© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me!
Be my Good News Partner.For PERMISSION to copy this reflection,
go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
அதிகாரம் 11
23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். 25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். 26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
யோவான் (அருளப்பர்) நற்செய்தி (http://www.arulvakku.com)
அதிகாரம் 13
1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார். 2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், 3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ' ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார். 7 இயேசு மறுமொழியாக, ' நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார். 8 பேதுரு அவரிடம், ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்Nடன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார். 9 அப்போது சீமோன் பேதுரு, ' அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும் ' என்றார். 10 இயேசு அவரிடம், ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். 11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். 12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13 நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். 14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
சிந்தனை:
யேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பனிவிடை பெறுவதற்கு அல்ல. அவருக்கு அந்த தகுதி இருந்தாலும், அவர் பனி செய்யவே வந்தார். உனக்காக பனி / சேவை செய்ய வந்தார். மற்றும் உன் மூலமாக, நீ உனக்கு தெரிந்தவர்களுக்கு பனி செய்ய வேண்டும் என்று விரும்பிகிறார்.
நம்மை அழைத்து, நமக்கு பனிவிடை செய்த நம் கடவுள், நம்மை நோக்கி, "நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். " என்கிறார்.
இது மாதிரி யேசு செய்தது போல, நாமும் செய்வது மிகவும் கடினமானது. இது மாதிரி செய்ய வேண்டும் என்றால், நமது சகோதரர்களையும், நாம் விரும்பாதவர்களையும் அதிகமாக அன்பு செய்து அவர்களுக்கு நல்ல செயல்கள் செய்து கடவுளை போல இருக்க முயற்சிக்க வேண்டும். வேறு விதமாக சொன்னால், நமக்கு நெருக்கமானவர்கள், நமக்கு நாம் விரும்புவது போல் செய்யாவிட்டால், நமக்கு ஏமாற்றம் அடையும் போது, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும்.
"நாம் நனமையாக" இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம். நாம் யேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்று, அவரோடு இனைந்து, இந்த திருச்சபையோடும் இனைய வேண்டும். நாம் கிறிஸ்துவை பெறுவதற்காக நாம் நற்கருணையை நோக்கி தனியாளாய் செல்கிறோம், அப்போது நாம் சொல்வது " ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன்.. " . ஆனால், நற்கருணையை பெற்ற பின் கிறிஸ்துவின் உடலனி ஒரு உறுப்பினராகி, அவரோடு ஒன்றாய் இனைந்து விட்டோம். கிறிஸ்துவின் உடலின் ஒர் அங்கமாகி, நாமும் ரொட்டியும் , திராட்சை ரசமும் ஆக மாறிவிட்டோம். திருப்பலி முடிந்தவுடன், நாமும் நன்மையாக இருக்க அழைக்கப்படுகிறோம் - உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னமாக இவ்வுலகில் இருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, யேசு எனக்கு இந்த கருத்தினை அறிவுறுத்தினார். குரு ஒருவர்க்கு காலை கழுவி விடுவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர் எங்கள் பங்கு உறுப்பினர்களுக்கும், எங்களுக்கும் , அதிகம் குடித்தும், காமப் பார்வை பார்த்தும், எங்களுக்கு துரோகம் செய்தார். அவருடைய பாதஙல், மிகவும் மோசமாக இருந்தது, அதைவிட மோசமானது, "அவருடைய பாவங்களை ஒத்துகொள்ளாதது".
"காலை கழுவுவதால்" எது நிறைவேற்றப்படுகிறது அல்லது எது பூர்த்தி செய்யப்படுகிறது. இது கருணையின் அடிப்படையாக அமைகிறது. அந்த குருவானவருக்கு நான் செய்தது , அவருக்கு பனிவிடை செய்ய விரும்புகிறேன், அவர் இந்த செயல், அவர் பாவஙகளின் குணப்படுத்தும் செயலாக நினைத்து , அதற்கு உட்படுத்த வேண்டும். அவர் அதனை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவரை பற்றி, நிர்வாகத்தினரிடம் புகார் செய்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி, எனக்கு பெரிய மாற்றமாயிர்ந்தது. என்னுடைய நிபந்தனையில்லாமால் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டியதன் விருப்பத்தை என்னுள் மாற்றியது. யேசு என் காலையும் , எனது இதயத்தையும் சேர்த்து கழுவினார். இந்த நிகழ்ச்சி யேசுவின் ஆழ்ந்த அன்பை என்னால் புர்ந்து கொள்ள முடிந்தது.
கலவாரி மலைக்கு யேசுவோடு சேர்ந்து அடியெடுத்து வை: மனதுக்கு இணிய செயலாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய முற்படவேண்டும். முதலில் ஏன் யேசு உங்களின் கால்களை கழுவினார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சிறிது நேரம், யேசு உஙகள் காலை கழுவுவது போல் நினைத்து கொள்ளுஙகள். உஙகள் முன் முழஙகாலிட்டு உஙகள் கால்களின் அழுக்குகளை மென்மையாக துடைந்து கழுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கல். அப்புறமாக புந்த வியாழன் திருச்சடங்குகளில், 'யேசு என்னை எந்த மாதிரி பனி விடை செய்ய அழைக்கிறார்' என்ற் கேள்வியுடன் கலந்து கொள்ளுஙகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment