Good News Reflection
Wednesday of the Second Week of Easter
April 18, 2007
Today's Readings:
Acts 5:17-26
Ps 34:2-9
John 3:16-21
http://www.usccb.org/nab/041807.shtml
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 3
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. 20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. 21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
கண்டனத்திலிருந்து விடை பெற்று வாழ்தல்.
இன்றைய நற்செய்தி மிகவும் உறுதி பட ஒரு உண்மையை கூறுகிறது. அது என்னவெனில் யேசு கிறிஸ்து யாரையும் கண்டிக்கவோ அல்ல்து தன்டனை கொடுக்கவோ இந்த உலகத்திற்கு வரவில்லை. இருந்தாலும், நாம் கண்டனத்திற்குள்ளானவராக நினைக்கிறோம், அது ஏன்?
நீ உன்னை பற்றி தவறாக நினைக்கிறாயா? உன்னையே மன்னிக்க முடியாமல் இருந்து இருக்கிறாயா? மற்றவர்களிடம் கடினமாக நடந்து கொள்வது போல், உன்னிடமும் நடந்து கொள்கிறாயா? மற்றவர்கள் உன்னை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்து சந்தோசமடைகிறாயா? , ஏனெனில், உன்னில் நீ சந்தோசமடைவதில்லை. உனக்கு சரியான அல்லது உறுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லையா? அல்லது கிடைக்கு தர்ம சங்கடபடுகிறாயா? நாம் இவ்வ்ளவு மதிப்புடையவர் என்று நினைக்கிறாயா?
நற்செய்தியை முழுமையாக புரிந்து கொள்ளவில்லையென்றால், இது மாதிரியான விளைவுகள் ஏற்படும். மேலே குறிப்பிடப்பட்ட விசயங்கள் எல்லாம், நாம் முழுமையாக நற்செய்தியை நம்ப வில்லையென்றால், நாம் என்ன செய்தாலும், கன்டனத்திற்கு உள்ளானவர்களாக நினைப்போம். ஒவ்வொரு முறை நாம் பாவம் செய்யும்போதும், குற்ற உணர்வு, நாம் கண்டனத்திற்கும், தன்டனைக்கும் உரிய தகுதியானவர்கள் என் நினைக்கிறோம்.
நாம் நம்மை அறியாமல், ஒரு தவறை செய்யும்போது, அதற்கும், நாம் தன்டனைக்குரியவர் என என்னுகிறோம். அதனால், இதன் மூலம், ஒரு பாடத்தை அறிந்து கொள்ளாமல், நாமே நம்மை கண்டிக்கிறோம்
மேலும், நியாயமற்ற, அநீதியான, இரக்கமற்ற விச்யங்கள் நடக்கும் போது, நாம் கண்டனத்திற்கு உள்ளானவர்களாக நினைக்கிறோம்.
உண்மை என்னவென்றால்: நீ கிறிஸ்து சிலுவையில் அவரது வாழ்வை தியாகம் உனக்காக தியாகம் செய்தார் என்பதை ஏற்றுகொண்டால், உனது தன்டனையிலிருந்து, கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாய். இப்போது, நீ புரிந்து கொள்ள வேண்டியது: குற்ற உணர்வுக்கும், அவமானத்திற்கும் வேறுபாடு உள்ளது.
ஏதாவது தவறான செயலை செய்யும்போது, குற்ற உணர்வு வருகிறது. நாம் பாவம் செய்யும்போது, குற்ற உணர்வு அடைகிறோம், நாம் அதனால் வருந்தி திருந்தும்போது, கிறிஸ்துவால் பெற்ப்பட்ட மீட்பை அடைகிறோம். நாம் தவறாக ஒரு விசயத்தை என்னும்போது, நம் பாவங்களினால் நாம் அவமானமடைகிறோம். நாம் தீமையானவர்கள். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட பின்பும், நமது அவமானம் தொடர்கிறது. யேசு நம்மை கண்டனம் செய்வதில்லை. ஆனால் அவமானம் நம்மை கண்டிக்கிறது. அவமானம் நம்மை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பதில்லை. நம்மை கடவுளின் மன்னிப்பின் முலம் சந்தோசம் அடைய விடுவதில்லை. நம்மையே மன்னிக்க விடுவதில்லை. குற்ற உணர்வு, நம்மை பற்றிய உண்மைகள எடுத்து கூறி, அதிலேயே நம்மை வளர செய்கிறது. அவமானம் நம்மிலே விழுந்து, நம் வளர்ச்சியை வீழ்த்தி விடுகிறது.
உண்மை: யேசு உனக்கு சிலுவையில் செய்த தியாகத்தினால், உன்னுட்ய பாவங்களுக்காக நீ புரிந்து நடந்தால், அவமானம் என்று ஒன்று இல்லை. ஏனெனில், அது உன்னை மாற்றி , உன்னை தெய்வீகமானவராக ஆவாய். கிறிஸ்துவின் ஒளியில், உன் பாவங்களை வெளி காட்டுவதால், அவமானமில்லை. ஏனெனில், அவர் உனக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, உன்னை நீ யாரென்று முழுமையாக புரிய வைக்கிறார். உன்மையில் நீ யார், நீ தெய்வீகமானவன், கடவுளுடைய அழகான படைப்பு. அவருடைய உருவத்திலேயே படைக்கப்பட்டு, அவருடைய நல்ல விசயஙகள் உனக்கு அருளப்பட்டன.
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment