ரசன்னைத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று கூறுகிறார். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை, உருவாக்கி, குருவின் மூலம், இயேசுவே நம்மில் வருகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

இந்த பாவம் நிறைந்த உலகில், பரிசுத்த ஆவியின் ஆற்றல், நம்மை அமைதியோடு இருக்க செய்கிறது. மன்னிபது கூட நமக்கு கடினம் தான், ஆனால் கிறிஸ்துவின் ஆவியுடன் இனைந்து நம்மால் மன்னிக்க முடியும். நம்மை காயபடுத்துபவர்களை, நம்மால் மன்னிக்க முடியும். அவர்கள் திருந்தாவிட்டால் கூட, நம்மால் மன்னிக்க முடியாது.  பரிசுத்த ஆவி தான் நம்மை ப்ரச்சினைகளுக்கு இடையேயும், ஆழ்ந்த அமைதியை தருகிறது.
© 2013 by Terry A. Modica

Saturday, May 11, 2013

மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 12, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம் ஞாயிறு
Acts 7:55-60
Ps 97:1-2, 6-7, 9
Rev 22:12-14, 16-17, 20
John 17:20-26
யோவான் நற்செய்தி,
அதிகாரம் 17:20-26
 20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும். ' 24 ' தந்தையே, உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன். ' (thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி ஒற்றுமையின் நற்செய்தி. இயேசு விண்ணகத்திற்கு தன்னை அர்ப்பணித்து அதன் பிறகு, தன்னை சிலுவை மரணத்திற்கு அர்ப்பனித்தார். இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்றானது போல, நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றாய் இருந்து ஒற்றுமையின் சாட்சியாய் – தியாகம் செய்து, நிபந்தனையற்ற அன்புடன், அர்ப்பணிப்போடு – கடவுளை போல நாமும் இருக்கிறோம் என்று இவ்வுலகத்திற்கு காமிப்போம். கடவுளின் அன்பு நிஜம் என்று இந்த உலகிற்கு கான்பிப்போம். இது நிரந்தரமானது, அர்ப்பனிப்புடன், கூடிய நிபந்தனையற்ற, தியாகத்துடன் உள்ள அன்பாகும். யார் எவ்வளவு பாவம் செய்தாலும், இந்த அன்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.

திருவருட்சாதன திருமணம், இந்த உலகிற்கு  ஒற்றுமையின் சான்றை காட்டுகிறது. கடவுள் எவ்வாறு நிபந்தனையற்ற அன்பை நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும்,  நோயுற்றவர்களுக்கும், வளமோடு வாழ்பவர்களுக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும், முழுமையான அன்பை கொடுப்பது போல, திருமணமான ஆனும் பென்னும்,அன்பை பரிமாறி கொள்கினறனர். திருமண வாழ்வின் அன்பு தீவிர அன்பாக இருக்கும். இதனை திருமண வாழ்வை விட்டு வெளியே அனுபவிக்க முடியாது. இந்த சடங்கில், புனித திருமண வாழ்வில் கணவன் அவனது வாழ்வை மனைவிக்காக கொடுக்கிறான். மனைவி அவளது வாழ்வை விட்டு, கணவனுக்காக வாழ்கிறாள். கிறிஸ்து அவரது வாழ்வை நமக்காக கொடுத்தது போல. நாம் திருச்சபையுடன் கிறிஸ்துவின் மணப்பெண்ணாக நமது வாழ்வை கிறிஸ்துவிற்காக கொடுத்து அவருக்காக இறைசேவையை செய்வோம்.


திருமணம் புனிதமானது! விவாகரத்தானவர்களுக்கு முழுமையான விசாரனை இல்லாமல், கத்தோலிக்க குருமார்கள் திருமணம் செய்து வைப்பதில்லை. கணவன் மனைவி ஒற்றுமை புனிதமானது, இயேசுவின், கடவுள் தந்தையின் உறவு போல புனிதமானது. கடவுள் கொடுத்த திருமணமும், கடவுள் அன்பி/ற்கு இலக்கணமாக இருக்கிறது.

மற்ற உறவுகளும் – கடவுளால் ஏற்படுத்தபட்டவை – புனிதமானது தான். கடவுளால் உருவாக்கபட்ட அனைது உறவுகளும் புனிதமானது தான். இயேசுவின் தியாகத்தின் அன்பை இந்த உறவுகளளெல்லாம்,உலகிற்கு எடுத்து காட்டுகின்றன.
ஆனால், இவ்வுலகில், கிறிஸ்துவின் உடல், இந்த திருச்சபை , எப்படி பிரிந்து இருக்கிறது, மக்கள் மணம் மாறுதல் எதிர்ப்பாக இருக்கிறது.!


© 2013 by Terry A. Modica

Friday, May 3, 2013

மே 5, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 5, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2, 22-29
Ps 67:2-3, 5-6, 8
Rev 21:10-14, 22-23
John 14:23-29

23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ' என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.28 ' நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன் ' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டு உள்ளது போல, யேசுவை அன்பு செய்வது என்பது, அவரது போதனைகளையும், கட்டளைகளையும் கீழ்படிந்து வாழ்வது , அவரை பின்பற்றுவது.  நமது இதயம் தொட்டு, இதனை செய்ய விரும்புகிறோம். அவரை போலவே வாழ்ந்து அவருக்கு மரியாதை செய்ய விரும்புகிறோம். இயேசுவை அன்பு செய்வது போலவே அன்பு செய்ய ஆசைபடுகிறோம். இதனையெல்லாம் செய்கிற பொழுது, கடவுள் நம்மில் நீடித்து இருப்பார் என்பதையும் அறிவோம்.

எனினும், இது ஒன்றும் சுலபமானது அல்ல. ஒவ்வொரு நாளும் இயேசுவின் வழியில் வாழ்வதற்கு நமக்கு பல சவால்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இயேசு என்ன மாதிரி செய்திருப்பார் என்பதை  நாம் மறந்து விடுகிறோம் அல்லது, எப்படி அந்த தருணத்தை எதிர்கொள்வது என்பது நமக்கு தெரியாமல் போகிவிடுகிறது. மனிதர்கள் நம்மை தாக்கும்பொழுதோ,  அவர்களின் தவறுகளால், தோல்வியினால், அன்பில்லாமால் செய்யும் செய்கைகளால், நாம் அதற்கு எப்படி திருப்பி எதிர் செயல் செய்யலாம் என பாவ செயல்களுக்குள்ளாகிறோம். ஒவ்வொரு செயல்களுக்கு, சூழ்னிலைக்கும், யேசு எப்படி எதிர்கொள்வார் என்று நற்செய்தியில் குறிப்பிட படவில்லை. “இப்படி ஒரு சூழல் வந்தால் இவ்வாறு செய்யுங்கள், கடவுள் கொள்கை #127” என்ரு எங்கும் குறிப்பிடவில்லை.


அதனால் தான், யேசு நமக்கு பரிசுத்த ஆவியை வழங்குவேண் என்று வாக்குறுதி அளிக்கிறார். இயேசுவின் பரிசுத்த வழிகளை நமக்கு நினைவுபடுத்த பரிசுத்த ஆவியார் இங்கே இருக்கிறார். ஒவ்வொரு முறை நாம் நல் வழிக்கான சவால்களை சமாளிப்பதற்கு, காலை எழுவது முதல், மாலை தூங்க்கும் வரை நம்மோடு பரிசுத்த ஆவியார் இருக்கிறார்.

அப்புறம் என்ன? கிறிஸ்துவின் கட்டளைகளை  நாம் கடைபிடிப்பது ஒன்றும் பெரிய ப்ரச்சினையில்லை.ப்ரச்சினை என்ன என்றால், பரிசுத்த ஆவியை நாம் எப்போதும் சார்ந்து இருப்பதற்கு நாம் மறந்து விடுகிறோம். அவருடைய வழி காட்டுதலை அறிந்து கொள்ள நமக்கு தெரிவதில்லை. கடவுளுடைய முழு உதவியும் நமக்கு இருக்கிறது. ஆனால், நமது இவ்வுலக ப்ரச்சினைகளை நாமே எதிர்கொள்ள வேண்டும்  என்ற நினைப்பில் நாம் அவைகளை எதிர்கொள்கிறோம். பரிசுத்த ஆவியின் துனையோடு, அவரது வழிகாட்டுதலோடு, நாம் எப்பொழுதும் இருக்க இந்த செய்முறை பயிற்சியை கடைபிடியுங்கள்: ஒவ்வொரு மணி   நேரத்தையும் புனிதபடுத்துங்கள், அதனை நினைவுபடுத்த, உங்கள் கடிகாரத்திலோ, அல்லது, போனிலோ ஒவ்வொரு மணிக்கும் அலாரம் வைத்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம், அந்த மணி அடிக்குதோ, அப்பொழுது, பரிசுத்த ஆவிக்கு நன்றி கூறி, அவர் உங்களை வழி நடத்துவதற்கும், அடுத்த 60 நிமிடத்திற்கு உங்களை வழி நடத்துவதற்கும், அவருக்கு நன்று கூறுங்கள். மேலும், கடவுள் நம்மிடையே இருக்கிறார் என்ற எண்ணத்துடன் இருந்து, அவர் நமக்கு எப்போதும் உதவி செய்ய தயாராய் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் நாம் இருப்போம்.
© 2013 by Terry A. Modica