Wednesday, April 25, 2007

ஏப்ரல் 29 ஞாயிறு மறையுரை

ஏப்ரல் 29 ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10

27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.


மறையுரை:


இன்றைய நற்செய்தி மிகவும் சிறிய பகுதியை கொண்டது ஆனால், மிகவும் முக்கியமான கருத்தை கொண்டது. யேசு தான் நமது நல்லாயன், அவர் ஒருவரோடு தான் நாம் பின் செல்லவேண்டும். அவர் ஒருவரைதான் நாம் கண்மூடிதனமாக நம்பலாம். மற்றவர்கள், நம்மேல் அதிகாரம் கொண்டவர்கள், நமக்கு நல்லாயனாக இருக்கலம், ஆனால், அவர்களை நாம் கண்மூடிதனமாக பின் பற்ற வேண்டியதில்லை. அவர்களில் நல்லவர்கள், மிகவும் உயர்ந்தவர்களை கூட நாம் பின்பற்ற வேண்டியதில்லை. நாம் பிஷப்பானவருக்கும், பங்கு சாமியாருக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் எல்லாம் தவறு செய்கிறார்கள், பாவம் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியான புரிதலின்றி அவர்கள் பொறுப்புகள் என்ன என்று தெரியாமல் தவறு செய்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியின் அன்பளிப்பான பகுத்தறியும் ஆற்றலை உபயோகித்து,னல்ல முடிவை எடுக்க வேண்டும். நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறான முடிவினால், கடவுளுக்கு துயரத்தை கொடுக்கிறோம்.

யேசு மட்டும் தான் நாம் கண் மூடி நம்பபடக்கூடியவர். யேசு மட்டும் தான் எல்லாவற்றிலும் மிக சரியானவர் அவருக்கே எல்லாவற்றிர்க்கும் புரிதல் உண்டு மேலும் எந்த பாவமும் செய்யாதவர். யேசு மட்டும்தான் மிக சரியான வெற்றியை தரும் முடிவுகளை எல்லா நேரமும் எடுக்க வல்லவர். அவரே நம்மை தலமையேற்று வழி நடத்தி, எல்லா நேரங்களிலும் (அ) சூழ்நிலைகளிலும், நாம் நமக்கே தெரியாமல் சாத்தானோடு சேர்ந்து எதுவும் செய்யாமல் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். யேசுவுக்கு மட்டும் தான் நன்கு பகுத்து அறிந்து நமக்கு எது நல்லது திட்டம் அதனை நிறைவேற்றுவார். யேசு மட்டும் தான், நம்மை மோட்சத்திற்கு மிக கிட்டவும், அங்கே நுழையவும், பல அபாயங்களுக்கிடையே அழைத்து செல்ல முடியும்.

மேலும் யேசுவால் மட்டும் தான், நாம் தவறுகள் செய்ய்ம்போதோ அல்லது அவருடைய திட்டத்தை விட்டு விலகி செல்லும்போதோ நம்மை பார்த்து சிரிக்க முடியும். ஏனெனில் அவருக்கு, நாம் இன்னும் அவரை அன்பு செய்கிறோம் என்று தெரியும், மேலும் நாம் சரியானதை தான் செய்ய விரும்புகிறோம். என்று அவருக்கு தெரியும். அவருக்கு புதிய திட்டத்தை கொடுத்து, நமமை பாதுகாப்பான வழிக்கு கொண்டுவர தெரியும். அவர் இரக்கத்துடன் நம்மை கட்டி கொள்கிறார், அதன் மூலம், நாம் தந்தையின் கைகளை விட்டு போகாமல் பார்த்து கொள்கிறார்.

நாம் எப்போதாவது, யார் மேலும் அவநம்பிக்கை கொண்டால் -- நாம் நம் மேல் அவநம்பிக்கை கொண்டாலும் -- நாம் எப்போதுமே நம்பலாம், ஏனெனில் யேசு எப்போதும் இருக்கிறார், உறுதியான வழியில், நம்மை பாதுகாத்து வழி நடத்துகிறார். நம்மை எப்போதுமே பாதுகாப்புடன், மோட்சத்திற்கு செல்ல வழி நடத்தி , அங்கே சரியாக சேரச் செய்கிறார்.

சுய சிந்தனைக்கான கேள்விகள்:
நீயே உன் மேல் எவ்வளவு நம்பிக்கை கொள்கிறாய். மேலும் எவ்வாறு உண்மையாக இருந்து மோட்சத்தின் பாதையில் செல்ல முடியும் என்று நினைக்கிறாய்? வேறு யாரை நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீ இந்த வாரம் யேசுவிடம் இந்த விசயங்களை ஒப்படைத்து விடு.

No comments: