Good News Reflection (http://gnm.org)
FOR NEXT SUNDAY: April 22, 2007
Third Sunday of Easter
Next Sunday's Readings:
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
http://www.usccb.org/nab/042207.shtml
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 21
1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4 ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள். 6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ' அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8 மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். 11 சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களிடம், ' உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14 இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். 15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆ 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.
மறையுரை:
இன்றைய நற்செய்தியில், நான் படிக்கும்போது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி யேசு கிறிஸ்து, மீண்களை பிடித்து, அதனை சுட்டு வைத்திருந்தார்? அவர் வலை வைத்திருந்தாரா? இல்லை டவுனிலிருந்து ரொட்டியையும், மீணையும் வாங்கி வந்தாரா? அதனால் தான் , யாரும் கண்டுபிடிக்க வில்லையா? இல்லை மீனே தண்ணீரிலிருந்து, குதித்து வந்ததா? எப்படி சாத்தான், ஒரு முறை யேசுவை அவர் பாலைவனத்தில், விரதம் இருந்த போது அவரை சோதனையிட்டபோது போல.
யேசு, கற்களை ரொட்டி துண்டுகளாக மாற்றினாரா?
யேசு கிறிஸ்து, எப்படி சில மீன்களையும், சில ரொட்டி துண்டுகளையும், பல மடங்காக பெருக்கி காட்டினார் என்பதை சிந்தனை செய்து பார். அதே உணவு: ரொட்டியும், மீணும். அதே அற்புதம்: நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் குறைத்து இருந்தாலும், இல்லை ஒன்றுமே இல்லையென்றாலும், கடவுள் , எல்லாவற்றையும் அளவிற்கு அதிகமாக வைத்திருக்கிறார்! ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. எது தேவையென்றால், நாம் எந்த அளவிற்கு, கடவுள் கொடுப்பதை பகிர்ந்து கொள்ள விருப்பமுடன் இருக்கிறோம் என்பது தான். இந்த மீன்களையும், ரொட்டி துண்டுகளையும், சீடர்களை அழைத்து எல்லோருக்கும் கொடுக்க சொன்னார்கள். அதிக மீன்களை பிடிக்கும் இன்றைய அற்புதத்தில், "நீங்கள் பிடித்த மீன்களையும், கொண்டு வாருங்கள்", என்று யேசு சீடர்களையும் அழைக்கின்றார்.
அதன் பிறகு, பேதுரு யேசுவின் மேல், எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ, அதே அன்பை, அவருடைய "ஆடுகள்" மீது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார். எங்கிருந்து அன்பு வருகிறது. பேதுரு யாரையும், அவருடைய சொந்த முயற்சியால் அன்பு செய்யவில்லை. நாம் யாருமே அப்படி அன்பு செய்வதில்லை. பேதுருவும், கடவுளைடைய அன்போடு உருவாக்கப்பட்டார். நாமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டோம். நாம் அன்பான கடவுளின் உருவத்தோடு உருவாக்கப்பட்டோம். பீட்டருக்கு, கடவுளின் அபரிதமான அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் மூலம், கடவுளின் அரசை தொடர்ந்து பரவ செய்யலாம்.
கடவுள் உங்களிடம் என்ன கேட்கிறார்? அதற்கு பதில், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை விட, நீங்கள் எவ்வள்வு விருப்பத்துடன், கடவுள் கேட்பதை செய்ய தயாராக இருக்கிறாய்.
சுய சிந்தனைக்கான் கேள்வி:
எந்த மாதிரியான கடவுளரசின் வேலையை (பங்கு வேலை, நண்பருக்கு, அல்லது சமூக சேவை) செய்யலாம் என்று நினைத்து, ஆனால் வலையில் ஒன்றுமில்லை என நினைத்து, இன்னும் ஏதாவது செய்யமலிருக்கிறீர்கள்?. யேசுவே உன்னிடம் கேட்பதாக நினைத்து கொள், என்ன வேலை, இந்த வாரம், நீ செய்யலாம்?
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Friday, April 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment