Sunday, April 22, 2007

மறையுரை April 23rd 2007

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார் 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.


மறையுரை:

முழுமையான அருளை அடவது

கன்னி மரியாள் தான், மனித குலத்தில் "அருள் நிறைந்தவளா?", இன்றைய நற்செய்தியில், ஸ்டீபன் கூட அருள் நிறைந்தவர் தான்!. "அருளை" ஒரு செயலாக நினைத்து கொள், அதனை கடவுள் உனக்கு கொடுத்து, அவருடைய அன்பளிப்பு எல்லாம் சேர்த்து, உன்னில் அந்த அருளை வைத்திருப்பதாக நினைத்து கொள். முழுமையான அருள் நிறைந்தவராக இருப்பது என்பது, நாம் எல்லவற்றிர்க்கும், முழுவதுமாக நாம் திறந்த மனதுடன், இந்த அருளுடன இனைந்தவராக இருத்தல் வேண்டும். நான் "அருள் நிறைந்த நிலையில்" இருக்கும்போது, பாவங்களிலிருந்து விடுபட்டவராகவும், கடவுளுக்கு எதிரான விசயங்களிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். நாம் கடவுளோடும் , மகன் கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இனைந்து இருக்கிறோம்.

னற்கருணையை நாம் பெறும்போது .நாம் "முழு அருள் நிறைந்தவராக", ஆகிறோம். உன்மையான கிறிஸ்துவின் இருப்பு குருவானவர் உருவில் அங்கு தான் இருக்கிறார். குருவானவரும், முழு குழுவோடும், அந்த குழுவானது நமது பாவங்களால், காயப்பட்ட குழுவாகும். கிறிஸ்து நமது பாவங்களை எடுத்து , அவருடைய சிலுவையோடு அறைந்து, நமக்கு கிடைக்க வேண்டிய தன்டனையிலிருந்து, விடுவிக்கிறார், மற்றும், நம் பாவங்களால் ஏற்பட்ட பிரிவுகளை குணமாக்க ஆர்ம்பிக்கிறார்.

இந்த குணமாக்குதல் முழுமையடைய, நம்மிடமிருந்தும், ஆக்கமும், செயலும் தேவை. ஆனால், இந்த நற்கருனையில், கடவுளின் செயல், அருள் நிறைந்தது, இது ஒரு அருள் நிறைந்த அனுபவமாகும். இது நமக்கு அதிகாரம் கொடுத்து, நம்மையே மாறச்செய்து, இனி அதே பாவங்களை தொடராமல் இருக்க செய்கிறது. நற்கருணையில் , ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவமாகும்,

நாம், முழு அருள் பெற இன்னோரு வாய்ப்பு, திருப்பலியின் போது நமக்கு கிடைக்கிறது. நமது பாவங்களை நினைத்து, கிறிஸ்த்வின் இரக்கத்தை இறைஞ்ச குருவானவர் சொல்லும் போது, இது ஆரம்பிக்கிறது. மேலும் இறைவனின் வார்த்தைகளை கேட்கும்போது, அதனை தொடர்ந்து, பிரசங்கத்தின் மூலம் விளக்கம் பெறும்போதும், இது தொடர்கிறது. அப்புறம், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை குழுவோடு சொல்லும் போது, நமது பாவங்கள் குணமளிக்கப்படுகிறது. மற்றவர்களுடன், நாம் சமாதானம் செய்ய்ம்போதும், நாம் இந்த சமூகத்தினருடன், நமது பாவங்களினால், ஏற்பட்ட பிரிவை குணமாக்குகிறது.

நாம் எப்போது கிறிஸ்துவின் உன்மையான் ப்ரசன்னத்தை பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே, அருளை, நாம் சந்தித்துவிடுகிறோம். நாம் நம்மையே முழுவதுமாக திறந்து, இந்த அருளை அடைய, நாம் ஜெபிக்கும்போது, "இறைவா உன்னை அடைய நான் தகுதியற்றவன், ஆனால் ஒருவார்த்தை மட்டும் சொல்லும், நான் குண்மடைவேன்" முழுவதுமாக அருளை அடைகிறோம்.

உன்னால், நற்கருணையை, சில காரணங்களுக்காக பெற முடியாத போது, கடவுள், உன் விருப்பத்தை தெரிந்து கொள்கிறார். நீங்கள், தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு திருந்தி, நல்ல நிலையில் இருக்கும்போது, நீங்கள் "இறைவா, உன்னை அடைய நான் தகுதியற்றவன்.. " என்று ஜெபம் செய்யும் போதே, கடவுளின் அருளால், நிறைக்கப்படுகீறீர்கள். ஆவியின் நற்கருணையை பெற்று கொள்ளுகிறீர்கள். ஆனால், முழுமையான இறைவனை நற்கருனை மூலம் பெற்றுகொள்ள எல்லா முயற்சியையும் செய்ய்ங்கள். குருவான்வரிடம் பேசி, உங்கள் சூழ்நிலைக்கு, வேறு மாற்று வழியை யோசியுங்கள். திருச்சவை ஆண்டவர் வழங்கும் எல்லா வழிகளையும் உஙகளுக்கு கொடுக்க தயாராய் இருக்கிறது.

நற்கருணையை பெறுவது என்பது, கடவுளின் இணைப்பை, குழுவோடு சேர்ந்து, பெறுவது ஆகும். நாம் நமக்கு தெரிந்தே, பாவங்களில் தொடர்ந்து கொண்டிருந்தால், நாம் குழுவிலிரிந்து பிரிகிறோம். இது நற்கருணைக்கு எதிரான செயல் ஆகும். தயவு செய்து, நீங்கள் பாவம் செய்யாதது போல் தொடர்ந்து செய்ய வேண்டாம். நாம் நமது வாழ்வை, புனிதப்படுத்துவது என்பது, மிகவும் கடினமான் ஒன்று தான், ஆனால், கடவுள், தெய்வீகமான உதவி செய்து, அவருடைய மிக பெரிய அருளை அடையசெய்கிறார்.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you?
Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: