Monday, April 23, 2007

ஏப்ரல் 24, 2007 மறையுரை

ஏப்ரல் 24, 2007

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர். 32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். 34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள். 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.



மறையுரை:

கொடுமைபடுதலுக்கு, தைரியத்துடன் தயாராய் இருப்பது:

புனித ஸ்டீபன் தான், கிறிஸ்துவுக்காக முதலில் மரித்தது. இன்றைய முதல் வாசகத்தில், அவருடைய கதையை பற்றி பார்க்கிறோம், அது ஜெருசலேத்தை சுற்றி கி.பி. 35 வருடம் நடந்தது. அவரி கிரேக்க மொழி பேசும் இஸ்ரேலராக இருந்தார்.மேலும் அவர் உற்சாகமுள்ள "வழி" (இப்படித்தான், அன்றைய கிறிஸ்துவ மதம் பெயரிடப்பட்டு வழக்க நிலையில் இருந்தது), உறுப்பினர் ஆவார். அவரை அப்போஸ்தலர்கள் முதல் 'டீகன்" ஆக தேர்ந்தெடுத்தனர். அவர் மிகவும் தைரியமாக, யேசுவை எல்லா இடத்திலும் பிரசங்கம் செய்தார், அதுவே அவர் உயிர் பலியாக காரணமாயிருந்தது.

அவருடைய தைரியம், அவருடைய சமய சேவையை கடவுளை நோக்கியும், மோட்சத்தை நோக்கியும் கொண்டு சென்றது. அவருடைய இயற்கையான் விருப்பம் "கடவுளை நம்பாதவர்களை காப்பாற்றவேண்டுன்" என்ற கொள்கையிலிருந்து மீறி அதனை வெற்றி கொண்டு வந்தார். அவர் மோட்சத்தில் கொண்ட பரிவினால், அவரால், அவருடைய எதிரியை கூட அன்பு செய்ய முடிந்தது. கல்லடியால், பலமான வலியை தாங்கிகொண்டும், அவர் கடவுளிடம், "இறைவா அவர்களை மன்னித்து விடு" என்று வேண்டினார். இதன் தாக்கம், பொறாமையும், கொடுமைபடுத்தும் எண்ணமும் கொண்ட சவுல் என்கிற பரிசேயருக்கு இருந்தது.

அது நடந்து சிறிது காலத்திற்கு உள்ளாகவே, சவுலுக்கு மிக பெரிய மாறுதல் நடந்து, அவர் புனித பவுலானார். புனித பவுலானவர், நமக்கு தெரிந்த எல்லா நாடுகளுக்கும் பயனித்து, பல புதிய கோவிலகளை உருவாக்கினார். மேலும், புதிய ஏற்பாட்டின் பைபிளில் பல பகுதிகளை தந்தார்.

புனித ஸ்டீபன் விட்டு போனவைகளை 415 ஆம் வருடம், லூசியன் என்ற குருவானவர் கண்டுபிடித்தார். அந்த குருவானவரை ஒரு மனிதன் வெள்ளை உடை அனிந்து, ஒர் இரவில் எழுப்பினான். அந்த காட்சி, அவரை பெயர் சொல்லி அழைத்து, அவரை ஜெருசலேம் போகச் சொல்லியது. அங்கே உள்ள பிஷப்பிடம் கூறி, புனித ஸ்டீபனுடைய கல்லறையையும், மற்ற கடவுளின் சேவகர்களின் கல்லறையையும், திறக்க சொல்லியது. இதன் மூலம், கடவுள் பலரை மதம் மாற்றுவார் என்றும் கூறியது.

அந்த உருவம், அவரை "கமேலியேல்" என்று அறிமுகபடுத்தி கொண்டு, "பவுலுக்கு ஆலோசனை கூறியவன்" நான் தான் என்றும் சொல்லி, அந்த லூசியன் என்ற குருவானவரிடம், புனித ஸ்டீபன் அவர்களின் கல்லறை நகரை விட்டு வெளியே வடக்கு வாயிலில் இருக்கும் என்றும், அவருடைய உடல், ஒரு பகலும், ஒரு இரவும் வெளியே வைக்கப்பட்டு, யாராலும் தொடப்படாமல் இருந்தது. என்றும் கூறினார். அதற்கு அப்புறம், விசுவாசிகள் இரகசியமாக தூக்கி சென்று, அவருடைய வீட்டை அடைந்தனர். நிக்கோடமுஸின் உடலும் மற்றும் அந்த கால விசுவாசிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது.

குரு லூசியன், எங்கே இதனை வெளியே சொன்னால், நம்மை பரிகாசமும், கொடுமையும் படுத்துவர் என அஞ்சினார். இது கட்வுளிடமிருந்து வந்த செய்தி என்றால், திரும்பவும் இது நடக்க வேண்டும் என்று வேண்டிகொண்டார். அதனால், கமாலியெல் மீண்டும் தோன்றினார். இருந்தும், லூசியன் தயங்கினார். மூன்றாவது முறை அந்த செய்தி வந்த பிறகுதான், அவர் கீழ்படிந்தார். அவர் மூன்று சவ பெட்டிகளை கண்டு பிடித்தார். கிரேக்க சித்திரத்தின் முறைப்படி அந்த சவபெட்டிகள் ஸ்டீபன், நிக்கோடமுஸ், மற்றும் அபிபாஸ் என்று கண்டுபிடித்தார். இந்த செய்தி, மிக பெரிய கூட்டத்தை கூட்டியது, அந்த கூட்டத்தில் பிஷப்பும் உண்டு. அவர்கள், ஸ்டீபனின் சவப்பெட்டியை திறந்த போது, நல்ல ஒரு வாசனை காற்றில் கலந்தது. மிக அதிகமாகன அற்புதங்களும், மத/மன மாற்றங்களும் அங்கே நடந்தது.

எங்கே நாம் பரிகசிக்கபடுவோம், அல்ல்து கொடுமைபடுத்தபடுவோம் என்று நாம் பயப்படும்போது, நாம் முன்னேற வேண்டும், அவர்களை மன்னிதுது, கடவுளிடம் யேசு சிலுவையில் வேண்டியது போல், நாமும் "உனது கையில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று கூறி வேண்டவேண்டும். இதற்கப்புறம், இது ஒரு பெரிய விசயமாகவே இருக்காது. மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொல்கிறார்கள், அல்லது என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு விசயமாகவே இருக்காது. நம் நோக்கம், மோட்சமாக இருக்கட்டும்.

No comments: