http://www.gnm.org
http://www.arulvakku.com
எசாயா
அதிகாரம் 50
4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. 6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். 8 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். 9 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும். 10 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 11 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. 12 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 13 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். 14 நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். 15 இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 26
14 பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15 ' இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். 17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்களிடம், ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ' எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் ' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் ' என்றார். 19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். 20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார். 22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ' ஆண்டவரே, அது நானோ? ' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23 அதற்கு அவர், ' என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும் ' என்றார். 25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் ' ரபி, நானோ? ' என அவரிடம் கேட்க இயேசு, ' நீயே சொல்லிவிட்டாய் ' என்றார்.
மறையுரை :
நாம் எப்படி கிறிஸ்துவுக்கு துரோகம் செய்கிறோம்? நம்முடைய சுய நலத்தினால். இன்றைய நற்செய்தியில் யூதாஸின் நோக்கத்தை பார்ப்போம். யேசுவின் மூன்று வருட நிபந்தனையற்ற அன்பினை அனுபவித்த பின்பும், ஏன் யூதாஸ் யேசுவுக்கு துரோகம் செய்தான்?
யூதாஸ் சுயநலமுள்ளவனாக இருந்தான் என்பதனை, அவன் எப்படி யேசுவிற்கு வரும் நன்கொடைகளை மோசடி செய்தான் அறிவோம்(யோவான்: 12:6). "எனக்கு அதில் என்ன கிடைக்கும்" என்ற எண்ணத்திலேயே இருந்தான். அவன் யேசுவை, ரோமானியர்களின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து மீட்கும் மெசியாவாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அது யேசுவால், ஏற்றுகொள்ள முடியாத ஏமாற்றமாக ஆகி விட்டது. யூதாஸின் கணகள் அவனுடைய சொந்த யோசனையினால் கட்டப்பட்டிருந்தது. அவனால் கடவுள் வேறு ஓர் நல்ல யோசனையை வைத்திருப்பார் என்ற விசயத்தை அறிந்து கொள்ள முடியவிலலை.
யூதாஸை போல் சுய நலமுள்ள மக்கள் எந்த ஒரு ஏமாற்றத்தையும் தாங்கிகொண்டு சும்மா இருப்பதில்லை. அவன் யேசுவை இஸ்ரேல் மக்களிடம் காட்டி கொடுக்க முடிவு செய்த போது, இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ' என்று கேட்டான். அவர்கள் அதற்கான உறுதியை தரும் வரை, அவன் யேசுவை காட்டிகொடுப்பது என்பது கேள்வி குறியாகவே இருந்தது.
நீ என்றாவது, யேசு உனக்கு என்னவாக இருக்கவேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என நினைத்து , அதனை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து இருக்கிறாயா? நாமெல்லாம் இந்த ஒரே ப்ரிவில் தான் இருக்கிறோம்.நாம் யேசுவிடம் எதிர் பார்த்தது கிடைக்காதபோது அல்லது அவர் நம்மிடம் மிகவும் கழ்டமான விசயத்தை செய்ய கூறும்போது, "நமக்கு இதில் என்ன இருக்கிறது" என்ற கேள்வியில் நுழைந்துவிடுகிறோம்.
நம்முடைய ப்ரச்னைகளுக்கு முடிவு தேடி, கடவுளிடம் எதிர்பார்த்து, அது அவரிடமிருந்து கிடைக்காத போது, நாமெல்லாம், "நமக்கு இதில் என்ன இருக்கிறது" என்று கேட்கும் பகுதியில் அல்ல்து அது மாதிரியான சுழ்னிலையில் விழுந்துவிடுகிறோம். நம்மை தற்காத்து கொள்ளும் பயம் வந்து அதனில் வீழ்ந்து விடுகிறோம். சுய நலம் நம்முடைய தேவைகளை, நம் மகிழ்ச்சியை , நம் பாதுகாப்பை, நம் செல்வங்களை மற்றும் நம் வாழ்ககை முறையை காத்துகொள்ள செய்கிறது. கடவுள் வேறு ஓர் நல்ல முடிவை அல்லது நல்ல தீர்வை வைத்திருப்பார் என்பதனை காண முடியாமல, சுய நலம் நம் கண்கலை கட்டி விடுகிறது.
யூதாசை போல நாமும் நம் சுய நலத்தினால், நாம் யேசுவிற்கு துரோகம் செய்கிறோம். நாம் கடவுளை விசுவசிப்பதாக பகிரஙமாக அறிவிக்கிறோம். ஆனாலும், நம் சுய் நலத்தால் தேர்வு செய்யும் வாழ்க்கை முறை வேறு விதமாக இருக்கிறது. நமக்கு தேவையான விசயஙகள் நமக்கு அவரிடமிருந்து கிடைக்கும் போது தான், நாம் அவரை நம்புகிறோம். நமக்கு சுலபமாக இருக்கும்போதுதான் அவரை வழிபடுகிறோம்.
இப்போதைய கேள்வி, நான் யேசுவிற்கு துரோகம் செய்தேனா? என்பது இல்லை. நம் ஒவ்வொரு துரோகத்திற்கு பிறகும் எவ்வளவு விரைவாக, நாம் கடவுளிடம் சரனைடைந்து, அவருடைய மன்னிப்பு கோருகிறோம், என்பது தான். ராயப்பரும், யேசுவிற்கு துரோகம் இழைத்தார், ஆனால், அவர் யேசுவின் மேல் வைத்திருந்த அன்பினால் அவருடைய சுயநலம் சிறிது நேரம் தான் நீடித்தது
மன்னிப்பதற்கு ஓர் அடி எடுத்து வை: சீடர்களோடு கடைசி இரவு உணவில் கலந்து கொள்வதாக நினைத்த்க்கொள், யேசு அவருடைய உணவை உனக்கு தருகிறார். உன் கண் வழியாக உன்னை பார்க்கிறார். உன் இதயத்தை அவருக்கு தெரியும். உன் துரோகங்கள் தெரிந்தும் உன்னை அன்பு செய்கிறார். நீ என்ன சொல்வாய் அவரிடம்? உன் பாவங்களை ஒப்புக்கொள். அவருடைய சிரிப்பை ஏற்று கொள். ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த முறையை பின்பற்று. ஏனெனில் இந்த பயிற்சி கால்ங்களை கடந்து அவருடைய கடைசி இரவு உணவோடு, நம்மை சேர்த்து வைக்கிறது.
Today's Readings:
Isaiah 50:4-9
Ps 69:8-10, 21-22, 31, 33-34
Matt 26:14-25
http://www.usccb.org/nab/040407.shtml
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment