Sunday, April 8, 2007

monday 9th april reflection

Good News Reflection
Monday in the Octave of Easter
April 9, 2007
Today's Readings:
Acts 2:14, 22-33
Ps 16:1-2a, 5, 7-11
Matt 28:8-15
http://www.usccb.org/nab/040907.shtml

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 28

8 அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். 10 அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார். 11 அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். 12 அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, 13 ″ ' நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர் ' எனச் சொல்லுங்கள். 14 ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்வோம் ″ என்று அவர்களிடம் கூறினார்கள். 15 அவர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள் வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

http://www.arulvakku.com


மறையுரை:

கிறிஸ்து உயிர்ப்பின் நல்ல செய்தியுடன் அடுத்து முன்னேறுவோம்:

அதிக சந்தோசத்தோடும், அதே நேரத்தில், பயத்துடனும் எப்படி இருப்பது என உனக்கு தெரியுமா? அப்படித்தான், இன்றைய நற்செய்தியில் வந்த பெண்களும், உயிர்த்த யேசுவை பார்த்தவுடன் அனுபவப்பட்டார்கள்.நானும், பல நேரங்களில் இது மாதிரி உணர்ந்திருக்கிறேன். எடுத்துகாட்டாக, என்னுடைய முதல் குழந்தை பிறந்த போது, அந்த மிக மகிழ்ச்சியான சந்தோசதிற்கிடையே, ஒரு பயம் என்னை ஆச்சரியபட வைத்தது. நான் நல்ல அம்மாவாக இருந்து இந்த மகனை கடவுளின் மகனாக வளர்ப்பேனா? (அதற்கு பதில்: ஆமாம், ஆனால், பரிசுத்த ஆவியுடன் துனையுடன்)


அதிக மகிழ்ச்சியுடன், ஆனால் மிக கடினமான, முடிக்கமுடியாத செயல் உங்களுக்கு கொடுக்கப்பட்டாதாக நினைத்துகொள்ளவும்.

ஈஸ்டர் தவக்காலத்தின் முடிவல்ல. கிறிஸ்துவின் உயிர்ப்பு, பழைய வாழ்க்கையின், பழைய பழக்க வழக்கங்களின், அல்லது பழைய பிரச்னையிலிருந்து வெளியே வர விரும்புவதின் முடிவு அல்ல. ஈஸ்டர் காலம், ஒர் முடிவில்லாத காலம். அல்லது ஓடி ஓடி மற்ரவர்களிடம் இறைவனின் நல்ல செய்தியை கூறுவது ஆகும்.இது எப்படியென்றால், முதல் ஈஸ்டர் அன்று எப்படி அந்த சகோதரர்கள், யேசுவின் உயிர்ப்பின் செய்திகளை கூறினார்களோ. யேசுவின் உயிர்ப்பை அனுபவிப்பது என்பதே, அது ஒரு பருவ காலமாகும். வாழ்க்கை முழுவதும், உங்களுடைய விசுவாசம், யேசுவின் உயிர்ப்பை அறியாதவர்களுக்கு ஊற்றாய் இருக்கட்டும். எப்படி அந்த பெண்கள் சீடர்களுக்கு அந்த அற்புதமான உயிர்ப்பு நாளில் இருந்தார்களோ? அதே மாதிரி உங்கள் விசுவாசம் இருக்கட்டும்.



உஙளுக்கு அந்த மாதிரியான வேலை எவ்வளவு சந்தோசத்தை தருகிறது.

நாமெல்லாம் ஈஸ்டரின் மக்கள் என்பதை உண்மையாக புரிந்தோமானால், நாமும் பாவங்களின் அழிவிலிருந்து, மீட்கப்பட்டிருக்கோம் என்று புரிந்தால், நாம் எப்படி நாம் அடையும் சந்தோசத்தை தடுக்க முடியும். கிறிஸ்து சாத்தான் மீது மேல் பெற்ற வெற்றியை நமக்குள்ளே வைத்து கொள்ள விரும்புவதில்லை. நாம் நம்முடைய பயத்தை தள்ளி வைத்து விட்டு, நாம் கண்ட விசயத்தை, யேசுவின் உயிர்ப்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

தவக்காலத்தில் நம் நோக்கம், நம் உள் மனத்தை நோக்கி இருந்தது. நம் பாவத்திற்காக நாம் மன்னிப்பு கேட்டு அக்காலத்தை செலவிடுகிறோம். தற்போது, நம் நோக்கம், நம்மை விட்டு வெளியே செல்கிறது. இப்போது நமக்கு பயம் வருகிறது. எங்கே நம்மை விலக்கி விடுவார்களோ. அல்லது நம்மை கொடுமை படுத்துவார்களோ? என்ற பயம் இருக்கிறது.


ஆனால் யேசு நமக்கு சொல்கிறார்: "பயப்பட வேண்டாம்", அவர் முதல் சீடர்களுக்கு சொன்னது போல. ஏன் அப்படி? ஏனெனில், யேசு நம்மோடு எப்போதும் இருக்கிறார். அவர் நம்மில் உள்ள குறைகளை பரிசுத்த ஆவியின் உதவியுடன் நிரப்புகிறார். யேசு நம்மை முத்தம் கொடுத்து, நம்முடைய வேதனையான காலங்களில் நம்மை அனைத்துகொள்கிறார். அவருடையா ஆவி நமக்கு ஞானத்தையும், உற்சாகத்தையும் தருகிறது.

சிலுவையை தாண்டி அடுத்த அடி எடுத்து வை: ஈஸ்டர் ஞாயிறின் சந்தோசம் நல்லது, ஆனால், நாம் கொஞ்சம் யதார்த்தமாக இருப்போம். நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்விலும், நாம் சந்தோசத்தோடு வாழ்கிறோமா? அல்லது பயத்துடன் வாழ்கிறோமா? ஈஸ்டர் ஞாயிறு, ஒரு காலத்தின் ஆரம்பம். ஈஸ்டரின் விசுவாசம், வாழ்நாள் சந்தோசத்தின் ஆரம்பம். நாம் கொண்டாட இன்னும் யேசுவிடம் அதிகம் இருக்கிறது. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் விசுவாசத்தை எப்படி கொண்டாடுகிறோம் என்று பார்க்க வேண்டும் . மக்களின் துயரத்திலிருந்து அவர்களை எழுப்பாத , அல்லது யேசு நம்மோடு வாழ்கிறார் என்பதனை நிரூபிக்காத நற்செய்தி உணமையாக நற்செய்தியாக இருக்காது.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

No comments: