Monday, April 9, 2007

மறையுரை april 10th

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

11 மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். 12 அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். 13 அவர்கள் மரியாவிடம், ' அம்மா, ஏன் அழுகிறீர்? ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை ' என்றார். 14 இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. 15 இயேசு அவரிடம், ' ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? ' என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், ' ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன் ' என்றார். 16 இயேசு அவரிடம், ' மரியா ' என்றார். மரியா திரும்பிப் பார்த்து, ' ரபு+னி ' என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ' போதகரே ' என்பது பொருள். 17 இயேசு அவரிடம், ' என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ' என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் ' எனச் சொல் ' என்றார். 18 மகதலா மரியா சீடரிடம் சென்று, ' நான் ஆண்டவரைக் கண்டேன் ' என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.



மறையுரை:

மோட்சத்திலிருத்திற்கு, பூமியில் அடியெடுத்து வை:

ஏன் யேசு கிறிஸ்து மரிய மகதாலேனை அவரை பற்றிகொண்டிருக்க வேண்டாம் என்று இன்றைய நற்செய்தியில் கூறினார்? அவர் அணைத்து கொள்வதற்கு எதிர்ப்பாளரா? உன்னை அவர் அனைத்து கொள்ள வேண்டும் என நீ விரும்பவில்லை. எப்படி மேரி யேசுவை அனைப்பதால், அவர் மோட்சத்திற்கு எழுந்து தடுக்கப் போகிறதா?

ஜெருசலேத்தில் உள்ள மேரி மகதாலேன் ஆலயத்தில், ஒரு வெண்கல சிலை உள்ளது. அச்சிலுவையில், இந்த நற்செய்தி பதிக்கப்பட்டுள்ளது. யேசு, மேரியின் நன்பர் சாவிலிருந்து உயிர்த்து எழுட்ந்துவிட்டார் என்றறிந்து மேரி முழு சந்தோசத்துடன் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. யேசுவின் ஒரு கை மேரியை நிறுத்த சொல்வது போல் இருக்கிறது. இன்னோரு கை, மோட்சத்தை நோக்கி காண்பிக்கிறது. மேலும் அவருடைய பார்வை, அவருடைய மேலோங்கிய கையை போல் மேல் நோக்கி இருக்கிறது. மேலும், "அங்கே மோட்சத்தை நோக்கி பார், பூமியை பற்றிலான விசயங்கள், ஒன்றுமில்லை" என சொல்வது போல் இருக்கிறது.

மேரியின் தலை மேல் நோக்கி இருக்கிறது. மேரியின் பார்வை யேசு அங்கே பார்க்கிறாரோ அங்கே போக விரும்புவது போல் இருக்கிறது. ஆனால் அவருடைய கண்ணோ மோட்சத்திற்கும், பூமிக்கும் நடுவில் இருக்கிறது. அவளுடைய ஒரு கை யேசுவை தொட விரும்புவது போல் இருக்கிறது, மற்றொரு கையோ அவள் நெஞ்சை தொட்டு இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்றால், அவர் மோட்சத்திற்கு சென்ற பின்பு இந்த நெஞ்சில் தான் வருவார், வசிப்பார் என்பது போல் இருக்கிறது. நீங்கள் இந்த போட்டோவை gnm.org/faithbuilders/marymagdalene.htm என்ற லிங்கிலிருந்து தருவிக்கலாம்.


நீ எப்போதவது, யேசுவின் உடலை தொட வேண்டும் என்று விரும்பியிருக்கிறாயா? யேசு உனக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறார். "தற்காலிகமான், சிற்து நேரத்தில் முடியும் இது போன்ற அனுபவத்தை விட, மோட்சத்தின் ஆசிர்வாதத்திற்காக நாம் முழு நேரமும் செல்விடுவது மேல்" என்கிறார். யேசு நம்மை அரவணைக்கிறார், மற்ற மக்களின் மூலம் நாம் பெறும் ஒவ்வொரு அரவணைப்பும், அவருடையது தான். ஆனால், உடலோடு ஏற்படும் எந்த ஒரு தொடுதலும், சிற்து நேரத்திற்கு தான், அது எப்போதும் போதுமானதாக இல்லை. அதனால் தன் யேசு மேரியிடம், "என்னை அரவணைக்காதே " என்று கூறாமல், "என்னை பற்றிக்கொண்டிருக்க வேண்டாம்" என்று கூறினார்.

நித்திய இளைப்பாற்றியை அடைய, நாம் இந்த பூமியோடு பற்றி கொண்டிருக்கும் விசயஙகளை விட்டு விட வேண்டும். புனிதர்கள் அவர்கள் ஜெப நேரத்தில், மேலே எழுந்து விடுவார்கள், ஏனெனில் அவர்களின் உடல், இந்த பூமியின் மீது எந்தவொரு பற்றுதலும் இல்லை. அவர்களின் இறைவனுடன் உள்ள தொடர்பு, கடவுளை பார்க்கா விட்டாலும், அவர்கள் பார்க்க்க முடிந்த உலக தொடர்புகளை விட மிகவும் உறுதியானது.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, நம்முடைய தந்தையை நோக்கி எழுந்தருளச் செய்கிறார். எந்த பற்றுதல், உனக்கு இடையூறு செய்கிறது.? சில நேரங்களில், தந்தை கடவுள், நம் தந்தையர்களை போல, குறைபாடுகள் உள்ளவர் என்று நினைத்துகொள்கிறோம். ஒரு வேளை, நாம் கடவுளின் விருப்பங்களை விட, நம் விருப்பங்கள், நம் எண்ணங்கள், நம் நோக்கங்கள், நமக்கு தேவையானவைகளையும் சார்ந்து இருக்கிறோம்.
நாம் பூமியின் மீது உள்ள பற்றினால், மற்றவர்களுக்கு தியாகம் செய்யாமல் இருக்கிறோமோ? நம்மின் பாதுகாப்பான வட்டாரத்தை விட்டு வெளியே வராமல், நமக்கு பழக்கப்பட்ட வட்டாரத்திற்குள் இருக்க விரும்புகிறோமா? நாம் பழைய பழக்க வழக்கங்களை விட முடியாமல் அல்லது ஏதாவது ஒரு விசயத்தில் அடிமையாக இருக்கிறோமோ?

மீட்பின் வாழ்வு என்பது, நாம் யேசுவை விட்டு, அவரால் நம் சாவிலிருந்தும்,நிரந்தரமற்ற பூமியின் தேவையை விட்டு எழ செய்து, நிரந்தரமான மோட்சத்தின் சந்தோசத்தை அடைய செய்ய வேண்டும். நாம் பூமியில் இருக்கும் போதே, நாம் யேசுவின் உடலை தொட வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம்முடைய ஆவி மோட்சத்தை நோக்கி இருக்க வேண்டும் என நம்மை அழைக்கிறார்.நாம் நமக்கு பூமியில் தேவையானவை இல்லை, ஆனால், மோட்சத்தில் அது இருக்கிறது என்று நினைக்கும் போது, நாம் ஆண்டவரை நோக்கி செல்கிறோம்.

© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

1 comment:

தென்றல் said...

நன்றி!

பல நல்ல இணைதளங்களையும் அறிமுகப்படுத்தலாமே?

http://www.arulosai.org - இணைதளத்திற்கு சென்றதுண்டா? நான் விரும்பி பார்க்கும் இணைதளம்.