Saturday, December 27, 2008

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 28, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா (யேசு, மரியாள், சூசையப்பர்)
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8, 11-12, 17-19
Luke 2:22-40


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 2
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23 ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 ' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(thanks to www.arulvakku.com)


போப் இரண்டாம் ஜான்பால், ஆயர்களுக்கு எழுதிய திரு நூலில் ("Rosarium Virginis Mariae) , (20 வது பத்தியில்), இன்றைய நற்செய்தியை குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். "ஜெபமாலையின் 5வது சந்தோச தேவ ரகசியங்கள் "யேசு கோவிலில் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்டார்" மூலம், சந்தோசமும், அங்கு நடந்த நிகழ்வுகளும் கலந்தே இருந்தன. அங்கே, யேசு தெய்வ உருவாக, தெய்வ ஞானத்துடனும், பல கேள்விகளுக்கு பதிலும் எடுத்துரைத்து, அவரே பல கேள்விகளையும் கேட்டார். அவரே ஒரு ஆசிரியராக அனைவருக்கும் தோன்றினார். யேசுதான் கடவுளின் மகன் என்ற தேவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துவது, கடவுளின் நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தபடுகிறது. அந்த நற்செய்தியில், எல்லா நெருங்கிய உறவுகளும், கடவுளரசின் தேவைகளுக்காக சவால் விடப்படுகின்றன. மரியாளும், சூசையப்பரும் பயத்துடனும், கவலையுடனும் இருந்தனர். யேசுவின் வார்த்தைகளை "புரிந்து கொள்ளவில்லை" " என்ரு போப் கூறுகிறார்.

நாமும் தான், அடிக்கடி யேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறோம். அவருடைய வாசகங்கள் நம்மை மிகபும் கடினமான வாழ்க்கையை ஏற்றுகொள்ள வேண்டும் என நமக்கு சவால் விடுகிறது. அந்த வாழ்வு என்னவெனில், நமது எதிரிகளுக்கே நல்லது செய்வது, நமது இன்னொரு கன்னத்தையும் அவர்களுக்கு கான்பிப்பது போல. உண்மைக்காக நாம் உறுதியுடன் வாழ்வது, மேலும் நிலையாக கடவுளின் கோட்படுகளுடன் அவற்றிர்காக நல்ல முறையில் வாழ்வது.

நமக்கு சரிப்பட்டு வராத, மனதிற்கு ஒப்பாத காரியங்களினால் தான் கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்றால், நமது உலக வாழ்விற்காக நாமே நம்மை சமாதானம் செய்து கொண்டு, விலகியே நிற்கிறோம். ஆனால், கடவுளரசின், உண்மையான தேவைகளை புரிந்து கொண்டால், அதனுடைய பயன்களை அறிந்து, கடவுளரசிற்கு கீழ்படிவோம்.

சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றாலும், நாம் யேசுவின் வார்த்தைகளை அப்படியே நம்பி , அவை யாவுமே, சரியானதென்றும், உண்மையானதென்றும் விசுவாசம் கொள்ளவேண்டும். அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்கள் மனதில் ஆழமாக யோசித்தது போன்று, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டாலும், யேசு நம்மிடம் என்ன கேட்ட்கிறாரோ அதை செய்தது போல நாமும் செய்ய வேண்டும்.


இவ்வாறு விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்தால், கிறிஸ்துவிற்காக முழுதுமாய் வாழும் வாழ்வினால் உண்டாகும் பயனை, சந்தோசத்தை நம்மல் உணர முடியும்.

இன்றைய திருகுடும்ப திருவிழாவில், மரியாளும், சூசையப்பரும் நமக்கு யேசுவை புரிந்து கொள்ளவும், அவரின் வார்த்தைகளை கேட்கவும் உதவ வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம். நமக்கு சோதனைகளும், ப்ரச்னைகளும் ஏற்படும்போது, அவரின் பார்வையிலிறிந்து விலகி நிற்கும்போது, மரியாளும், சூசையப்பரும் நமக்கு உதவ வேண்டும் என்று ஜெபம் செய்வோம். யேசு எப்போதுமே நம்மிடையே இருக்கின்றார் என்பதை தெரிந்து கொள்ள நாம் கற்க வேன்டும். யேசுதான் நமக்கு உதவி வருகிறார், வழி காட்டுகிறார், கருனையுடன் அன்பு கூர்கிறார், நமது சவால்களின் போது நமக்கு உதவி வருகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 19, 2008

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

21, டிசம்பர், 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
திருவருகை கால 4வது ஞாயிறு

2 Sam 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Rom 16:25-27
Luke 1:26-38

அதிகாரம் 1
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.'அருள் நிறைந்தவரே வாழ்க!' என்று வுல்காத்தா என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் உள்ளது. ------ 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்னும் சொற்றொடரும் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35 வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38 பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கன்னி மரியாள் யேசுவை கர்ப்பத்தில் ஏற்று கொள்வதற்கு முன்பே, அவரை கிறிஸ்துவின் ஒளி எப்படி பாதித்தது என்று குறிப்பிடுகிறது.

முப்பது வருடங்களுக்கு பிறகு, யேசு இந்த உலகின் இருளுக்குள், வீசும் ஒளியாக உருவானார். இருந்தாலும், யேசு தான் கடவுள்; அவர் எப்போதுமே இருக்கிறார். அவர் உருவாக்கப்பட்டவர் அல்ல. கடவுளின் ஒளியாவார். அவரது ஒளி, கன்னி மரியாளுக்கு கருவாய் உருவானதிலிருந்தே, ஒரு விளைவை உண்டாக்கி கொண்டிருந்தது.

கடவுளின் மகன் மனித உருவாக இந்த உலகிற்கு வருவதற்கு, அவரது ஆவி மரியாளின் முழு உடலையும் ஆவியால குளிப்பாட்டியது. கடவுளின் தூய பிரகாச ஒளி, அன்னை மரியாளை குளிப்பாட்டியது. அதனால் தான், அன்னை மரியாள், எந்த ஒரு ஆனுடனும் தொடர்பில்லாமலே, அவர்கள் பார்க்காமலேயே, கன்னி மரியாள், மெசியாவை தன் வயிற்றுக்குள் கர்ப்பமாக தாங்கினாள். இந்த ஒளியின் மூலம், கடவுள் தான் இதற்காக நம்மிடம் கேட்டார், கடவுள் தான் இதை செய்கிறார் என்று நம்பினாள்.

கன்னி மரியாளுக்கு அதுவே போதுமானது.

கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாக இந்த உலகிற்கு கொன்டு செல்ல, கடவுள் நம்மையெல்லாம் அழைக்கிறார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தெய்வீக கடவுளின் அழைப்பை எந்த அளவிற்கு நீங்கள் கடமைபட்டு செய்கிறீர்கள்? கடவுள் நம்மிடம் எந்த செயல்லை செய்ய சொல்கிறாரோ? அந்த செயலுக்கு தேவையான ஆற்றலை, கடவுள் நமக்கு தருகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை அறிவார், எப்போது உங்களை அவரின் கடவுளர்சிற்காக செய்ய அழைக்கிறார் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்போதுமே நம்ப தகுந்தவர் மேலும், அவரை சார்ந்து இருக்கலாம். எந்த ஒரு பயமும் தேவையில்லை.


கடவுள் செய்யும் ஒவ்வொரு செயலுமே நல்ல செயல்களே ஆகும். நம்மை ஈடுபடுத்தும், கடவுளின் திட்டம், சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையாகவே இருக்கும். நாம் கிறிஸ்துவை பின் சென்றால், மிகவும் சீக்கிரமாகவோ, அல்லது கொஞ்சம் தாமதமாகவோ, நாம் யேசுவோடு சிலுவையில் தொங்குவோம். ஏனெனில், அதுவே மிகவும் மேலான முடிவாகும். அதுவே நல்ல முறையில் செயல்படுத்த கூடிய, வெற்றியை தேடிதருகிற செயலாகும். அதன் மூலம், பலரின் வாழ்வை மாற்றியமைக்க முடியும்.

இதையெல்லாம் நினைவில் வைத்து கொண்டு, கடவுள் அவரது அரசிற்காக, நம்மை அழைக்கும் போது, நமது பதில் "ஆம்" என்று தானே இருக்கும்?
ஆனால், அது சரியாக நடப்பதில்லை? கண்டிப்பாக, நாம் அவரோடு சேர்ந்து ஈடுபட ஆவலாயிருக்கிறோம், அவரின் ஆணைக்கு நாம் "ஆம்" என்கிறோம். நாம் அவர் என்ன செய்ய சொல்கிறார் என்று தெரியாவிட்டாலும், கடவுள் இதனை செய்பவர் என்று இருக்கிறோம்.

அடிக்கடி, கடவுள் நம் மூலம் செய்ய நினைக்கும் திட்டத்தை, அவரால் நம் மூலம் செய்ய முடியாது என்று நினைக்கிறோம். ஏனெனில், நாம் வலிமையில்லாதவர்கள் என்றும், பாவம் செய்பவர்கள் , முறையான தகுதி உள்ளவர் இல்லை என்றும் நமக்கு தெரியும். உங்கள் எண்ணங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாதேர்கள். கடவுளை நம்புங்கள்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Wednesday, December 10, 2008

14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி

14, டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால 3வது ஞாயிறு
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28


யோவான் (அருளப்பர்) நற்செய்தி
'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, யோவான், "ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்" என்று கூறுகிறது. யேசு தான் அந்த ஒளி, அவருடைய ஆவி, நமக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. அதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, பரலோகத்திற்கு யேசுவை பின் செல்ல வழி வகுக்கும். ஆனால், யோவானால் கொடுக்கப்பட்ட சான்று தான் என்ன? அவர் ஒளியை குறித்து எவ்வாறு சான்று பகர்ந்தார்?.

யோவானின் சான்று: "அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்"

யேசுவை பார்க்க முடியாத ஒரு கனத்தை நினைத்து பாருங்கள். உங்கள் கண்களை அவர் பக்கம் திரும்ப வைத்தது எது? யாருடைய குரல், யேசுவின் பக்கம் திரும்ப வைத்தது? முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய நேரம் இது, நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதலாயும், குணப்படுத்த வேண்டும். பாவங்களில் வீழ்ந்தவர்களுக்கு, விடுதலை பெற்று தரவேண்டும். மிகவும் நெருங்கிய நட்புடன் கடவுளிடம், எப்படி அவர் ஆசிர்வாதத்தை பெறுவது என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

யோவானை போல, நாமும் சான்று பகர வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு போல நாமும் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகின் சத்தத்தை விட, நாம் மிகவும் சத்தமாக இந்த உலகில் குரல் கொடுக்க வேண்டும். நிறைய பேர் குழப்பங்களும், நம்பிக்கையின்மையாலும், வலியினாலும், மனசஞ்சலத்தாலும், அவர்கள் ஆன்மா இறையரசை விட்டு விலகி நிற்கிறது. நாம் அவர்கள் தேவையை அப்படியே ஒதுக்கி விடலமா? அவர்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து விடுவது அன்புக்குரிய செயலாகுமா? அப்படி இருக்க கூடாது. ஒரு நால், யேசுவிடம் நாம் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நமது ஞான்ஸ்நானத்தின் மூலம், நாம் அவருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏன் நிராகரித்தோம் என்று அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த அழைப்ப ஏற்றிருந்தால், சிலருக்கு யேசுவை கண்டு உணர, உதவியாக இருந்திருக்கும்.

உன்னிடத்தில் எது மாதிரியான குரல் இருக்கிறது? ஏனெனில், நமக்கு கிறிஸ்து இருக்கிறார். நம்முடைய சொந்த வாழ்வு தான் நம் குரல் ஆகும். நாம் எப்படி சோதனையை கையாளுகிறோம் , எப்படி யேசுவின் மேல் நமது விசுவாசத்தை காட்டுகிறோம் என்பதே நமது குரலாக, யாரெல்லாம், சிக்கலில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு கேட்க கூடிய குரலாக இருக்கும். நம்மில் அதிக அமைதியும், அதிக அன்பையும் நாம் கொடுத்தோமானால், நமது அழுகை மிகவும் சத்தமாக இருக்கும்.



நமது குரல் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாவிட்டாலும், நாம் இந்த ஒளியில், எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை பேசுவதாகும். நாம் எப்படி உண்மையாய் வாழ்கிறோம், அதுவே மிகவும் சத்தமான உண்மையின் குரலாக இருக்கும்.


நாம் கொடுக்கும் செய்தியின் மூலம், அவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பம். ஆனால், நாம் பேச வேண்டியதை பேச வேன்டும். இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கபடுகிறது.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 5, 2008

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

7 டிசம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால இரண்டாவது ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, கடவுளுக்காக தயாரகுங்கள் என்று கூறுகிறது. கடவுள் நமக்கு என்ன கொடுப்பதாக இருந்தாலும், நமக்காக என்ன செய்வதாக இருந்தாலும், நம்மிடம் என்ன கேட்பதாக இருந்தாலும், - நாம் நேரான வழியில் நடந்து, பரிசுத்த பாதையில் நடக்க வேண்டும், மற்றும், பாவச் செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. உங்களது வாழ்க்கையில் எது இல்லாமல் இருக்கிறது! எந்த பாவங்கள், உங்களுடைய வாழ்க்கயை வறுமையாக்கியது, மாறாக உங்கள் பாவங்கள் இல்லாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்ல கனியை கொடுத்திருக்கும்?


மோட்சத்திற்கு செல்லும் பாதையில் எந்த பகுதியில் உங்களுக்கு மிகவும் கடினமாயிருக்கிறது? உங்களில் தடையாக இருக்கும் உங்கள் பாவங்களை உங்கள் கண் முன் கொண்டுவாருஙள். அல்லது உங்கள் பாதையில் உள்ள தடைகளை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.

ஆண்டவருக்காக வழியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் பாவங்களால் உண்டான, வீணான நிலத்தில், கடவுளுக்காக, விரைவு சாலையை உண்டாக்குஙல். பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தில் கலந்து கொண்டு, உங்கள் இருதயத்தில் உள்ள பாதையை அகலமாக்குங்கள், அதனால், யேசு அங்கு வர மிகவும் எளிதாயிருக்கும். அந்த அகல பாதையில், யேசு மிக விரைவாகவும், மகிமயோடும் வருவார்.

எல்லா மனிதர்களுமே புல்லை போல வலிமையற்றவர்கள் ஆவர். நம் புகழ், வளம் எல்லாமெ ஒரு பூவை போல வாடி விடும். கடவுளுடைய வார்த்தைகள் மட்டும் தான், எக்காலமும் நிமிர்ந்து நிற்கும்.


உனக்கு இருக்கும் தொந்தரவுகளையும், போராட்டங்களையும் உங்கள் மனதின் முன் நிறுத்துங்கள். இங்கே தான், நீங்கள் பாவத்திற்குள் காயப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியின் உதவியுடன், இந்த கஷ்டங்களெல்லாம், நித்திய வாழ்விற்கு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். அந்த கஷ்டங்களெல்லாம், அவ்வளவு மோசமானவையா? நிரந்தரமாக இருக்க கூடியதா? கடவுள் அந்த கஷ்டங்களிடமிருந்து (சிலுவையிலிருந்து) உங்களை தூக்கி நிறுத்துவார்.

உங்கள் வாழ்க்கையில் நன்றாக போய்கொண்டிருக்கும், நல்ல விசயங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். உங்களுடைய எந்த செயல்கள், நன்றாகவும், நல்ல பொருட்களை ஈட்டுவதாகவும், உள்ளன? அவைகளையும், நித்திய வாழ்விற்கான நல்ல வாய்ப்பாக எடுத்து கொள்ளுங்கள். அவைகள் எல்லாம், புல்களை போல சில காலம் தான் வளமாக இருக்கும? அல்லது, இன்னும் 100 வருடங்களுக்கு, நல்ல விளைவுகளை பெற்று தருமா?


அந்த நல்ல செயல்களின், பல மடங்காக பெருகி, இன்னும் 1000 வருடங்களில் அதன் வளம் என்னவாக இருக்கும்?

கடவுள் உங்களுக்கு நல்ல திறமைகளையும், அதனை உபயோகபடுத்தி, அவரின் இறையரசை பரப்ப உங்களை அழைக்கிறார். நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா? அப்படியெனில், இப்போது, பாவ சங்கீர்த்தன அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, உங்களை கடவுளின் வருகைக்காக தயார் படுத்தி கொள்ளுங்கள். அவர் உங்கள் மூலம், நித்திய வாழ்விற்கான வழியை இந்த பூமிக்கு கொடுக்க விரும்புகிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 28, 2008

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30 நவம்பர், 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு

Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)



எல்லா பொருள்களும் வைத்திருக்கும் ஒருவருக்கு, கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக என்ன கொடுப்பீர்கள்?
நமக்கு மிகவும் முக்கியமானவர்களுக்கு, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பை வெளிக்காட்ட, அவர்களுக்கு உபயோகமான அன்பளிப்பை கொடுப்போம். மேலும், அவர்களுக்கு தேவையான ஒன்றை அன்பளிப்பை கொடுத்தாலும், அது ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பன்னுகிறத? எத்தனை அன்பளிப்புகள், பீரோவில் அடுக்கப்பட்டிருக்கிறது. ?

யேசுவிற்கு பிறந்த நாள் அன்பளிப்பாக என்ன கொடுப்பாய்? உன்னுடைய கிறிஸ்துமஸ் பட்டியலில், யேசுவை விட்டு விட மாட்டாஇ என நம்புகிறேன். மற்றவர்களை விட, கடவுள் மிக பெரிய அன்பளிப்புக்கு உரியவர். ஆனால், அவருக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருக்கிறது. அல்லது அவருக்கு எதுவும் தேவையா?

இந்த திருவருகை காலம் முழுதும், ஒவ்வொரு நாளும், இந்த மறையுரையில், கடவுளுக்கு என்ன அன்பளிப்புகள் கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவையாவும், மறைந்திருக்கும் கிறிஸ்துமஸ் அன்பளிப்புகள். நாம் நற்செய்தியில், தேடி கண்டுபிடித்து, அதனை பாலிஸ் செய்து, அதனை நமது அன்பால் சுற்றி, கடவுளுக்கு கொடுப்போம். அது கண்டிப்பாக இறைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற எண்ணத்தில் நாம் அவருக்கு கொடுக்கவேண்டும்.

முதல் வாசகம், கடவுள் நமது தந்தை என நினைவுபடுத்துகிறது. பதிலுரையில், நம்மை கடவுள் அவர் பக்கம் திரும்ப வைக்க உதவ வேண்டும் என வேண்டுகிறோம். இரண்டாவது வாசகம், கடவுள் நமக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. அதனால், நீங்கள் எந்த அன்பளிப்பை கடவுளுக்கு கொடுத்தால், அவர் உனக்கு செய்த எல்லாவற்றிற்கும் பொருத்த மானதாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து வரும் நேரம் விழித்திருக்க வேன்டும் என நினைவுபடுத்த படுகிறோம். இது ஒன்றும், கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை மட்டும் குறிப்பிடவில்லை. உனது கடைசி மூச்சு நிற்கும் நேரமும், உனக்காக அவர் வருவார். மேலும், தற்போது கூட உனக்காக வருவார்.


கடவுள் உனக்காக புதிதாக ஒன்றை கொடுக்க விரும்புகிறார். உன்னை வந்து அவர் அடையும்போது, நீ சரியான காரியத்தை செய்கிறாயா? (முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல), நீ அவர் கொடுத்த பரிசுத்த அன்பளிப்பை உபயோகித்து கொண்டு இருப்பாயா? (இரண்டாவது வாசகத்தில் கூறியிருப்பது போல)? மேலும், விழிப்பாயிருந்து, தந்தை கடவுள் வரும் வழியை பார்த்து கொண்டு இருப்பாய? (நற்செய்தியில் கூறியிருப்பது போல) ?

யேசு அவரை ஒவ்வொரு கனமும் உங்களிடம் வெளிப்படுத்துகிறார். இந்த திருவருகை காலம் , நமக்கு சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு கனமும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளை கொண்டாட நாம் தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், நாம் விழிப்புனர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டும். இந்த மறையுரைகளில் வரும் அன்பளிப்புகளை உபயோக்கிது, ஒரு வித்தியாசத்தை அவருக்கும் , உஙளுக்கும் கொடுத்து அவர் பிரந்த நாளை கொண்டாடுங்கள்.



© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 21, 2008

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 23, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 34 வது ஞாயிறு

Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)


நாம் மேய்ப்பர்களை, ராஜாக்களாக எப்பொழுதும் நினைப்பதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி, நல்ல மேய்ப்பனின் அரசில், அவருடைய செல்வாக்கு, மற்றும் மாட்சிமை என்னென்ன என பட்டியலிடுகிறது. யேசு கிறிஸ்து, நல்ல அரசனாக, அவருடைய ப்ரஜைகளை, எப்படி ஒரு நல்ல மேய்ப்பன் பார்த்து கொள்வானோ, அப்படி பார்த்து கொள்கிறார்.

அரசர்கள் தங்களுடைய ஆட்சியை தன்னுடைய மக்களுக்கெல்லாம் பரப்ப, அவர்களூடைய ப்ரஜைகள் மூலமாக ஆட்சியை, அதிகாரத்தை செலுத்துகின்றனர். அதனால் தான் யேசு "' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்கிறார்.


நமது அரசர்கள், பஞ்ச காலங்களில், உணவை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க விரும்புகின்றனர். தங்கள் எல்லையின் விளிம்பிலுல்ல எல்லா மக்களுக்கும் இந்த உணவு போய் சேர விரும்புகின்றனர். யேசு இதனை எவ்வாறு செய்கிறார். அவர் அளவிற்கு அதிகமான உணவை நம்மில் பலருக்கு கொடுத்து, அதனை யாருக்கு எல்லாம் தேவையோ, அவர்களிடம் சேர்ப்பிக்க சொல்கிறார்.

நாம் கிறிஸ்து அரசரின் இந்த கட்டளையை செய்யவில்லையென்றால் என்ன ஆகும்? பசியோடு இருப்பவர்கள், கிறிஸ்து அரசர் தயாள குணம் இல்லாதவர் என்றா நினைப்பர்? இல்லை, அவர்கள் கிறிஸ்துவின் நல்ல மனதை, நாம் அவரின் கட்டளையை ஏற்று அதை செய்யும்போது பார்ப்பார்கள்.

உன்னை சுற்றியுள்ளவர்களை பார். ஒவ்வொருவரும், உன் மூலம் கடவுளுக்கு நல்ல பெயரை கொடுக்க வாய்ப்பு கொடுப்பார்கள்.

நீங்கள், யாரைவையாவது வெறுக்கீறீர்களா? உங்களை கோபம் கொள்ள செய்தவர் யார்? உங்களை வருத்தமுற செய்தவர் யார்? நீங்கள் உங்களுக்குள் இந்த கேள்விகளை கேட்டுகொள்ளுங்கள்: அவர்கள் எதற்காக பசியோடு இருக்கிறார்கள்? உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அந்த மனிதர்களை கொஞ்ச நாள் கவனித்து பாருங்கள். அவர்கள் எது தேவை என்று பாருங்கள். எதற்காக பயபடுகிறார்கள்? எந்த வலியோடு இருக்கிறார்கள்?


பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்: நமக்கு கடவுள் என்ன திறமை, கொடைகளை கொடுத்துள்ளார். இந்த குறையுள்ளவர்களுக்கு கடவுளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுக்கு கடவுளின் தயாள குணத்தை என்மூலம் கான்பிக்கலாமா? அவர்கள் நாம் கோபமாயிருந்தாலும்?


நாம், நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இல்லையென்று சொல்லிவிட்டால், நம்மிடம் இருப்பதை, நாம் பகிர்ந்து கொள்ளவில்லையென்றால், நாமெல்லாம், ஆடு மேய்ப்பாளன் , மோட்சத்திற்கு செல்ல கூடாத ஆடுகளை ஒதுக்குவது நாமும் ஒதுக்கபடுவோம். நாம் அவர்கள் மேல் கோபமாயிருந்தாலும், சரி என்று சொல்லி, அவர்களுக்கு தேவையானதை செய்தால், நல்ல ஆடுகளாக ஒதுக்கப்பட்டு, கடவுளின் நல்ல ஆட்சி எல்லோருக்கும் பரவும், அதன் மூலம் நாம் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 14, 2008

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 16, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33வது வாரம்
Prv 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.ஒரு தாலந்து வெள்ளி 6000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். ஒரு தாலந்து பொன் 180000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும். திராக்மா, தெனாரியம் ஆகியவற்றின் விளக்கத்தை முறையே மத் 17:24, 18:28 இல் காண்க. 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23 அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நமக்கு கடவுள் கொடுத்த ஆற்றலையும், அன்பளிப்புகளையும் புதைத்து வைத்து விட கூடாது" என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி புதைத்து வைத்தால், "சோம்பேறியானவனாகவும், பொல்லாத பணியாளனாகவும்" மாறிவிடுவோம்.

நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கு நாமே அதற்கு ஒரு காரணம் வைத்திருப்போம். "நான் அந்த அளவிற்கு ஆற்றல் உள்ளவனில்லை, போதுமான தகுதிகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நல்ல முறையில் செய்ய முடியும்" அல்லது "கடவுள் என்னிடம் இந்த செயலை செய்ய சொல்ல கூடாது" , "னம்மிடம் பொருளாதாரம் இல்லை" "போதிய பண வசதி இல்லை" , "உடல் உழைப்புக்கு தயாராய் இல்லை" , "நான் இப்போது ஓய்வு பெற்றுள்ளேன், இனிமேல், நான் எனக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள போகிறேன்" என்று கூறிகொண்டு நாம் இருக்கிரோம்.

கடவுள் நமக்கு கொடுத்த எந்த ஆசிர்வாததையும், அன்பளிப்புகளையும்,ஆற்றலையும், கடவுள் நமக்கு புனிதமாக கொடுத்த எதையும் வீணாக்கினால், அதற்கு மன்னிப்பே கிடையாது. அதற்கான எந்த காரனங்களும், கடவுளரசின் முன்னிலையில் எடுபடாது. நமக்காக கடவுளின் அன்பளிப்பை உபயோகித்தால், அது கடவுளரசை போற்றுவதற்கு சமமாகாது.

நாம் எல்லோருமே, நமக்கு தேவையான ஆற்றலும், திறமையும் உள்ளவராய் இருக்கிறோம். அதன் மூலம் கடவுளரசிற்கு நிச்சயம் ஒரு மாறுதலை கொடுக்க முடியும். ஏனெனில், அந்த ஆற்றல் அனைத்து அவரிடமிருந்து வந்தவை. நாம் எல்லாம் அவருடைய ஊழியர்கள். அதனால் கடவுள் தான் நாம் எந்த செயலை செய்ய முடியும் என்றும் முடிவெடுக்கிறார். மேலும், படுத்த படுக்கையாய் இருப்பவர்களூக்கு கூட கடவுளுக்காக சில செயல்களை செய்ய வேண்டும். அந்த கஷ்டத்திலும் வேதனையிலும்,கடவுளுக்காக செய்ய சில வேலைகள் உள்ளன. அதிகமாக, ஜெபங்களிலிலும், இந்த பூமியில் பெற்ற அனைத்து ஞானத்தையும் பகிர்ந்து கொண்டவர்களாய் இருப்பர்.

உங்களிடம் யாராவது இப்படி கேட்டதுண்டா?: "கடவுள் இவவளவு நல்லவராய் இருந்தால், அவர் ஏன் சாத்தானை, பாவங்களை இந்த உலகத்தில் அனுமதிக்கிறார்? " அதற்கு பதில், "கடவுள் அதனை அனுமதிக்கவில்லை", "நாம் தான் சாத்தானை அனுமதிக்கிறோம்". இந்த உலகத்தில், நாம் கிறிஸ்துவின் உடல். நாம் அவரின் கைகள், கால்கள், அரவணைக்கும் கைகள், யேசுவின் குரல். யேசுவிடம் தஙகளது குறைகளை சொல்லி, அழும் மக்களுக்கு, அவர்கள் துயரை துடைக்க வேன்டும் என்று தான யேசு விரும்புகிறார். ஆனால், நம்மில் பலர், அவரின் அன்பளிப்புகளை புதைத்து விட்டு, கடவுளரசில் மாற்றம் கொண்டு வருவதில்லை. அதற்கு பல காரனங்கள் வைத்திருக்கிறோம். எல்லாம் இந்த பொல்லாத சோம்பேறித்தனம்!.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 8, 2008

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

8, நவம்பர் 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32 வது ஞாயிறு

Ezek 47:1-2, 8-9, 12
Ps 46:2-3, 5-6, 8-9
1 Cor 3:9c-11, 16-17
John 2:13-22

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1

13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 அவர் புறா விற்பவர்களிடம், ' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் ' என்று கூறினார்.17 அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18 யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம், ' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் ' என்றார்.20 அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
(thanks to www.arulvakku.com)

நீஙகள் தான் கடவுளுடைய கட்டிடம், என்று இன்றைய இரண்டாவது வாசகத்தில் நாம் படிக்கிறோம். ஏனெனில் யேசு கிறிஸ்து அக்கட்டிடத்தின் அடிக்கல்லாக (அஸ்திவாரம்) இருக்கிறார். நீங்கள் கடவுளின் கோவில். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வசிக்கிறார்.

பழைய ஏற்பாட்டில், கடவுளுடைய ஆவி ஒவ்வொரு கோவிலின் நடுவிலும், கோவிலின் இதயம் போல உள்ள பரிசுத்ததின் பரிசுத்தமான இடத்தில் வசிப்பதாக கூறுகிறது. அங்கே எந்த மனிதனும் நுழைய முடியாது. ஒவ்வொரு வருடமும், எல்லோருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யும்போது மட்டும் பெரிய குருவானவர் அந்த அறைக்குள் செல்வார்.

இந்த பரிகாரம் செய்யும் நாளைதான், யேசு கிறிஸ்து, தான் ஒரு பெரிய குருவாக இருந்து, தம்மையே பரிகொடுத்து, அந்த நாளை பெரிய வெள்ளி ஆக்கினர். பிறகு அவருடைய ஆவியை அவருடைய சீடர்களின் இதயத்தில் வைத்தார்.

ஆனால், பரிசுத்தத்தின் பரிசுத்தமானவருக்கு நம்முடைய இதயம் எப்போதுமே திறப்பதில்லை. உங்களுடைய வாழ்க்கை எப்போதுமே மேலோங்கியே (அ) எழுச்சியுடன் இருக்கிறதா? ஒரு வேளை, யேசு, உங்கள் மேலோங்கிய வாழ்வை திருப்புகிறாரோ? அதன் மூலம் நீங்கள் முழுமையாக பரிசுத்த ஆவியானவருக்கு உங்களுடைய கதவை திறப்பதற்காக செய்கிறாரோ?

நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வர, எந்த தடுப்புகளெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம், கடவுள் ஒதுக்கியும், திருப்பியும் வைக்க விரும்புகிறார். நமது எந்த ஒரு செயலும், அல்லது எந்த பொருளும், கடவுளரசின் முன்னேற்றத்திற்கு உதவவில்லை என்றால், அது கடவுளின் கோவிலை அசுத்தமாகுதல் ஆகும். யேசு அந்த அசுத்தத்தை துடைக்க விரும்புகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், தன்னீர் பரிசுத்த ஆவியை குறிக்கிறது, நாம் நமது உள்ளே இருக்கும் பர்சுத்த ஆவியை மற்றவர்களுக்கு செல்ல அனுமதிக்கும் போது, நாம் நிறைய ஆசிர்வாதங்களை நாம் அதிகமாக்குகிறோம். ஆனால் நமது பாவங்கள் அதை வெளியே செல்ல தடை செய்கிறது. அந்த ஆவியின் பாதை அனையில் உள்ளது போல் தடுக்கபடுகிறது. அதனால் அந்த தண்ணியினால்(பரிசுத்த ஆவி) மின்சார அலை உருவாகிறது. யேசு கிறிஸ்து அந்த அடைப்பை உடைக்க முயல்கிறார். அந்த தடுப்பை பிளந்து பரிசுத்த ஆவியை வெளியே செல்ல முயல்கிறார். கேள்வி என்ன வென்றால்: நாம் யேசுவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற அனுமதிக்கிறோமோ? அல்லது அவரை அந்த முயற்சியில் யேசுவை நம்மை விட்டு விலக சொல்கிறோமோ?

பணம் மாற்றுபவர்கள், திருப்பியும் அவர்கள் கடைகளை வைத்தார்களா? நாம் யேசுவை நம்மை மாற்ற அனுமதிக்க போகிறோமோ? அல்லது பழைய வழியிலெயே செல்ல போகிறோமோ?

நமது இதயம் பரிசுத்த ஆவியானவருக்கு திறந்தால், நாம் விரைவில், நமது ஆசிர்வாதங்களை பெறுவோம். மேலும் இந்த ஆசிர்வாதம், பலருக்கு ஆசிர்வாதங்களாக மாறும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 31, 2008

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 2, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31வது ஞாயிறு
கல்லறை திருவிழா (அனைத்து ஆன்மாக்கள் நினைவு தினம்)

Wisdom 3:1-9
Ps 23:1-6
Rom 5:5-11 or Rom 6:3-9
John 6:37-40


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1



37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.38 ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.39 ' அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் ' என்று கூறினார்.

(thanks to www.arulvakku.com)

நீ எப்போதாவது, யேசு கொடுத்த மீட்பை சிதைத்து விட்டு, மோட்சத்திற்கு செல்லவே மாட்டோம் என்று நினைத்தது உண்டா? இன்றைய நற்செய்தியில், யேசு, "
37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் " அவர் உஙளை குறிப்பிடுகிறார். தந்தை கடவுள் உங்களை யேசுவிடம் ஒப்படைத்து இருக்கிறார். யேசு உங்களை மோட்சத்திற்கு வழி நடத்தி செல்வார்.

நம்முடைய ஞானஸ்நானத்தில், தந்தை கடவுள் யேசுவிடம் நம்மை ஒப்படைக்கிறார். "மகனே, இவர்களை உன்னிடம் கையளிக்கிறேன், அவர்கள் மோட்சம் செல்வதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்" என்று யேசுவிடம் கூறுகிறார். யேசு அவருக்கு இவ்வாறு பதிலளிக்கிறார். " நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் "


தந்தைக்கு என்ன தேவையோ, அதை அவர் பெறுகிறார். (எல்லோரும் மோட்சம் செல்வது). ஆனால், அவரின் எல்லா வகை முயற்சிகளையும், அவரின் அன்பையும் நிராகரித்தவர்களுக்கு என்ன செய்வது.


நோயுற்ற நமது அன்பானவர்களுக்கும் இது பொருந்தும், அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போது, யேசுவோடு இருக்க விரும்பினால், அவர்கள் இறக்கும் நேரத்தில், யேசு அவர்கள் முன் நிற்கும்போது, அவரோடு இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.

நாம் யேசுவை நேருக்கு நேராக பார்க்கும்போது, நமக்கு எல்லாமே தெளிவாக தெரியும். நாம் நமது வாழ்வில் நடந்த பாவஙளுக்காக மனம் வருந்துவோம், மேலும் யேசு நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தை நாமே தேர்ந்தெடுக்க அனுமத்கிக்கிறார். அங்கே நமது விடுபட்ட பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். அதன் பிறகு நாம் நமது பாவங்களிலிருந்து மீண்டு புனிதப்பட்டுவிடுவோம். அப்போது நாம் நித்தியத்திற்கும், கடவுளின் முழு அன்போடு மோட்சத்தில் இருப்போம். இருந்தாலும், இந்த பூமியில் நாம் இறைவன் மேல் உள்ள அன்பினால் நமது பாவங்கள் துடைக்கபடுவது, உத்தரிக்கிற் ஸ்தலத்தில் கழுவப்படுவதை விட மேலானது.


நாம் எவ்வாறு, நம்மை பாவங்களிலிருந்து விடுபட்டுகொள்வது. மற்றவர்களை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்பு செய்வது. அடிக்கடி பாவம் செய்பவர்களை மன்னிப்பது, மிகவும் தாராளமாக தேவையானவர்களுக்கு உதவுவது. இப்படி செய்கிறபோது, கடவுளின் அன்பில் நாம் இணைகிறோம். மேலும் கடவுளரசில் இந்த பூமியில் இருந்து கொண்டே வாழ்கிறோம்.


புனித தெரசா அவர்கள் "கடவுள் நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்தில் நம் பாவங்கள் கழுவப்படுவதை விரும்புவதில்லை. இந்த பூமியிலேயே, அவரை சந்தோசப்படுத்தி, அவர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தால், அவர் அவரின் அன்பினால் ஒவ்வொரு நிமிடமும் நம்மை புனிதப்படுத்துகிறார் அதனால் , நம் மேல் எந்த பாவ கறைகளும் இல்லாமல் இருக்கும். அதன் பிறகு நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு செல்ல தேவையில்லை" என்று கூறுகிறார்.

© 2008 by Terry A. Modica

Friday, October 24, 2008

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 26, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு

Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். 35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், 36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார். 37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.




இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், "நாம் மற்றவர்களை அன்பு செய்யாமலும், நம்மையே அன்பு செய்யாமலும், கடவுளை அன்பு செய்ய முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுக்கு தான் முதல் வாய்ப்பு.

நாம் கடவுளை நமது முழு மனதுடனும், முழு ஆத்ம திருப்தியோடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும் அன்பு செய்ய நம்மால் இயலவில்லை. நமக்கு மிகவும் க்ஷ்டமாக இருக்கிறது. ஏனெனில், அதிகமான நேரங்களில், நமது மனம் மற்றவர்களை பற்றியும், நம்மை பற்றியும் யோசிக்கிறது. அதிலேயே நாம் நேரம் செலவிடப்படுகிறது.

ஆமாம், மற்றவர்களை நோக்கி நமது எண்ணம் இருந்தால் தான் நாம் அவர்களை அன்பு செய்ய முடியும். மேலும் நமது எண்ணங்கள் நம்மை பற்றி இருந்தால் தான், நாம் நம்மையே அன்பு செய்ய முடியும். நமது தேவைகள் மிகவும் முக்கியமானவைதான், நமது தேவைகளை பூர்த்தி செய்ய நாம் கடைமைபட்டிருக்கிறோம். அப்படியில்லையென்றால், நாம் மற்றவர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது? மேலும், எல்லாவற்றையும் நாமே வைத்து கொள்ள கூடாது.

தற்போதைய கேள்வி: எதற்கு முதலிடம் கொடுப்பது? எது முதன்மையானது? வேறு மாதிரி கேட்டால்: நாம் கடவுளோடு எவ்வளவு நேரம் செலவழிப்பது? நம்மை பற்றி, நமது தேவைகளுக்காக எவ்வளவு நேரம் செலவ்ழிப்பது? மற்றவர்களுக்காக நமது நேரங்களையும், தேவைகளையும், தியாகம் செய்ய வேண்டும்.?

நமது முதன்மை வாய்ப்பாக, கடவுளை முதலில் நிறுத்தி, அவருடைய உறவிற்கு முதலிடம் கொடுத்தோமானால், மற்ற காரியங்களுக்கான நேரம் செலவிட நம்மால் முடியும். கடவுளுடைய நட்பு, நம்மால் முடியாத தேவைகளால் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. இந்த உந்துதல் தான், நம்மை மற்றவர்கள் மேல் அன்பு காட்ட வைக்கிறது, அது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மை மற்றவர்களோடு அன்பு செய்ய வைக்கிறது. மேலும், நாள் முழுதும், கடவுளோடு நட்புறவு வைத்து கொள்ள , அவரோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.


நாம் நம் மேல் அன்பு கொள்ளவும், பிறரை அன்பு செய்யவும், நாம் கடவுளை முதலில் அன்பு செய்து, அவரை நம்பி இருந்தாலே, நாம் நமது தேவைகளில் வெற்றி பெறுவோம். வழிகாட்டவும், குணப்படுத்தவும், நமது சக்திக்காகவும், கடவுளை நம்பி இருந்தால், நாம் கடவுளை முழுமனதுடன் அன்பு செய்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனமும், நாம் அவர் அன்பிலேயே இருக்கிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 17, 2008

அக்டோபர் 19, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 19, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 29வது ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். 16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். 17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள். 18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். 20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். 21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு பரிசேயரை பார்த்து "வரி செலுத்தும் நாணயத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது ?" என்று கேட்கிறார். இந்த நிகழ்ச்சியை வைத்து, யாருடைய உருவம் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமக்கு கற்பிக்கிறார். நம்முடைய இதயம் கடவுளுக்கு உரித்தானது. அவருக்கு மட்டுமே உரித்தானது.

ரோமானியர்கள், அவர்களுடைய அரசர்களை தெய்வீகமானவர்கள் என்று நினைத்தனர். அதனால், அந்த அரசர் பொறித்த நாணயத்தை எப்போதும் எடுத்து செல்வது என்பது, அவர்கள் மனித கடவுளை எப்போதுமே தம்மிடம் வைத்து கொள்வதாகும். யேசுவிடம் அவர்கள் இந்த கேள்வியை கேட்கும்போது, அவர்கள் நாணயத்தை வைத்து கொண்டேதான் கேட்டனர்.


சீசருக்கு வரி செலுத்துவது என்பது, ஒரு அயல் நாட்டிற்கு வரி செலுத்துவது என்பதை விட, அதற்கு மேலான, ஒரு சமய மறைபொருளை எடுத்து காட்டுவதாகும். யேசு ஒரு இறைவாக்கினராக இருந்தால், அவர் யூதர்கள் இது மாதிரியான பொற்காசுகளை வைத்து கொள்ள கூடாது என்று பேசியிருக்க வேன்டும். அல்லது அவர் உண்மையான மெசியாவாக இருந்தால், அயல் நாட்டின், வரிகளுக்கும், அடிமைதனத்திற்கும், அவர் விடுதலை வாங்கிகொடுக்க வேண்டும். அப்படித்தான் பரிசேயர்கள் எதிர்பார்த்தனர்.


பரிசேயர்கள், யேசுவிடம் காமிக்கும்போது, அந்த பொற்காசை எங்கேயிருந்து எடுத்தார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் பைகளில் இருந்து எடுத்திருந்தால் (அப்படிதான் இருந்திருக்கும்) அவர்கள் கபட வேடம் போடுகின்றனர் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் யேசுவிற்கு அவர்கள் கபட வேடத்தை வெளிக்காட்டவேண்டும் என்ற விருப்பம் இல்லை. உண்மையான மெசியாவின் இலக்கு என்ண என்று காட்ட விரும்பினார்.

நாம் கடவுளின் பிள்ளைகளாக இருந்தால், யேசு தான் நமது இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளார். மேலும், உண்மையான மெசியாவின் மூலம் நாம் மீட்கப்பட்டுள்ளோம். நமது பாவங்களால், நாம் சாத்தானின் அடிமைகளாக இருந்தோம், அந்த அடிமைத்தனத்திலிருந்து, யேசு நம்மை மீட்டுள்ளார்.

மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, யாருடைய அடையாளமாக, நீங்கள் காட்சியளிக்கிறீர்கள்? மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள யேசுவை பார்க்கிறார்களா? எந்த அளவிற்கு அவர்கள் பார்க்கிறார்களோ? அந்த அளவிற்குள் தான் நீங்கள் இறையட்சியில் இருக்கிறீர்கள்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 10, 2008

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 12, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 28வது ஞாயிறு


Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14, 19-20
Matt 22:1-14

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: 2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். 3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. 4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். 6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். 7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். 8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். 9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார். 10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. 11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். 12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். 13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார். 14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com )

இன்றைய நற்செய்தியில், போலித்தன்மையுடன் ஏமாற்றுபவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறார். அது என்னவெனில், சிலர் யேசுவின் நட்பை பெறுவதற்காக, மதச்சடங்குகளில் ஈடுபாட்டுடன் இருப்பர். கோவில் காரியங்களில், ஆர்வத்துடன் செயல்படுவர். ஆனால், உண்மையான நட்பு கொள்வதில், இணங்கமாட்டர்கள்.

அந்த மாதிரியான மனிதர்களை பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் நட்புடன் இருப்பர், நல்ல செயல்கள் செய்வர். ஆனால் அவர்களுடைய நன்மைகளுக்காகவே அந்த நல்ல விசயங்களை செய்வார்கள். கஷ்டமான காலங்களில், அவர்களுடைய விசுவாசத்திற்கான சவாலான நேரங்களில், கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள். குருவானவர் தவறான செய்திகளை பேசும்போதோ, அல்லது தவறான காரியங்களில் ஈடுபடும்போது, கத்தோலிக்க மதத்தை விட்டு விலகி செல்வர். உங்களோடு உள்ள நட்புறவிற்கு அவர்கள் ஏதாவது தியாகம் பன்ன வேண்டியிருந்தால், உங்களை விட்டு விலகி விடுவர்.

இந்த நீதிக்கதையின் மூலம், நட்பிலும், திருமனத்திலும், உண்மையான அன்பினால் இணையாமலிருப்பவர்களுக்கு,யேசு கடவுளின் மருந்து சீட்டை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார். எல்லோருக்குமே, விருந்து உண்ண அழைக்கபடுகின்றனர். ஆனால், சிலர், மகிழ்ச்சையான விருந்தையே விரும்புகின்றனர். ஆனால், கடினமான தருனங்களையோ அவர்கள் தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் சந்தோசமான தருனங்களும், கடினமான நேரங்களும், எல்லோர் உறவிலும் உண்டு. இந்த மாதிரியான போலிகளை தவிர்க்க கடவுள் சில எல்லைகளை நிர்மானித்துள்ளார்.


உங்களுடைய விருந்து மேஜைக்கு நீங்கள் அழைத்தவர்கள் பற்றி என்னிப்பாருங்கள். அதாவது கடவுளோடு சேர்ந்து உண்மையான நட்பிற்கு அழைத்தவர்கள். ஆனால், அந்த நட்பை அவர்களுக்கு ஏற்றமாதிரி அவர்கள் மாற்றி அமைக்க முயல்வர். நாம் அவர்களை முழுவதுமாக அன்பு செய்ய வேண்டும். ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த நட்புறவு, நல்ல முறையாக செல்ல நமது கடமைகளை நமது பங்கிற்கு செய்யவேண்டும். மற்றவர்கள் அவர்கள் கடமையை செய்யாதபோது உங்களுடைய உறவை நிராகரித்து விட்டார்கள்.

அவர்களுக்காக, நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு, அவர்களை மனம் திரும்பவும், மன மாற்றத்திற்கும் உறுதுனையாக இருக்க வேண்டும் என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார். இருந்தாலும், நமது முயற்சிகள் ஒரு எல்லைக்குள்ளாக இருக்க வேன்டும். நமது முயர்சிகள் வீணாக போகும்போது, நாம் நமது வழியை நோக்கி செல்ல வேன்டும், என்று கடவுள் கூறுகிறார்.


மேலும் எப்போதுமே , நாம் நமக்கு கிடைக்கும், நல்ல உண்மையான நட்புடன் கூடிய நண்பர்களை தேடி அவர்களோடு சேர்ந்து கடவுளோடு இணைதல் வேண்டும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 3, 2008

அக்டோபர் 5, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 5, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 27வது ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.பிழிவுக்குழி என்பது திராட்சைப் பழங்களை மிதித்துச் சாறு பிழிவதற்க்காகப் பாறையில் வெட்டப்படுவது. 34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். 35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். 36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். 37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். 38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். 40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார். 41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள். 42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? 43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)


"இறையாட்சிக்கு யார் அதிக பழங்களை ஈட்டு கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு இறையாட்சி கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. நாம் இந்த பூமியில் இருக்கும்போது நமக்கு இறையாட்சி என்பது என்ன? அதனுடைய பழங்கள யாவை? நமது பூமி வாழ்வில் எப்படி ஈட்டு கொடுக்க போகிறோம்.

கிறிஸ்துவை போல நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுமே, நாம் ஈட்டும் பழங்களாகும், நாம் யேசுவோடு சேர்ந்து இறையரசுக்கு செல்லும் பயனத்தின் விளைவுகளாகும். நாம் யேசுவை போல் அன்பு செய்தால், அவரை போல் நாமும் மற்றவர்களை மன்னித்தால், உண்மையை போதிப்பதாலும், துவண்டு போனவர்களுக்கு ஆறுதலாயும் , இருந்தால், நாம் இறையரசில் வாழ்கிறோம்.

நான் கத்தோலிக்கர்களிடம், "நீங்கள் மோட்சத்திற்கு போவீர்கள் என்பதை நம்புகீறீர்களா? " என்று கேட்டால், அதிகம் பேர் நிச்சயமாக சொல்வதில்லை, சந்தேகத்துடனே சொல்கின்றனர். ஏனினில், வரும் காலங்களில், ஏதேனும் சாவான பாவம் பன்னிவிடுவோமோ என்ற பயம். அல்லது, "ஆம் போவோம்" என்று சொன்னால், அவ்வளவு அடக்கமான பதிலாக இருக்காது என்று நினைக்கின்றனர்.

நாம் யேசுவை போல முழுமையாக, நம்மால் செய்ய முடியாது. நம்மில் அதிகம் பேர், உத்தரிக்கிற் ஸ்தலத்தில் சில காலம் செலவழிக்கவேண்டும்.அங்கு நம்மிடம் உள்ள இறையாட்சிக்கு தேவையில்லாத விசயங்கள் நம்மிடமிருந்து களையப்படும். எல்லா கறைகளும் நீக்கப்பட்ட பின், நாம் நிச்சயம் மோட்சத்திற்குள் இருப்போம். நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குள் சென்றுவிட்டால், நிச்சயம் மோட்சத்திற்குள் செல்வோம். நாம் கிற்ஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற ஆவல், நியாயமான ஆவலாயிருந்தால், நிச்சயம், மோட்சத்திற்குள் செல்வோம். இந்த ஆவலினால், நாம் ஒருபோதும் சாவான பாவம் செய்யமாட்டோம். அதனால், நாம் கிறிஸ்துவை விட்டு அகன்று செல்லமாட்டோம். அதைவிட நமது மரண நேரத்தில், யேசுவை மிகவும் மகிழ்ச்சியுடன், அவரோடு சேர்ந்து அனைப்போம்.

கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால், அவருக்காக நீங்கள் எந்த காரியம் செய்தாலும், அதுவே நமக்கு சாட்சியாக, நாம் இறைவாழ்வில் வாழ்கிறோம் என்பதை குறிக்கும். மேலும் நாம் மோட்சத்தில் என்றென்றும் வாழ்வோம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 26, 2008

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

28 செப்டம்பர் 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை:
ஆண்டின் 26வது ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21

28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார். 29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். 30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை. 31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும்!, பலர் இறைவாழ்வில் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நல்லொழுக்கத்துடனும் நடந்து கொள்வதாக நினைக்கும் பலருக்கும் இந்த நற்செய்தி அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அவர்கள அவரகளது செயல்களை நியாயமாக பரிசோதித்து பார்த்தால், அவர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்களா? என்பது தெரியும். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் (அந்த இரு தொழில்கள் தான் உலகில் மிகவும் அவமானகரமான செயல்கள்/தொழில்கள்) உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சமய வல்லுனர்களை பார்த்து கூறுகிறார்.

இந்த சமய வல்லுனர்கள் யேசு கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்திருந்தும், அவர்கள் யேசுவிற்கு "சரி/ஆமாம்" என்று சொல்வதற்கு பதில், நல்ல விசயங்களை பேசுவதற்கு பதில் அதை செய்ய வேண்டியது தான், செயலில் காமிக்க வேண்டியது தான் யேசுவிற்கு நாம் சொல்லும் பதிலாகும். அவருக்கு சரியான பதில், மோட்சத்திற்கும், நரகத்திற்கும் நடுவில் உள்ள இடைப்பட்ட கோடு ஆகும்.

கடவுளுக்கு சரியான பதில் தேவையில்லை. ஆனால் அவருக்கு சரியான நியாயமான அன்பான செயல்களே தேவை. திருச்சபையின் சட்டங்களை கடைபிடிக்கவேண்டிய செயல்கள் கடவுளுக்கு தேவையில்லை, ஆனால் அன்பினால் ஊக்கப்படுத்தபட்ட கீழ்பபடிதலும், உற்சாகமான உந்துதலுடனும் கடவுளின் தேவைகளுக்கு ஏற்ப ஊழியம் செய்வது தான் கடவுளுக்கு தேவை.

கோவிலுக்கு வெளியே நாம் திருச்சபையின் தேவகளோடு, பரிசுத்தத்தோடும் நடந்து கொள்ளவில்லையென்றால், திருப்பலி பூசைக்கு செல்வதனால் உள்ள பயன் என்ன? ஏன் சிலர் கோவிலுக்கு வருவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில், திருச்சபைக்கும், கிறிஸ்துவின் சரிரத்திற்கும் வெளியே இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. இயல்பாக அவர்கல் நல்ல செய்லகள் செய்து கொண்டிருந்தாலே , யேசுவின் உண்மையான அன்பை வழிகொண்டிருந்தாலே அவர்கள் கடவுளோடு நெருக்கமானவர்கள் ஆவர். இவர்கள் தினமும் திருப்பலிக்கு சென்று வரும் பக்தர்களை விட, (வெளியே எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யாமல் இருப்பவர்கள்) சீக்கிரம் கடவுளோடு இனைவர்.

கடவுள் வேண்டாம் அல்லது இல்லை என்று சொல்பவர்களை கண்டனம் செய்வது என்பது நாம் அவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோம். இந்த செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. ஒப்பிட்டு பார்ப்பது நம்மை நல்ல மனிதனாக் ஆக்கலாம் அல்லது தீயவர்களாக ஆக்கலாம். நாம் நேற்று எப்படி இருந்தோம் என்று அல்லது , முன்னர் எப்படி இருந்தோம் என்று நாம் நம்மையே ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். அது என்னவெனில், நாம் கடவுளோடு எப்படி நெருக்கமாக முன்னரும் , தற்போதும் எப்படி இருந்தோம் என்று ஒப்பிட்டு கொள்ளலாம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 19, 2008

செப்டம்பர் 21, 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
செப்டம்பர் 21, 2008
ஆண்டின் 25வது ஞாயிறு

Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a


எசாயா

அதிகாரம் 55
6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். 7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். 8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 1
20 ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும்-உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21 ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22 தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23 அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். 24 ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20


1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். 2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.
ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒருநாள் கூலிக்கு இனையான உரோமை வெள்ளி நாணயம்.
3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். 4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார். 5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். 6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார். 7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார். 8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார். 9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். 10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். 11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, 12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள். 13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? 14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். 15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார். 16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.aruvakku.com )



கடவுள் நியாயமாக நடப்பதில்லை! இவ்வாறு எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நம்முடைய நிலைப்பாட்டின் படி, இது உண்மையாகும்!. இன்றைய நற்செய்தியின் உவமை, இதற்கு சரியான உதாரணமாகும்.

யேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடும், நிலக்கிழார், நியாயமாக நடக்கவில்லை என்று எப்படி யூதர்கள் நினைத்தார்களோ? அப்படியே நாமும் நினைக்கிறோம். இதனை புரிந்து கொள்ள, நாம் பெற்றோர்களை இதனோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டு. ஒரு அன்பான அம்மா எல்லா குழந்தைகள் மேலும் ஒரே மாதிரி அக்கறையுடன் தான் இருப்பார். எந்த குழந்தைக்கு அதிக கவனம் தேவையோ அதற்கு அதிக அக்கறையுடன் பார்த்து கொண்டாலும், அந்த தாய் மற்றவர்கள் மேலும் அதே அன்புடன் இருப்பாள்.

தந்தை கடவுளும் இந்த நிலக்கிழார் போல தான், எல்லாருக்கும் ஒரே அளவுடன் கொடுப்பவர் ஆவார். நாம் மோட்சத்திற்கு செல்லும் வழியை நம்மால் மட்டுமே அடைய முடியாது. சரி சமமான நன்மை, உதவியும் அதிமாக உழைப்பவர்க்கு கிடைப்பது என்பது அநீதி கிடையாது. மாறாக, கடைசி நிமிடத்தில் கூட கடவுளோடு நட்பு கொண்டு அவரிடம் சேர்ந்தால், கடவுள் முழுமையான அன்பை அவரிடமும் கொடுப்பார். அவர் எதிலும் குறைவாய் இருப்பதில்லை.

முதல் வாசகம் "9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று சுட்டி காட்டுகிறது. நமக்கு நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடைமுறை தான் என்று நினைக்கிறோம். ஆனால் பழைய ஏற்பாட்டில் பார்த்தோமானால், "கண்ணுக்கு கண்" என்பது தான் நீதி. ஆனல், யேசு நீதியை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். அவரின்படி நீதி என்பது, எல்லோருக்கும் சமமான அன்பும், இரக்கமும் கொடுக்கபடவேண்டும். அவர்கள் அதற்கு தகுதியானவர்களோ இல்லையோ? அன்பும் இரக்கமும் எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டு.

கடவுளின் உயர்ந்த வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேன்டும் என்று அவசியமில்லை. நாம் கடவுளுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர் நம் மேல் மிகவும் அன்பு கூறுகிறார். நாம் நம்மில் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது, நாம் எவ்வளவு தகுதி இல்லாமல் இருந்தாலும், கடவுள் எல்லா புனிதர்களுக்கும், கிறிஸ்துவைன் தாய் மரியாளுக்கும் கொடுத்த அதே அன்பை உங்களுக்கும் கொடுக்கிறார். "எனது அன்பை நாம் எப்படி கொடுக்க வேன்டும் என்கிற உரிமை எனக்கில்லையா? " என்று யேசு நம்மிடம் கேட்கிறார்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 12, 2008

செப்டம்பர் 14, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
செப்டம்பர் 14, 2008


Numbers 21:4b-9
Ps 78:1bc-2, 34-38 (with 7b)
Phil 2:6-11
John 3:13-17


எண்ணிக்கை (எண்ணாகமம்)

அதிகாரம் 21
4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் செங்கடல் சாலை வழியாகப் பயணப்பட்டனர்: அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். 5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது என்றனர். 6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்: அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.
எபிரேயத்தில் 'சேராபின்கள்' எனவும் பொருள்படும்.
7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, நாங்கள் பாவம் செய்துள்ளோம் நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்: அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும் என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். 8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து: கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்றார். 9 அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.


பிலிப்பியருக்கு திருமுகம்

அதிகாரம் 2
6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: 11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்.


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். 16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

(thanks to www.arulvakku.com)

யேசு எவ்வளவு தாழ்மையுடன் இருந்தார்? யேசு நமது கடவுள், அதனால், நாம் அவர் முன் தாழ்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தும், அவர் நம் முன் தாழ்மையுடன் இருக்கிறார். இது இரண்டாவது வாசகத்தில் விளக்கப்பட்டுள்ளது.


யேசு மோட்சத்திலிருந்து நமக்காக இந்த பூமிக்கு இறங்கி வந்தார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. அதுவே ஒரு தாழ்மையாகும். பணிவுடன் அதை செய்தார். நீங்களோ அல்லது நானோ, நிறைவான் இன்பத்தையும், பேரானந்தத்தையும் கொடுக்கும் மோட்சத்தை விட்டு, தீமைகள் உள்ள மனித உலகிற்கு வருவோமோ?

நாமெல்லோருமே விண்ணகத்திற்காக ஆசைபட்டு இருக்கிறோம். அதுதான் நம் உண்மையான வீடு, நமது உள் உணர்வு அதை தான் தேடும். அதனால் தான், இந்த பூமியில் விண்ணகத்திற்கு ஒவ்வாத செயல்கள் நடக்கும்போது, குறை கூறுகிறோம், அதனை முறையிட்டு வருத்தபடுகிறோம். நாம் "இந்த சோதனைகளால், தளர்ந்து விட்டேன், கடவுளே இதற்கு ஒரு முடிவு கட்டு" என்று கூறி அவரிடம் முறையிடுகிரோம். (இதை தான் இஸ்ரேயலர்களும், பாலைவனத்தில் கூறினார்) "கடவுளே, எவ்வளவு கஷ்டமானது எங்கள் ப்ரச்னை என்று உமக்கு தெரியவில்லை"


ஓ, இஸ்ரேயல் செய்த பாவம் அதுதான் (முதல் வாசகம்), அந்த பாவத்தினால் தான், அவர்களுக்கு ப்ரச்னை உண்டானது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, நாம் விண்ணக தேவைகளில் எதிர்பார்த்து, இந்த பூமியின் ஆசைகளை ஒதுக்கி தள்ளுவதற்கான சமிஞ்கை ஆகும். அந்த குறைகள் மூலம், நாம் கடவுளை நம்புகிறோம் என்பதை குறிக்கும். "கடவுளின் பணிகளை, நாம் மறந்து விட கூடாது" என்று இந்த பதிலுரை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளிடம் குறை கூறுவது என்பது, அதற்கு முன் நாம் அவரை மறந்து விட்டோம் , என்பதை குறிக்கும்.

யேசு ஏதாவது குற்றம் சாட்டினாரா? குறை கூறினாரா?, சில நேரங்களில் மனத்துயரம் கொண்டார். ஆனால், ஒருபோது அவர் குறை கூறியதில்லை. அவரை அடித்து, சிலுவையில் அறைந்த போதும், அவர் குறை கூறவில்லை. அதற்கு பதிலாக, அவரை கொடுமை படுத்தினவர்களுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். ஏனெனில் அவரின் முழுமையான் அன்பினால், அப்படி செய்தார். எந்த வித சந்தேகமும் இன்றி, "கடவுள் அவர் தம் மகனை 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, மாறாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்"
கடவுளே, நான் குறை கூறுவதையும், நிந்தனை செய்பதையும் நிறுத்துவதற்கு எனக்கு துனை செய்யும், அதன் மூலம், யேசுவை போல் பரிசுத்தமாக இருக்க முடியும். ஆமென்!

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 5, 2008

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23வது ஞாயிறு
Ezek 33:7-9
Ps 95:1-2, 6-9
Rom 13:8-10
Matt 18:15-20
http://vailankannishrine.org/live/vailailivetelecast.html
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18

15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். 16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். 17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். 18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். 20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும், எல்லா சரியான செயல்களுக்கும், நாம் துணை நிற்க வேண்டும், நாம் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், பாவ உலகில் உள்ளவர்களை மாற்றுவதற்கும் நாம் துணை செய்ய வேன்டும் என்று கூறுகிறது. நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நாமும் அந்த பாவிகளை போல பாவம் செய்பவர்கள் ஆவோம். நமக்கும் அந்த பொறுப்பிருக்கிறது (முதல் வாசகம்)

நாம் கருனையுடனும், இரக்கத்துடனும் , பாவிகளை அனுகவில்லையென்றால், அதுவும் ஒரு பாவமாகும். (இரண்டாவது வாசக்கம்).

திருச்சபை சமூகத்துடனும், உங்கள் கோரிக்கைகளை வைத்து, அவர்களும் உங்களோடு இனைந்து, அவர்களையும் உங்களுக்காக பேச அழைக்க வேன்டும், என இன்றைய நற்செய்தியில், யேசு அறிவுறுத்துகிறார். அவர்களுடைய ஜெபத்துக்காகவும் நாம் அவர்களோடு சேரவேன்டும் என வலியுறுத்துகிறார்.


முதலில், நாம் பாவிகளுடன் பேசவேண்டும். பாவிகள் அவர்களையும் மற்றும் பலரையும் அவர்கள் பாவத்தினால் பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்தால்,(எல்லா பாவங்களும் துன்பத்தை கொடுக்கும். நாம் அதை அறிந்தாலும், அறியாவிட்டாலும், நிச்சயம் பாதிப்பு இருக்கும்), நாம் அதன் விளைவுகளை , அவர்களிடத்தில் சொல்லவில்லையென்றால், நமது அமைதி அன்பிற்கு எதிரானது ஆகும், அக்கறையில்லாமயை காட்டுகிறது.

நாம் உண்மையை பகிர்ந்து கொண்டால், நாம் குற்ற உணர்விலிருந்து, விடுபட்டுவிடுகிறோம். ஆனால், நாம் அவர்களை அன்பு செய்வதை மட்டும் நிறுத்தி விட கூடாது. அதனால், நாம் சிலரை அழைத்து கொண்டு, மேலும் அதிக முயற்சிஉடன் பாவிகளை அவர்கள் பாவங்களிலிருந்டு விடுபட வைக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடந்தால்,மேலும் பலரை சேர்த்து கொண்டு நமது முயற்சியை தொடரவேண்டும்.

எல்லா முறையும் நமது முயற்சி தோல்வியடைந்தால், நாம் நமது முயற்சியை கைவிட்டுவிடவேண்டும். மற்றும் அவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் தான் நம்மிடமிருந்து பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் தான் நம்மை விட்டு விலகி செல்கின்றனர். யேசு எவ்வாறு யூதரல்லாதவர்களையும், வரி வசூலிப்பவர்களை (அன்புடன்) நடத்தினார் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதுமே அவர்கள் மேல் அன்பு கொள்வதில் எந்த தடுமாற்றமும் யேசுவிடம் இல்லை. மேலும் அவர்களுக்காக மரணமடைய ஆவல் கொண்டார். தன்னையே தயார்படுத்கிகொண்டார்.

Friday, August 29, 2008

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

31 ஆகஸ்டு 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22வது ஞாயிறு

Jer 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27

எரேமியா

அதிகாரம் 20

7 ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். 8 நான் பேசும்போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. 9 அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

உரோமையருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 12

1 சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். 22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார். 23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார். 24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். 26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? 27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் முதல் வாசகம், எனக்கு மிகவும் பிடித்தமான வாசகம் ஆகும். நானும், எரேமியா என்ன நினைத்தாரோ அதையே பல தடவை நினைத்துள்ளேன். நானும் கடவுளை பல முரை கோபமாக கூச்சலிட்டுள்ளேன். "ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்", நான் மீண்டும் மீண்டும் இந்த ஏமாற்றுதலை அனுமதிக்கிறேன், நீங்களும் இதே போல் நினைத்தது உண்டா?


ஏன் நாம் இப்படி செய்கிறோம்? கடவுள் நம்மை கடினமான் வாழ்க்கைக்கு இட்டு சென்றாலும், ஏன் நாம் அவரை நம்பிகொண்டிருக்கிறோம். இந்த கடினமான வாழ்க்கையில், உதவியும் அன்பும் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, அது ஆறுதலாக இருக்காது, மேலும், மிகவும் வலியுடையது.

இறைவனுக்கு சேவை செய்வது என்பது ஒரு துணிகரமான, சாகச செயலாகும். நாம் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். மேலும், அடிக்கடி இது வேதனையை , துன்பத்தை கொடுக்கும். நாம் நம்மையே துறக்க வேண்டும். சிலுவையை சுமந்து, யேசுவை கல்வாரி வரை அவரை பின் சென்று, உயிர்ப்பு வரைக்கும் செல்வதாகும்.


இரண்டாவது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் மேல் நம் வைத்த அன்பால், நாம் நம்மையே அவருக்காக தியாகம் செய்கிறோம். இதுதான் மிகவும் உயர்ந்த கடவுள் வழிபாடு/வணக்கமாகும். இது ஆவியோடு சேரும் சேவையாகும், நாம் திருப்பலிக்கு கூட இந்த அனுபவத்தை அறிய செல்லவேண்டியதில்லை. யேசுவோடு சேர்ந்து, நாமும் திவ்ய நற்கருணை ஆகிறோம்.

எரேமையா முதல் வாசகத்தில் செய்வது போல, நாம் கடவுளிடம் குற்றம் சொல்லலாம். நாம் எந்த தண்டனையும் இல்லாமல், நாம் அவரிடம் குறை சொல்லலாம். நாம் அவருக்காக எந்த இறைசேவையும் செய்ய மாட்டேன் என்று சொல்லலாம். ஆனால் அவரை பற்றி மற்றவர்களிடம் கூறுவது, என்பது பாவமாகும். இது வம்பளப்பது போன்றது ஆகும். தவறான எண்ணத்தை உண்டு பன்னகூடியது ஆகும். மேலும் கடவுளை தவறான பிம்பத்தில் பார்க்க தூண்டும்.

மற்றவர்களை நமக்காக வேண்டிக்க சொல்வது, மிகவும் முக்கியமானதாகும். இதனை நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும். மற்றவர்களிடம் குறை கூறுவது என்பது, நாம் கடவுளை மிகவும் குறைவாக விசுவசிக்கிறோம் என்பதாகும். நம்முடைய தியாகத்தால், பின் வரும் நாட்களில், நல்லதையே பார்ப்போம், நமக்கு நல்லதே நடக்கும். இதை தான், நாம் மற்றவர்களிடம் எடுத்து சொல்லவேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 22, 2008

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 24, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21வது ஞாயிறு

Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Rom 11:33-36
Matt 16:13-20
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 16

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். 15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். 16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.'பேதுரு' என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் 'பாறை' என்பது பொருள்.19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார். 20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

யேசு கிறிஸ்து புனித பீட்டரை/ராயப்பரை திருச்சபையின் தலைவராக ஆசிர்வதித்து,
"உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். எந்த தீங்கும் இந்த திருச்சபையை தீண்டாமலிருக்க தான் பார்த்து கொள்வதாக உறுதி கூறுகிறார்.

யேசு நரகம் இந்த திருச்சபையுடன் மோதி வெற்றி கொள்ளாது என்று கூறவில்லை. நன்றாக கவனியுங்கள், பாதாளத்தின் வாயில்/கதவுகள் வெற்றி கொள்ளாது என்று கூறுகிறார். கதவுகள் எதிலும் போரிடாது ஆனால், தன்னையும், உள்ளே இருப்பவர்களையும் காத்துகொள்ளும். யாரவது உனக்கு தெரிந்தவர்கள், அவர்கள் பாவத்தினால், சிறைக்குள் இருக்கிறார்களா? அல்லது தவறான சுற்று புறத்தினால் சிறைக்குள் இருக்கிறார்களா?

சாத்தானின் தாக்க்குதலுக்கு, கிறிஸ்தவர்கள் தற்காத்து கொண்டு இருக்க கூடாது. கிறிஸ்தவர்கள் திரும்பி தாக்க அழைக்கப்படுள்ளோம். நரகத்தின் கதவுகளை தாக்கி, அதனை கீழே விழச்செய்யவேண்டும், மேலும், மற்றவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லும், பேய்களை மிதித்து உங்கள் காலடிக்கு கீழ் கொண்டுவரவேண்டும்.

2000 வருடங்களுக்கு முன் யேசு எப்படி சாத்தானின் மீது வெற்றி கொண்டாரோ, அவ்வாறே நம் மூலமாக சாத்தானை வென்று வருகிறார்.

பாவிகள் தீமைகளிலிருந்து திருந்தி மீண்டு வரும் சாவியை, யேசு பேதுருவுக்கு கொடுத்தார், அவருக்கு திருச்சபையின் தலைவராக பட்டம் கொடுக்கும்போது கொடுத்தார். அவரே முதல் போப்பான்டவராக ஆனார். அந்த சாவி தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களின் போப்பானவர்களூக்கு தரப்படுகிறது. இந்த தொடர்பில், இதுவரை தொடர்பு அறுந்து விட வில்லை.

அந்த சாவிகள் எல்லாம் எது? சாத்தானின் கதவுகள் "அருட்சாதனங்கள்" மூலம் திறக்கபடுகிறது. அந்த அருட்சாதனங்கள் தான் மோட்சத்தின் வாயிலுக்கு திறவுகோலாக உள்ளன. பாவசங்கீர்த்தனத்தின் போது குருவானவர் அவர்களின் பாவங்களை மன்னிக்கும்போதும், குருவானவர் ஆனையும் பென்னையும் திருமணத்தில் இணைக்கும் போது, யேசுவே குருவானவர் மூலம் செய்கிறார்.

அருட்சாதனத்தின் தெய்வீக ஆற்றல், சாத்தானின் ஓவ்வொரு தாக்குதலையும் காலடியும் வீழ்த்திவிடும், ஆனால், நாம் ஒவ்வொரு அருட்சாதனத்தையும் அக்கறையுடன் நடத்திடல் வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 15, 2008

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 17, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20வது ஞாயிறு
Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Rom 11:13-15, 29-32
Matt 15:21-28

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 15

21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார். 23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர். 24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார். 25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார். 26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார். 27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார். 28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நாம் மற்றவர்களை எப்படி தீர்ப்பளிக்கிறோம், அவர்களை எப்படி கருத்து தெரிவிக்கிறோம். கானானியப் பெண்ணுக்கு இரண்டு விசயங்கள் பட்சபாதத்தை உண்டு பன்னுகிறது: ஒன்று அவர் ஓர் பெண், அடுத்தது அவர் இஸ்ரேயலர் அல்ல.
நிச்சயமாக, அகில உலகிற்கும் மெசியா யேசுதான், ஆனால், அதனை சீடர்கள் இன்னும் அறியவில்லை. அவர்களின் மனதை மாற்றவும் (நன்னுடையதையும்), யேசு அந்த பெண்மனி முழுமையாக அவளுடைய விசுவாசத்தை காட்டவேன்டும் என்பதற்காக காலம் தாழ்த்தினார். அந்த விசுவாசம் , அவருடைய மற்ற குறைகளை பின்னுக்கு தள்ளிவிடும்.

யேசுவை பொருத்தவரை, யாரெல்லாம் கடவுளரசில் சேருவதற்கு விரும்பாமல், வெளியே செல்கிறார்களோ, அவர்கள் வெளியாட்கள். மற்ற எல்லோருமே கடவுளின் அன்பு மக்கள் ஆவர். ஆனால், நாம் உடனே இந்த மாதிரியான எண்ணத்தோடு நினைப்பத்தில்லை. நமது திருச்சபையானது, பலவாறு தவறான தீர்ப்பளிக்கபட்ட மக்களை கொண்டுள்ளது. நிறைய பேர், நாம் இந்த திருச்சபையை விட்டு வெளியே இருக்கிறோம் என நினைக்கின்றனர். நாம் ஒருவர் மற்றவரை பற்றி மிகவும் சுலபமாக தவறான முடிவெடுத்து அப்படியே அவர்களை பற்றிய எண்ணங்களுடன் இருக்கிறோம்.

எடுத்து காட்டாக, எத்தனையோ பெற்றோர்கள், தனியாக உள்ளனர். நம்மில் எத்தனை பேர் அவர்களை கோவிலுக்கு அழைத்து செல்கிறோம். ஏன் அவர்களுக்கு கோவிலில் உள்ள பல சேவைகளையோ, அல்லது பங்கு வேலைகளில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர்கள் பங்கு வேலைகளில் ஈடுபடும்போது, அவர்கள் குழந்தைகளை நாம் ஏன் கவனித்துகொள்வதில்லை. ?
நீங்கள விவாகரத்து பெற்றவரா?, மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அதுவே உங்களை பற்றிய தவறான தீர்ப்பாகும்.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை, மிகவும் இரக்கத்தோடு நமது திருச்சபைக்கு அழைக்கவேண்டும். என்று சொல்லியபிறகும் ஏன் அவர்கள் கோவிலுக்கு வருவதில்லை.?

ஏன் சாதாரன பங்கு மக்கள், பங்கு குருவானவரோடு சேர்ந்து பனியாற்ற தடுக்கபடுகிறோம் என நினைக்கிறார்கள்.?

நமது திருச்சபையில், பல வேலைகள் இன்னும் செய்ய ஆளில்லாமல் இருக்கிறது, அது ஏனென்றால், நாம் நமது கிறிஸ்தவர்களை, சகோதரர்களை தவறாக எண்ணி, தவறான தீர்ப்பால், அவர்கள் அதனால், நமது திருச்சபையை விட்டு விலகியே நிற்கின்றனர். இந்த தவறான எண்ணங்கள், மற்றும் தீர்ப்புகள் விலக்கப்படுவதற்கான விளைவுகளை உண்டாக்குகிறது. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் இருந்து, இது மாதிரியான தவறான் அனுமானங்களுக்கும், தவறான நிந்தனைகளுக்கும், தீர்ப்புகளுக்கும், உடனே எதிர்வினை காட்டாமல், யேசுவின் ஆற்றலுக்கு நாம் அடிபனிந்து, அவரை மற்றவர்களுக்காக ஏற்று, கிறிஸ்துவை அவர்களுக்கும் கொடுத்திட வேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 8, 2008

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 10, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 19வது ஞாயிறு
1 Kgs 19:9a, 11-13a
Ps 85:8-14
Rom 9:1-5
Matt 14:22-33

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 14

22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். 23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர். 27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார். 28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார். 29 அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். 30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார். 31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார். 32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. 33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு ரொட்டி துண்டுகளையும், இரண்டு மீன்களையும், பல மடங்காக பெருக்கி, ஆயிரக்கணக்கானோர் உணவு கொடுத்த புதுமையை முடித்து விட்டு, சீடர்களை தனியே அனுப்பி விட்டு, தந்தையிடம் தனியே ஜெபிக்க ஒதுங்கி மலை மேல் சென்றார். கடவுளோடு சில நேரங்கள் செலவிட்டு, பிறகு தண்ணீரின் மேல் நடந்து, சீடர்களை நோக்கி வருகிறார்.

யேசு அடிக்கடி ஜெபம் செய்வதில், அதிக நேரம் செலவிட்டார். நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதை விட, அவர் அதிகமாகவே ஜெபங்களில் ஈடுபட்டார். ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? எப்படி, ஆக்கபூர்வமான விசுவாசத்தை அடைவது என்பதனை மத்தேயு நமக்கு காட்டுகிறார்.

நமக்கும், அடிக்கடி ஜெபம் செய்ய, தனிமையான இடம் தேவைபடுகிறது. அந்த ஜெபங்களின் மூலம், நம்முடைய ஆற்றலையும், யேசு நம் குடும்பங்களில் நம் மூலம் நம் குடும்பங்களில் என்ன செய்ய சொல்கிறார் என்பதனை நாம் புதுப்பித்து கொள்கிறோம். நமது ஆற்றலுக்கு புத்துணர்வு கொடுக்கிறோம். நமது வேலையிடத்தில், பொழ்து போக்கும் இடங்களிலும், பங்கு கோவிலிலும், நமது ஆற்றலை அதிகம் செலவிட ஜெபங்களின் மூலம் நாம் புத்துணர்வு பெறுகிறோம். பல ப்ரச்னைகளில் மீண்டு வரும் ஆற்றல் அனைத்தும் ஜெபங்களின் மூலம் கிடைக்கும். நாம் மற்றவர்களுக்காக நமது நேரத்தை,நமது பொருட்களை செலவிட்டு விடுகிறோம். நம்மிடம் மற்றவர்களுக்காக செலவானது எல்லாம், ஜெபங்களின் மூலம் கடவுள் மீண்டும் நிரப்புகிறார்.

நாம் ஜெபங்களின் மூலம், நமது வழிகளில் என்ன நேர்ந்தாலும் அதனை எதிர் நோக்கும் திறமையை, ஆற்றலையும் பெற்று, நம்மையே தயார்படுத்திகொள்ளவேண்டும்., நாம் கடவுளோடு தனியே சென்று அவரோடு ஜெபம் செய்யும் நேரங்களில், நாம் பெறும் அன்பளிப்பு, நமக்கு தேவையானதாகவும், நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதற்கு ஏற்றார்போல நமக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஜெபங்கள் நமது விசுவாசத்தை உறுதியாக்குகிறது. தண்ணீறில் எப்படி நடப்பது என்று நமக்கு கற்று கொடுக்கிறது. கடவுளின் உதவி தேவைபடும் மக்களிடம் நம்மை அழைத்து செல்கிறது. கடவுள் அவர்களுக்கு நம் மூலமாக சேவை செய்ய விரும்புகிறார். நீங்கள் அதற்கு தயாரா?

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 1, 2008

ஆகஸ்டு 3, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 3, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 18வது ஞாயிறு


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 14

13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். 14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார். 15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர். 16 இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். 17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள். 18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார். 19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். 21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி எனக்கு அதிக பசியையும், தாகத்தையும் தூண்டுகிறது! நாம் எல்லோரும் திருப்பலி முடிந்தவுடன், உணவருந்த செல்லலாமா?

இன்றைய பதிலுரையில் நாம் சொல்வது போல, "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன: தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்", இருந்தும், இந்த உண்மையை தெரிந்தும், நாம் நமக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என நாம் ஒரு போதும் நினைப்பதில்ல்லை. நம்மில் இருப்பவற்றில் நாம் திருப்தி அடைந்து விடுவதில்லை.

மேலும், நம்மில் எல்லா விசயங்களும், செயல்களும், நல்ல முறையில் அமைந்தால் கூட, நாம் முழு திருப்தியுடன் இருப்பதில்லை. நமக்கு இன்னும் தேவை அதிகமாகிறது. நாம் இன்னும் அதிகம் நேசிக்கப்படவேண்டும் என விரும்புகிறோம், இன்னும் அதிகம் நாம் கவணிக்கப்படவேண்டும் என கெஞ்சுகிறோம். நமக்கு தேவையான அங்கீகரிப்பும், உதவியும், நாம் எதிர்பார்ப்போரிடமிருந்து வரவில்லையெனில், நாம் அதிருப்திக்கு உள்ளாகிறோம். நமது துணிவு, தைரியம், எல்லாம், உடைந்து போகின்றன.

நமது வாழ்க்கையில் இணைந்துள்ள ஒவ்வொரு மனிதருக்கும், கடவுளின் அன்பை நமக்கு பகிர்ந்தளிக்கவும், நம் மேல் அக்கறையோடு இருக்கவும், பனிக்கபட்டுள்ளனர். ஆனால், யாரும் நம்மை முழுமையாக அன்பு செய்வதில்லை. மேலும், சிலர் இந்த பணியை, முழுதும் புறக்கணிக்கின்றனர். இதனால் தான், நாம் செயல்குழைந்து, அல்லது கோபத்துடன், அல்லது நம்மையே தனிமைபடுத்திகொண்டு, இருக்கிறோம். எனவே, நாம் எல்லாவற்றிர்காகவும் பசியோடு காத்திருக்கிறோம், ஏங்குகிறோம்.

குறையுள்ள மனிதர்களை நாம் மன்னித்து, யேசுவை நோக்கி வேண்டினால், அவர் மிகவும் சிறியதையும், பல மடங்காக பெருக்கி கொடுப்பார்.

அதிருப்தியுடன் இருப்பது, யேசு நமக்கு கொடுக்கும், ஒரு சைகை மூலம் காட்டும் அடையாளம் போல, அந்த அடையாளத்தின் மூலம், நாம் யேசுவை நோக்கி செல்லவேண்டும் எனபதே அதன் அர்த்தம். அந்த அடையாளம்: யேசு என்னவோடு நம்க்கு கொடுக்க விரும்புகிறார். அது என்ன? ஆனால், நாம் அதனை வாங்கிகொள்ள நாம் இன்னும் தயாராக இல்லை. மேலும், அதனை யேசு எப்படி நமக்கு கொடுக்க போகிறார். நாம் அவரை நேரடியாக பார்க்கவில்லை, அவர் நம்மை தொடுகின்ற உணர்வு இல்லை என்ற கேள்வியோடு இருக்கின்றோம்.

நமக்கு கண்களுக்கு தெரியாத கடவுளோடு, எப்படி திருப்தி அடைவது என்றால், நாம் அவரோடு சேர்ந்து இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஜெபத்தில் அதிகம் ஈடுபடவேண்டும். கடவுள் நம்க்கு கொடுத்துள்ள கிறிஸ்துவ சமூக குழுவோடு இணைந்து செயல்படவேண்டும். கடவுள் என்ன செய்கிறார், அவர் யார் மூலம அதனை செய்ய முற்படுகிறார் என தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் முயற்சிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்ன வென்றால், மேலும், மேலும் இதில் நாம் ஈடுபடவேண்டும், மற்றும், எதிர்பார்க்க முடியாத விசயத்தை எதிர்பார்த்து இருத்தல் வேண்டும்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 25, 2008

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 27 2008, ஞாயிறு நற்செய்தி, மறையுரை:
ஆண்டின் 17வது ஞாயிறு


1 Kings 3:5, 7-12
Ps 119:57, 72, 76-77, 127-130
Rom 8:28-30
Matt 13:44-52

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். 46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். 47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். 48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். 49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; 50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். ' 51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள். 52 பின்பு அவர், ' ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவு+லத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், யேசு வின்னக அரசு மறைந்திருக்கும் புதையலையும், விலையுயர்ந்த முத்தையும், வலை நிறைந்த மீன்களில், நல்லதை எடுத்து கொண்டு, கெட்டவற்றை வெளியே எறியப்படுவதை போல பல உதாரணங்களில் காட்டுகிறார்.

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், நமது கிறிஸ்துவ வாழ்வு விலை உயர்ந்த அதிக மதிப்பு மிக்க பொருட்களோடு சேர்ந்து உள்ளது. அதில் சிலபொருட்கள் மதிப்பில்லாதது, தூக்கி எறியபடவேண்டியது. சில பொருட்கள் தற்காலிகமானது, இந்த உலகோடு சம்பத்தப்பட்டது. இவையெல்லாமே கடவுளரசிற்கு உபயோகப்படவில்லையெனில், அவையெல்லாமே வீனான பொருட்களாகும்.

இன்றைய வாசகத்தில், உரோமையர் எழுதிய திருமுகத்தில், அனைத்துமே கடவுளை அன்பு செய்பவர்களுக்காக ஒன்றினைந்து செயல்படுகிறது என்கிறார். நமது வாழ்க்கையில் உள்ள தீமைகளை ஒழித்து, இறந்த மீன்களை தூக்கி எறிந்தால், நாம் கடவுளை போல மாறுகிறோம். நாம் இரட்சிக்கபட்டுவிட்டோம். நாம் கடவுளரசிற்கு உபயோகமாக உள்ளோம். நமக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் கூட, எல்லாவற்றையும் படைத்த, எல்லாம் வல்ல இறைவனின் மேற்பார்வையில், அவரது அரசின் கீழ், நாம் அதனை நல்ல விசயத்திற்கு உபயோகித்தால், அது முத்தை போல ப்ரகாசமாகும்.


இன்றைய முதல் வாசகத்தில், சாலமன், இறைவனிடம் அதிக சொத்துக்களை கேட்டிருக்கலாம், கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், புரிந்து கொள்ளக்கூடிய மனதையும், அதன் மூலம் அவர் ஞானம் பெற்று, நாட்டினை அவர் நல்ல முறையில் ஆட்சி செய்யலாம் என்று கேட்டார். அதன் பிறகு, அவர் சில தவறுகள் அவரது ஆட்சியில் செய்து இருந்தாலும், அகில உலகமும், அவர் நல்ல அறிவாளியான அரசர் என்று போற்றியது, அதன் மூலம், பல செல்வஙகளை சேர்த்தார்.


இந்த கதையின் மூலம், நமக்கு என்ன சொல்லபடுகிறது என்றால், நாம் எப்போதுமே, முதலில் கடவுளின் செல்வங்களை பெறுதல் வேண்டும், பிறகு, இந்த உலகின் செல்வங்களை நாம் உபயோகிக்கலாம். ஏனெனில், கடவுளின் ஞானம் நாம் இந்த உலக செல்வங்களை மற்றவர்களின் பயனுள்ளதாக எப்படி உபயோகிக்கலாம் என வழிகாட்டும். நாம் எவ்வளவு அதிகமாக கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போதுதான், நமக்கு உண்மையான செல்வம் எது என நம்மால் கண்டுபிடிக்க முடியும், எது வீனான செல்வங்கள், கடவுளுக்கு தேவையில்லாத செல்வம் எது என்று அறிந்து அதனை தூக்கி எறிய முடியும். மேலும் நம்மிடம் உள்ள எல்லா செல்வங்களையும், கடவுளின் உபயோகத்திற்காக, அவரது பயன்பாட்டிற்காக செலவிட முடியும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 18, 2008

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஆண்டின் 16வது ஞாயிறு

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். 25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. 27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். 28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள். 29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். 30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். ' 31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. 32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். 33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். ' 34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. 36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர். 37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; 38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; 39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். 40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். 41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; 42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். 43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

(thanks to www.arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கத்தோலிக்க மதமாற்றத்திற்கும், மணம் மாற்றுதலுக்குமான முறைபடிவங்களை "சீடர்களை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர். இது மூன்று நோக்கங்களை அல்லது மூன்று வாக்கியங்களை கொண்ட்டதாகும். (1) உனது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திட வேண்டும். (2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல் (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வில் வாழ்ந்து சமூக மாற்றத்திற்கு உறுதுணையாய் இருத்தால். இன்றைய நற்செய்தியிலும், யேசு, உவமைகள் மூலமாக மத/மண மாற்றத்திற்கான மூன்று நோக்கங்களையும் கூறுகிறார்.

(1)நமது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திடல்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே இருக்கும் நல்ல கோதுமைகள். அந்த களைகள் உங்களுடைய பரிசுத்த வாழ்விலிருந்து பாவ வாழ்விற்கு இட்டு செல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அவநம்பிக்கை உடையோரிடமும், தீயோஒரிடமும், இடையே வாழும் நீங்கள், உங்கள் விசுவாச வாழ்வு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது? இந்த பயன்கள் கிடைக்க பல முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் தினமும் முயற்சி செய்து, பரிசுத்த வாழ்வில் வளர்ந்திடாமல் இருந்தால், களைகள் நம்மை மூழ்கடித்து அது வளர்ந்து விடும்.

(2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல்: கடவுளரசில், நாமெல்லாம், கடுகு போன்ற சிறு விதையாகும். அது புல்வெளிக்குள் வளர்ந்து பெரிய மரமாக தழைத்து, பலர் அதில் இளைப்பாறி, பல பயன்களை பெறுவர். உனது விசுவாசத்தின் மூலம் யார் பயன் பெறுகிறார்கள்? உனது பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி மற்றவர்களை யேசுவோடு வாழ எப்படி அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து, உங்கள் அனுபவித்திலிருந்து, அவர்களை அழைக்க விரும்பினால், அவர் முழு ஆதரவையும் கொடுத்து ஊக்குவிப்பார்.

(3) சமூகத்தை மாற்றுங்கள்: வின்னகரசில், நாமெல்லாம், புளிப்புமாவிற்கு ஒப்ப்பாவோம். அந்த புளிப்பு மாவும், எப்படி எல்லா மாவையும் புளிப்பாக்கி நல்ல ப்ரெட் உருவாக காரணமாகிறதோ அதே போல், மற்றவர்கள் இறைவனோடு இணைக்க வைக்கும் புளிப்பு மாவு ஆவோம். நீ கிறிஸ்தவனாக இந்த உலகை முன்னேற்ற என்ன காரியங்களில் ஈடுபடுகிறாய்? உனது பரிசுத்த வாழ்வு, உங்கள் வேலையிடத்தில், உங்கள் சமூக குழுவில், உனது பங்கில், எந்த மாதிரியான வித்தியாசத்தை காட்டுகிறது? ஒவ்வொரு திருப்பலியிலும், கிறிஸ்துவின் உடலை நாம் வாங்கும்போது, நீ யேசுவின் உடலாக இந்த உலகத்திற்கு பல நல்ல விசயங்களை வளர்த்திட, உனக்கு அதிகாரம் வழங்கபடுகிறது.

http://www.paulist.org/main/whoare.htm.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm