ஏப்ரல் 25 2007
Good News Reflection
Wednesday of the Third Week of Easter
April 25, 2007
Feast of Saint Mark, evangelist
Today's Readings:
1 Peter 5:5b-14
Ps 89:2-3, 6-7, 16-17
Mark 16:15-20
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
மறையுரை:
எந்த அடையாளங்கள் உன்னோடு சேர்ந்தே இருக்கிறது?
யேசு இன்றைய நற்செய்தியில், "இந்த மாதிரியான அடையாளங்கள்" கிறிஸ்தவர்களாகிய உங்களோடு சேர்ந்து வரும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் பல அற்புத அடையாளங்களில் பட்டியலிடுகிறார். மேலும் பல வியப்ப்டைய செய்யும் அடையாளங்களை பைபிளில் பல்வேறு இடங்களில் எடுத்துரைக்கிறார். இன்னும் புதிய ஏற்பாட்டில்,இன்றைய முதல் வாசகத்தில் பார்ப்பது போல, நாம் பல கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வரும் எடுத்து காட்டுகளை பார்க்கிறோம்,
எந்த விதமான ஆச்சரியமான அடையாளங்களும், நம்முடைய சுய தம்பட்டங்களுக்கோ அல்லது, நம்மின் சுய சந்தோசங்களுக்காக பயன்படுத்தகூடாது. அல்லது நமது வாழ்க்கையை சுலபமாக்கவோ பயன்படுத்தகூடாது. எப்போத்மே அவைகள் எல்லாம், மத /மன மாற்றத்திற்கு உதவ கூடிய கருவியாகும்.
உங்களுடைய தினசரி வாழ்வில், என்ன மாதிரியான அடையாளங்கள் சேர்ந்தே இருக்கின்றன? (ஒ, நான் தினசரி வாழ்வு என்று குறிப்பிட்டேன், ஆம் இது ஒரு சவால்) கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடமிருந்து உங்களை எது குறிப்பிடபடும்படி வேறுபடுத்துகிறது. இந்த வார்த்தை "பரிசுத்தம்" என்பது, இவ்வுலகிலிருந்து வேறுபட்டதாகும். கடவுளரசிற்கு சொந்தமானது. இது "தெய்வீகம்" அல்லது "மிக சரியான" என்ற வார்த்தைகளிலிருந்து மாற்று அர்த்தம் கொண்டது.
நீ பரிசுத்தமானவனா? அல்லது புனிதமானவனா? ஆமாம், நீ பரிசுத்தமானவன் தான். நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன். புனித வாழ்க்கையை விட்டு விலகி வாழ்கிறீர்களா? ஆமாம், நீங்கள் அவ்வாறு நடந்து கொள்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட வேறு மாதிரி நடந்து கொண்டாலும். நீங்களும், நானும் இன்னும் மிக சரியான பரிசுத்தத்தை பெறவில்லை.
நாம் இன்னும் சரியாக நம் புனிதத்தை அடையவில்லை. (மேலும், நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அடைந்து அதை முடித்த பின்பு தான், நாம் இந்த பரிசுத்தத்தை அடைய முடியும்) இருந்தும், நாம் பரிசுத்தமானவர்கள். நாம் மேலும் எப்படி இதில் உறுதியாக இருக்க முடியும்.? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மோடு இருக்கிறார். நம்முடைய ஞான்ஸ்நானத்தில், நாம் பரிசுத்த மானவர்கள் ஆனோம், உறுதிபூசுதலில் அதனை மீண்டும் புதுபித்து, பரிசுத்த ஆவ்யின் மேல் உள்ள நம்பிக்கையை, பரிசுத்த வாழ்வில் மேலும் வளர்கிறோம்.
Tuesday, April 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment